Monday, May 27, 2013

ஸ்மைல் பக்கம்


ஆணாதிக்கம்பெண்ணடிமைத்தனம் என்பதோடு பாலியல் பிரச்சினைகளில்,சிக்கல்களில் நாம் சுறுங்கிப் போகிறோம்.

இவை எதனினும் பெரிதான பாலியல்பிரச்சினைகளையும் ,சிக்கல்களையும் நாம் உதாசீனம் செய்கிறோம் என்பதைவிடஅந்தச் சிக்கல்கள் குறித்த எந்த சிறு தெளிவும் புரிதலும் இன்றியே நம்மில்பெரும்பான்மையோர் வாழ்ந்து சாகிறோம்

திருநங்கையர் மற்றும் திருநம்பியர் ஆகியோர் அனுபவிக்கும் பாலியல் சிக்கல்கள்இந்த உலகம் சந்திக்கும் எந்தச் சிக்கலைவிடவும் கொடூரமானதும்வலிமிக்கதுமாகும் .

அறிந்தோ அறியாமலோ அவர்களை நாம் நம் அன்றாட வாழ்வில் உதாசீனப்படுத்துகிறோம்அலட்சியப் படுத்துகிறோம்ஏன்பெரும்பான்மை நேரங்களில்அவர்களை அசிங்கப் படுத்தவே செய்கிறோம்.


எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்மை இருக்கிறதுஎல்லாப் பெண்களுக்குள்ளும்ஆண்மை இருக்கவே இருக்கிறது.

ஆண் உடலும், ஆண் கூறுகள் அதிகமாகவும், பெண்கூறுகள் குறைவாகவும்இருப்பின் அவன் ஆண்பெண் உடலும் பெண் கூறுகள் அதிகமாகவும்,ஆண்கூறுகள் குறைவாகவும் இருந்தால் அவள் பெண்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆண் உடலும்ஆண்கூறுகள் குறைவாகவும் பெண்கூறுகள் அதிகமாகவும்இருந்தால் அவள் திருநங்கைபெண் உடலும் ஆண்கூறுகள் அதிகமாகவும்,பெண்கூறுகள் குறைந்துமிருப்பின் அவன் திருநம்பி.

பிச்சைக் காரர்களாக, பாலியல் ஊழியர்களாக மட்டுமே இவர்களை ஒரு அசூசையோடு பார்த்தவர்கள் வித்யாவின் “ஸ்மைல் பக்கங்கள்” பார்த்தால்யாரையும் போல தாங்களும் மனிதர்களே என்பதற்கான இவர்களது இருபது வருடங்களுக்கும் மேலான போராட்டத்தின் நியாயம் புரியும்.

ஆணாய் வளர்ந்தவன் தான் ஆணல்ல திருநங்கை என்பதை உணர்ந்து அதற்குமேல் வீட்டில் இருக்க இயலாது என்பதை உணர்ந்தவுடன் அங்கிருந்து வெளியேறி திருநங்கைகளோடு இணைவது என்பது இருக்கிறது பாருங்கள், எந்த எழுத்திலும் வசப்பட மறுக்கும் வலிமிகுந்தது.

ஆனால் இதைவிட கொடுமை பெண்ணாக வளர்ந்தவள் தான் திருநம்பி என்பதை உணரும் தருணம். அவளால் திருநங்கை வெளியேறுவது போல வெளியேற இயலாது. பெண் அல்ல திருநம்பி என தெரிய வந்ததுமே கருணைக் கொலையே செய்துவிடுவார்கள் என்பதை இந்த வலையில் பார்க்கும் போது மனசு கனத்துப் போகிறது.

அப்படியே தப்பி வெளியே வந்தாலும் திருநங்கை போல திருநம்பியால் வாழ்வை அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது என்பதையும் இந்த வலை நமக்கு சொல்கிறது.

தங்களைப் போலவே பாதிக்கப் படும் சம ஈர்ப்புடைய ஆண்கள் மற்றும் பெண்களின் வலியை அக்கறையோடு பதிவு செய்கிறது.

இரண்டு அக்காக்கள் ஒரு தங்கையோடு பிறந்து வளர்ந்த சரவணன் வித்யாவாய் மாறியதும் அந்த சகோதரிகளின் உறவை இழக்க நேர்ந்த அந்தத் தருணமும் அவரது தங்கையுடனான தொலைபேசி உரையாடலும் ஈரத்தை சுரக்க வைக்கின்றன.

