லேபில்

Wednesday, August 7, 2019

ஜனங்களோடு ஒன்றித்தால் தவிர...

திருவாளர்கள் டி.ஆர்.பாலு, வைகோ போன்றோரின் காஷ்மீர் மசோதாவிற்கெதிரான அவைக் களமாடலை பார்க்க வாய்த்தது
இன்னும் யார்யார் பங்குபெற்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை
தோழர் வை.கோ வின் உரை சிலிர்க்க வைத்தது
அவர்களுக்கென் வணக்கமும் நன்றியும்
இத்தகைய எதிர்வினை அவைப்பதிவுகள் அவசியம்
அவர்களதை இன்னும் வீரியத்தோடு செய்ய வேண்டும்
ஆனால் அவர்களது அவைக்குள்ளான எதிர்வினைகள் பாஜகவின் முரட்டு அட்டூழியங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது
காரணம் உறுப்பினர்களின் எண்ணிக்கை விளையாட்டு முழுக்க முழுக்க அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது
இனி அவையை மட்டும் நம்ப இயலாது
ஆதரவு இயக்கங்கள் தங்களது ஊழியர்களையும் பொதுமக்களையும் தெருவிற்கு கொண்டு வரவேண்டும்
ஜனங்களோடு கலந்து கரைந்து அவர்களோடு ஒன்றித்தால் தவிர
அழிந்து போவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023