Monday, August 5, 2019

மௌனமாய் எதையும் மென்று செறிப்போம்

இன்றைய செய்தித் தாள்களில் இரண்டு செய்திகள் முக்கியமானவை
1) பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பயிற்சிகள் தொடர்பான கருத்தரங்கில் நமது தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்களின் உரை
2) மத்திய கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில்
"பேரிடரை எதிர்கொள்வதற்காக மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு உதவிகள் வருவதில்லை"
என்கிறார் தலைமைச் செயலாளர்
2017--2018 நிதியாண்டில்
எஸ்சி, எஸ்டி, மற்றும் பழங்குடி இன மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக மத்திய அரசு அனுப்பிய தொகையில் 2394 கோடி ரூபாயையும்,
100 நாள் வேலைத் திட்டத்திற்காக அனுப்பியதில் 248 கோடி ரூபாயையும்,
இதுபோல பல நலத்திட்டங்களுக்காக வழங்கிய 5920 கோடியில் 3077 கோடியை
செலவு செய்யாமல் தமிழக அரசு திருப்பிவிட்டதாக
மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது
மாநிலத் தலைமைச் செயலாளர் கூறுவதும் உண்மை
மத்திய கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை கூறுவதும் உண்மைதான்
இவர்கள் கேட்டால் அவர்கள் தரமாட்டார்கள்
அவர்கள் அனுப்பினால் இவர்கள் திருப்பி அனுப்புவார்கள்
நாமும் மௌனமாய் எதையும் மென்று செறிப்போம்
#சாமங்கவிய ஒருமணி இருபத்தி ஐந்து நிமிடம்
04.08.2019

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...