திருநங்கை மரணமுற்றதும் அவளது உடலை குடும்பத்தார் பிடுங்கிச் சென்று களிமண்ணால் ஆண்குறி பொருத்தி ஆணாய் அடக்கம் செய்யும் வன்முறையை இந்த வலை கேள்வி கேட்கிறது. 

பாலியல் சிறுபான்மையினராகிய தங்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் நியாயமான ஒரு சதவிகித இட ஒதுக்கீட்டை கோருகிறது.

”என் பெயர் வித்யா” என்ற இவரது நூல் கன்னடத்தில் மொழி பெயர்க்கப் பட்டு மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளது. இவர் தேர்ந்த ஓவியர் என்பதை இந்த வலை சொல்கிறது.

இவ்வளவு இருந்தாலும் அவரை திருமணமாகாதவர், குடும்பப் பின்னனி இல்லாதவர் என்ற காரணங்களுக்காக இவருக்கு வெளிநாடு செல்ல விசா மறுக்கப் பட்டதை வலிக்க வலிக்க சொல்கிறது.

உள்ளே போய் பாருங்கள், இவர்களை சக மனிதர்களாக பார்க்கும் பக்குவம் வரும். போக வரும் காலத்தில் நம் குடும்பத்தில் ஒரு திருநங்கையோ திருநம்பியோ தோன்றினால் அவர்களும் நம் பிள்ளைகள்தான் என்று குடும்பத்திற்குள் அரவணைக்கும் பக்குவத்தை இந்த வலை தரும்.

வலை முகவரி

நன்றி : “ புதிய தரிசனம்”

8 comments:

 1. நல்லதொரு தளம்... மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபால்

   Delete
 2. முக்கியமான ஒரு விடயத்தை அதற்குரிய பவித்திரத்தோடு கையாண்டு சொல்லியிருக்கிறீர்கள்.

  இந்தப் பிள்ளைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு ஒரு தடவை தாய்லாந்துக்குச் சென்று அந்த உலகத்தை அவர்களுக்குக் காட்ட ஆசையாக இருக்கிறது.அங்கு அவர்களுக்கு வெளிப்படையான அங்கீகாரமும் அவர்களுக்கான இடமும் கொடுக்கப்பட்டிருப்பதால் உலகத்தின் சகல பக்கங்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து தங்கள் துணையை தெரிந்தெடுக்கிறார்கள். அத்துடன் அங்கு கம்பீரமாக வாழவும் முடிகிறது.

  அண்மையில் அங்கு சென்று வந்த போது Lady boy show பார்த்தேன்.(அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்றும் கூட) அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கம்பீரமும் அதனை அவர்கள் கலையினூடாக வெளிப்படுத்தும் விதமும் உலகத்தரமும் உன்னதமான மனிதத் தன்மையும் கொண்டது.

  அவர்கள் பெரும்பாண்மை சனத்திடம் காட்டும் நேசம்; நீங்கள் எங்களை’எப்படி’ நடத்தினாலும், நோக்கினாலும் உங்கள் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை என்ற செய்தி மனதை விட்டு ஒரு போதும் அகலாது.

  அந்த நாட்டை இந்த ஒன்றுக்காகவே நேசிக்கலாம். இந்த பிள்ளைகளை வாழ விட்டிருக்கிறது அந்தச் சமூகம். இந்தப் பிள்ளைகள் அங்கு சென்று பலம் பெற்று வர வேண்டும் எட்வின்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கமும் நன்றியும்
   உங்களுக்கும் தாய்லாந்திற்கும்

   Delete
 3. அவர்களும் சக மனிதர்கள், என்பதை தவிர எனக்கு வேறு தோன்றவில்லை sir மேலும் அர்த்தநாரி தோற்றம் மதிக்க வேண்டியவர்கள், நல்ல கட்டுரை ஆனால் அரசு நடவடிக்கை எடுக்குமா இவர்கள் துயர் களைய என்றால் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு இவர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மணி

   Delete
  2. எல்லாஆண்களில் பெண்மையும்
   எல்லா பெண்ணுக்குள்ளும் ஆண்மையும்..
   சரியாக சொன்னீர்..

   Delete
 4. எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்மையும்.
  எல்லா பெண்களுக்குள்ளும் ஆண்மையும்..
  சரியாக சொன்னீர்..

  எல்லா மனிதருக்குள்ளும் மனிதம்...?

  செ.ப.மு.ம

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...