Tuesday, November 18, 2014

தேர்வல்ல.... மதிப்பீடே தேவை

” புதிய தலைமுறை கல்வி” இதழில் வந்திருக்கும் எட்டாம் வகுப்பு வரைக்கும் கட்டாயத் தேர்வு அவசியமா? என்பது குறித்த எனது கருத்துக்களின் முழுப்பகுதி
**********************************************************************************
”பேரெழுதத் தெரியாதது, அனா ஆவன்னா தெரியாததையெல்லாம் எட்டாம் வகுப்பு வரைக்கும் பாஸ் போட்டுட்டு இப்ப 100 விழுக்காடு ஏன் தரலைனா எங்க போயி முட்டிக்கிறது? எப்படி தருவது?” என்பது மாதிரியான பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் புலம்பலில் உள்ள நியாயத்தை ஒரு சக ஆசிரியனான என்னால் உணர முடிகிறது.
நல்ல தேர்வும் முழுமையான வடிகட்டலும் அவசியம்தானா? என்று கேட்டால் நல்ல தேர்வு அவசியம்தான் ஆனால் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரைக்குமேனும் வடிகட்டுதல் கூடாது என்பதே நமது பதில்.
யுனெஸ்கோவின் கல்வி அறிக்கை ஒன்று, “The purpose of education is to include the excluded” என்று சொல்கிறது. மதிப்பெண்களும், தேர்ச்சியும் மட்டுமல்ல, யாரையும் விடுபடாமல் பள்ளியில் அமரவைப்பதே கல்வியின் நோக்கம் என்று இதை தமிழ்ப்படுத்தலாம்.
பொதுவாகவே ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறாத குழந்தைகளில் 60% பேர் அதற்கு மேல் கல்வியைத் தொடர்வதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் தெருக்களில் சுற்றித் திரிவதும், சன்னம் சன்னமாக தீயப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு சமூகவிரோதிகளாகவும் மாறிப் போகிறார்கள்.
பள்ளி என்பது மொழிகளையும், சில பாடங்களையும் மட்டும் கற்றுத்தரும் இடம் அல்ல. தன்னம்பிக்கையை, நல்ல ஒழுக்கத்தை, அடுத்தவன் துயர் கண்டு துயருறும் மனிதத்தை, சாதி மிதித்தலை, மண்ணின், தாய்மொழியின் தொண்மத்தை போற்றிக் காக்கவேண்டிய கடப்பாட்டினை, பெண்மையைப் போற்றச் செய்வதில், வயதான காலத்தில் பெற்றோரை காப்பாற்றுவதில் அந்தக் குழந்தையை செதுக்கித் தரவேண்டிய பட்டறைதான் பள்ளி.
குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் பெறாத ஒரு குழந்தையை தேர்ச்சி பெறாதவனாக அறிவிப்பது என்பது அவனுக்கு வழங்க வேண்டிய மற்றவற்றைத் தர மறுக்கிற, அவனை மனிதப்படுத்துகிற கடமையிலிருந்து நழுவிப் போகிற வன்முறையே ஆகும்.
இந்த மாணவர்களை வைத்துக் கொண்டு எப்படி தேர்ச்சி விழுக்காட்டைத் தருவது? இங்குதான் ஆசிரியப் பணி அறப்பணி என்பது பொருந்துகிறது. இந்தக் குழந்தையும் தேர்ச்சிபெறப் போராடுவோம்.
இன்னொருபுறம் வறட்டுத் தனமான தேர்ச்சிவிழுக்காடு உதவாதென்பதை கல்வித்துறைக்கும் அரசுக்கும் எடுத்துச் சொல்வோம். தேவைப் படுமெனில் இதற்கான ஒரு போராட்டத்தையே கையெடுக்கலாம்.

10 comments:

 1. நல்ல விவாதம். பயனுள்ள பதிவு. நன்றி.

  ReplyDelete
 2. "இங்குதான் ஆசிரியப் பணி அறப்பணி என்பது பொருந்துகிறது. இந்தக் குழந்தையும் தேர்ச்சிபெறப் போராடுவோம்"

  8 ஆம் வகுப்புவரை கேள்வித்தாளில் உள்ளதை அப்படியே விலைத்தாளிலும் எழுதிவைத்த 9 ஆன்ங்கிலம் மட்டும்தான் )என்னையும் 10 ஆம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேற்ச்சிபெறவைத்த ஆசிரியரின் பணி பெரும் பணிதான்.
  உங்கள் பார்வை பலமானதும், தெளிவானதும்தான்.

  ReplyDelete
 3. சரியான பதிலாக தெரிகின்றது. தேர்ச்சி மட்டுமே எதிர்பார்க்கும் திறனை கொடுத்துவிடும் என்ற லாஜிக்கை விட்டு வெளிவர போராடுவோம். குழந்தைகளைகுழந்தைகளாக மதிக்க கற்றுக்கொள்ள உதவுவோம்.

  ReplyDelete
  Replies
  1. அதை செய்யாவிட்டால் வருங்காலத் தலைமுறை நம்மை சபிக்கும் தோழர்

   Delete
 4. தோழர், ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி
  பத்தாம் வகுப்பில் மட்டும் சுயமாய் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதற்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர் மட்டுமே பொறுப்பு.
  எப்படி தோழர் இது சாத்தியப்படும்
  ஒன்பதாண்டுகாலம் மாணவனை நெறிப்படுத்தாத, அனைத்து ஆசிரியர்களின் செயல்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் மட்டுமே பொறுப்பு
  என்ன நியாயம் இது தோழர்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழர்.
   உங்களது வேதனை எனக்குப் புரிகிறது. இன்றைய கல்வித் திட்டம் அப்படி. பத்தாம் வகுப்பு ஆசிரியர் மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நியாயமான கேள்வி.; ஆனால் அது குறித்து நாம்தான் போராட வேண்டும். மனிதப் படுத்துதலே கல்வியின் நோக்கம் என்று நிறுவ வேண்டும்.

   Delete
 5. தேர்ச்சி பெறாதவர் என்று சொல்வதை விட பத்தாவது வரை படித்தவர் என்று சான்றளிக்கலாம்.
  விவாதிக்கப் படவேண்டியவை நிறைய உள்ளன
  நல்ல பதிவு ஐயா

  ReplyDelete
 6. அரசும் கல்வித்துறையும் விவாதத்திற்கு இது விஷயத்தில் தயாராகவே இல்லை. தங்களது முடிவைத் திணிக்கவே விரும்புகிறார்கள்

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...