உன் பெயரென்ன என்றுகேட்டால் வி.லேகாஸ்ரீ UKG C செக்ஷன் என்று பள்ளி முகவரியோடு சேர்த்துதான் சொல்வாள்.
வாங்க வி.லேகா LKG என்று ஆரம்பித்தாலே போதும் அழாத குறையாக தான் UKG என்று ஆரம்பித்து விடுவாள். எனக்கு அவளைச் சீண்டிக் கொஞ்சுவதற்கு இதுவே போதுமானதாக இருக்கிறது.
லேகா குட்டி LKG பெரிசா UKG பெரிசா என்றேன் இன்று.
கொஞ்சமும் யோசிக்காமல் UKG தானென்றாள். அப்புறம் ஏன் போன வருஷம் LKG படிச்ச என்றேன்.
போன வருஷம் LKGதான் பெரிசு. அதனாலதான் என்கிறாள்.
குழந்தைனா குழந்தைதான்.
சிறிய பதிவு அரிய கருத்து. குழந்தைகள் குழந்தைகள்தான். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteத ம இரண்டு ...
ReplyDeleteநல்ல அனுபவம்..
முகத்தில் ஒரு புன்னகையோடு ...
மிக்க நன்றி தோழர்
Delete