Tuesday, November 18, 2014

குட்டிப் பதிவு 11

தங்களது காத்திரமான பதிவுகளால் என் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பவர்களுள் முகநூல் தோழர் சியாமளா ஷேக்ஸ்பியர் அவர்களும் ஒருவர்.
கிறிஸ்தவராக இருந்துகொண்டே அந்த மதத்தை விமர்சிக்கும் அவரை கூடுதல் மரியாதையோடுதான் நான் பார்க்கிறேன்.
தனக்கு தனது தந்தை தமிழ்ப் பெயரை வைக்காமல் தனது மருத்துவக் கல்லூரி தோழியான சியாமளாவின் பெயரை வைத்ததில் ஏற்படும் சிக்கல்களை அவர் எழுதி இருந்தார்.
இதில் பிழை எதுவும் இல்லை என்றும் தமிழைப் புழங்குவதே இன்றையத் தேவை என்றும் அவருக்கு பின்னூட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இந்தப் பதிவு வேறு காரணங்களுக்கானது.
பிடித்த தலைவர்களின், படைப்பாளிகளின், நடிக நடிகைகளின், தெய்வங்களின் பெயர்களை தங்களது குழந்தைகளுக்கு வைப்பது வாடிக்கை. ஆனால் தங்களது தோழர்களின் பெயரை வைப்பது அபூர்வம். எனக்குத் தெரிய எனத நண்பர் செல்வ பாண்டியன் அவர்கள் தனது ஒரு மகனுக்கு தனது வகுப்புத் தோழனின் பெயரான செழியன் என்பதை வைத்துள்ளார். அதற்காகவே அவரை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாராட்டுவேன். தோழமையை இவ்வளவு உயர்வாக மதிக்கும் அவரை இன்னும் பாராட்ட வேண்டும் என்று கருதுவேன்.
தோழருக்கு சியாமளா என்று பெயர் வைத்ததற்காகவே அவரது தந்தையை நான் தொடர்ந்து மதித்து பாராட்ட கடமை பட்டிருக்கிறேன். அதிலும் செல்வ பாண்டியனாவது தனது தோழனின் பெயரை வைத்திருக்கிறார். இவரோ தனது கல்லூரித் தோழியின் பெயரை தனது மகளுக்கு வைத்ததோடு அதை தெரியப் படுத்தவும் செய்திருக்கிறார். இது பேரதிக மரியாதைக்குரியது. நான் அறிந்து தோழமையை அழகோடும் நெகிழ்வோடும் கௌரவப் படுத்தியிருக்கிறார் தோழரின் தந்தை அவர்கள்.
சங்கடமே வேண்டாம் சியாமளா தோழர். உங்கள் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு கனமும் எனக்குள் பெருமிதம் சுரக்கும்.

6 comments:

  1. இக்காலத்தில், இப்படியும் ஒரு நட்பா
    மனதினில் பெருமை பொங்குகிறது ஐயா
    சியாமளாவின் தந்தை போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம் பாராட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர்.
      சியாமளாவும் போற்றுதலுக்குரியவரே

      Delete
  2. நட்பின் இலக்கணம் இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  3. எனது பெயர் குறித்ததான என் வருத்தத்தை தங்கள் பதிவினைப் பார்த்த பிறகு மாற்றிக் கொண்டேன்..தோழிக்கு என் தந்தை கொடுத்த சிறப்பினையும் புரிந்து கொண்டேன்...

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஷியாமளா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...