Monday, December 12, 2011

அச்சம் தவிர்

”காக்கை சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் இருந்த பொழுது வைகறை அய்யா “ஸ்டேட்ஸ் மேன்” பத்திரிக்கையின் சிறப்பு நிரூபர் ராதிகா கிரி அவர்களது கட்டுரை ஒன்றைக் கொடுத்து, இதை உடனே தமிழ்ப் படுத்தித் தாருங்கள் என்றார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள பத்திரிக்கையாளர்கள் எப்படி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே திட்டத்தில், ஒரே குரலில், முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு அச்சத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கிறார்கள் என்பதை தொட்டு நீள்கிறது அவரது கட்டுரை.

மலையாளிகள் எங்கு இருக்கும் போதும் மலையாளிகளாகவே செயலாற்றுவதில் திட்டமிட்டு வெற்றி பெற்றுவிடுகிறாகள் என்பதையும் அவரது கட்டுரை சொல்கிறது. இதில் கோவம் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும், கற்றுக் கொள்ளவே நமக்கு இதில் இருக்கிறது என்றுமே உணர்ந்தேன்.

மலையாளப் பத்திக்கையாளர்கள் மலையாளப் பத்திரிக்கை உலகில் மண், மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய அடிப்படையில் தன் இனம் சார்ந்த உணர்வோடு செயல்படுவதில் பிழை இல்லை. ஆனால் சென்னையில் இருக்கும் ஆங்கில அச்சு ஊடகத்தில், பணி புரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதே உணர்வோடு பணியாற்றுவது என்பது ஆபத்தாந்தல்லவா? என்று ஆதங்கப் படுகிறார்.

ஆமாம், மலையாள மண் சார்ந்து மலையாள ஊடகத்தில் கொண்டு போவது ஏற்படுத்தும் விளைவுகள் அந்தப் பிராந்தியத்தில் மட்டுமே அதிர்வுகளை ஏற்படுத்தி அவர்களை உசுப்பும். ஆனால் அதுவே ஆங்கில ஊடகத்தில் எனில் அது தேசம் முழுமையும் ஊடுறுவி அவர்களது செயலில் நியாயம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். இது ஆபத்தானது என்கிற வகையில் நாம் இது குறித்து கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.

அவர்கள் தொடர்ந்து ஆங்கில இதழ்களிலும் “முல்லப் பெரியாறு” என்றே எழுதுவதையும் அவர் குறிப்பிடுகிறார்.

அதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் சென்னை இந்து கூட “முல்லப் பெரியாறு” என்றுதானே எழுதுகிறது என்று அவர் கேட்பதில் இருக்கிற நியாயத்தை உணரத் தவறினால் இன்னும் விழவே விழுவோம்.

சரி ஆங்கில ஊடகத்தில் பணியற்றும் தமிழ் எழுத்தாளர்களே இல்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விக்கும் இவர்கள் எதுவும் சுயமாய் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்.

தற்போது கேரள அரசுக்கு ஆலோசகராக இருக்கும் பரமேஸ்வரன் நாயர் எழுபதுகளில் கேரள மிசாரத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த பொழுது ஒரு முறை அப்போது கேரள காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. கருணாகரனிடம் சொன்னாராம், “அணையின் நீர் வரத்தை குறைக்க தமிழக முதல்வரிடம் பேசுங்கள். அதை விட முக்கியமாய் அதற்கு முன்னர் அணை குறித்த ஒரு அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்திவிட வேண்டும்”

மலையாள மனரோமா உள்ளிட்ட பத்திரிக்கைகள் அந்த வேலையை கச்சிதமாக செய்து தர அன்றைய தமிழக முதல்வரை அதன் பிறகு அணுகினார்கள் என்றும், அதன் விளைவே 152 அடி 136 அடியானது என்றும் அவரது கட்டுரையில் இருந்து அறிய முடிகிறது.

தெரிதவர்கள் அருள் கூர்ந்து பேசுங்கள் இது குறித்து தனியாய் எழுத உதவும்

2 comments:

  1. எட்வின் அவர்களே! கெரளமாநிலத்தின் மிகப் பெரிய ஆறு பெரியார் .மெற்கு மலையில் சிவகிரி ரெஞ்சில் உற்பத்தியாகி 244கி.மீ பாய்ந்து அரபிக்கடலில் சங்கமமாகிறது. முல்லையார் என்பது பெரியாரின் கிளைநதி. இரண்டும் செரும் இடத்தில் அணைகட்டி வீணாக அரபிக்கடலில் செரும் நீரை கிழக்குப்பக்கமாகத்திருப்பி மதுரை,ராமனாதபுரம் மாவட்டங்களுக்கு பாசன் வசதி செய்யதிட்டாமிட்டார்கள். ப்ரிட்டிஷ் ஆட்சியில் கேரள அரசர்கள் எதுவும் பெசமுடியாமல் கொடுத்தார்கள்.இந்தியா சுதந்திரம் பெற்றதும் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.---காஸ்யபன் .

    ReplyDelete
  2. எப்படியெல்லாம் சிந்தனை செல்கிறது என்பது இக்கட்டுரையிலிருந்து தெரிகிறது. சென்னை ஹிந்து பத்திரிகை மட்டுமல்ல, அனைத்து ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களிலுமே முல்லப் பெரியார் என்றுதான் எழுதுகிறார்கள். இதைப் பெரிது படுத்துவது “ எதையோ ஊதிப் பெரிதாக்குவது “என்னும் பழமொழியை நினைவுபடுத்துகிறது. ஒரு பிரச்சினையை பிரச்சினையாகவே அணுக வேண்டும். மலையாளி தமிழன் என்று பகை வளர்க்கும் விதத்தில் நினைக்கக் கூடாது, பேசக்கூடாது, எழுதக் கூடாது. மேலும் அவர் சொன்னாராம் இவர் செய்தாராம் என்னும் ரீதியில் முடிவுக்கும் வரக் கூடாது. அவரவர் பயம் அவரவருக்கு. உணர்ச்சி வசப்பட்டு யாரையும் குறை கூற வேண்டாம். முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழுப்பக்க விவரங்களைப் படித்தேன். இம்மாதிரியான விளக்கங்கள் தமிழ் மலையாளப் பத்திரிகைகளிலும் வரவேண்டும். மாறாக பீதியூட்டியோ, உரிமை பறிபோகிறது என்று கூவியோ செயல் படல் தவறு என்றே தோன்றுகிறது.எண்ணங்களைப் பகிர ஒரு வாய்ப்பாகவே இக்கருத்து இடப்பட்டது. நடப்பவை நல்லவையாக இருக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...