Saturday, August 3, 2019

எங்கள் கீர்த்தனாவே இறுதியாக இருக்கட்டும்.


கீர்த்தனாவின் மரணச் செய்தியோடு “நீட்டை விலக்கிக் கொள்ளும் மசோதாவை  மீண்டும் சட்ட சபையிலே நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறித்தியிருக்கிற செய்தியும் சேர்த்தே செய்தித்தாள்களில் வந்திருக்கிறது

மீண்டும் சட்டசபையிலே நிறைவேற்றி அனுப்புமாறு என்றால்,

2017 ஆம் ஆண்டே அப்படி இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோமே அது என்ன ஆயிற்று?

இந்தக் கேள்வியை தீர்மானங்களை அனுப்பிய கொஞ்ச நாட்களில் இருந்தே கேட்கத் தொடங்கி விட்டோம்

மாநில அமைச்சர்கள் ஒன்றைக் கூறுவார்கள்

மத்திய அமைச்சர்கள் வேறொன்றைக் கூறுவார்கள்

கேட்பதைத் தவிர உங்களால் என்ன கிழித்துவிட முடியும் என்ற எள்ளல் அவர்களது பார்வையில் கசியும்

எத்தனைக் குழந்தைகளைத் தின்றபிறகும் பசி அடங்காத நீட் தனது கோர நாக்கினை எம் பிள்ளைகளைகளை நோக்கி நீட்டியபடியே இருந்தது

வேறு வழியே இன்றி,

தமிழ்நாடு  மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கமும் தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் தீர்மானம் என்ன ஆயிற்று என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்

மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் கேட்டது

அப்போது,

22.10.2017 அன்றே குடியரசுத்தலைவர் அந்த தீர்மானங்களைத் திருப்பி அனுப்பி விட்டதாகவும் கிடைத்ததற்கான ஒப்புதலை 25.10.2017 அன்று தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளதாகவும் மத்திய அரசு உயர்நீதி மன்றத்திற்கு தெரிவித்தது

ஏன் நிராகரித்தார் என்பதை ஏன் மாண்பமை குடியரசுத் தலைவர் கூறவில்லை. அதைக் கூறவேண்டிய கடமை அவருக்கிருக்கிறது என்று வழக்கறிஞர் விடுதலை கேட்டிருக்கிறார்

அதற்கான காரணங்களைக் கேட்டிருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது

எனவே அதைக் கேட்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்திற்கு இல்லை

நீதியரசர்கள் மரியாதைக்குரிய மணிக்குமார் அவர்களும் சுப்பிரமணிய பிரசாத் அவர்களும் மீண்டும் ஒருமுறை அவையைக் கூட்டி நீட்டில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாமே என்ற ஆலோசனையைக் கூறியிருக்கிறார்கள்

என் அன்பிற்குரியவர்களே,

இன்று நீட்டின் கோர நாக்கு எங்கள் பிள்ளை கீர்த்தனாவை சுருட்டி தின்று ஏப்பம் விட்டிருக்கிறது

குடியரசுத் தலைவரால் ஏன் அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது என்று  
நமக்கு கூறவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது

உரத்துக் கேட்பாம்

மீண்டும்கூட தீர்மானம் போடச் சொல்வோம்

இன்னும் கூர்மையாக

இன்னும் விரிவாக

போராட்டத்தைக் கை எடுப்போம்

எங்கள் கீர்த்தனா இறுதியாக இருக்கட்டும்















No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...