Thursday, April 12, 2012

உச்சங்களின் முதல் சந்திப்பு

உரசிக் கொள்ளும் உச்சங்களே வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களெங்கும் விரவிக் கிடக்கின்றன. உச்சங்கள் இரண்டு சந்திப்பது என்பதே வரலாற்றில் எப்போதாவது நிகழ்வதுதான். இப்படியிருக்க உச்சங்களில் ஒன்று குருவாகவும் இன்னொன்று சிஷ்யனாகவும் , இறுதிவரைக்கும் அன்போடும் அரவணைப்போடும் வாழ்ந்து செத்த வரலாறு உண்டெனில் ஆச்சரியம் எழவே செய்யும். காரணம் உச்சங்கள் அடிமைகளையே அருகிருக்க விரும்புவதும், தகுதி இல்லாத காரணங்களுக்கும் மற்றவர்கள் தங்களைப் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதிலும், நிதானம் இல்லாத நிலையிலும் தாம் யாரையும் மறந்தும் பாராட்டிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கும் . இதைத்தான் நம் தாத்தனும் அப்பனும் நாமும் கண்டோம். நாளை நம் பிள்ளைகளும் இதைத்தான் காண்பார்கள்.


விதிவிலக்காய் வாழ்ந்த அந்த இரண்டு உச்சங்களும் தமிழர்கள் என்பது நம்மை இன்னும் கொஞ்சம் கூடுதலாக மகிழ்ச்சிப் படுத்தும். எதற்கு சுத்தி வளைத்துக் கொண்டு? பாரதியும் பாரதிசானும்தான் அந்த இரண்டு உச்சங்கள் என்பதை நான் சொல்லித்தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்பதும் இல்லை.

இவர்களது முதல் சந்திப்பு மிக மிக சுவையானது.

பாரதிதாசன் புதுச்சேரியில் வாத்தியார் என்றும் வெகு மக்களால் அறியப்பட்டார். அவர் தமிழாசிரியர் என்பதால் யாரும் அப்படி அழைக்கவில்லை.அவர் சிலம்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர் என்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பட்டார். மாலை நேரங்களில் அவரும் அவரொத்த இளைஞர்களும் தெருவில் கம்பு சுழற்றி விளையாடுவதுண்டு. அதுமாதிரி சமயங்களில் பாரதி அந்த வழியே போவதும் உண்டு. போவது தாம் பெரிதும் நேசிக்கும் பாரதி என்பதை அறியாத பாரதிதாசன் பாரதியின் நகைப்புக்குரிய தோற்றத்தைக் கண்டு அவருக்கு “ரவி வர்மா பரமசிவம்” என்று பெயர் வைத்து நண்பர்களோடு சேர்ந்து நக்கல் செய்ததும் உண்டு.

கொட்டடி வாத்தியார் வேணு நாயக்கர் இல்லத் திருமணத்திற்கு பாரதி தாசன் சென்றிருந்தார். அனைவரும் பாடச் சொல்லி வற்புறுத்தவே அவர் பாடத் தொடங்கினார். பாரதிதாசன் நல்லபாடகர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதிதான்.

அந்தத் திருமணத்திற்கு பாரதியாரும் வந்திருந்தார். அவரை மிகுந்த பணிவோடும் பவ்யத்தோடும் வேணு நாயக்கர் தொடர்ந்து உபசரித்து கொண்டே இருந்தார்.

இந்த ரவிவர்மாவைப் போய் வேணு நாயக்கர் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கிறார் என்பது பாரதிதாசனுக்கு அப்போது விளங்கவே இல்லை.

பாடுவதை முடித்துஇக் கொள்ள இருந்த பாரதிதாசனை பார்த்து வேணு நாயக்கர்,

“ கனகு, இன்னுமொரு பாடலைப் பாடுங்கள்”

“தொன்று நிகழ்ந்தது அனைத்தும்” என்ற பாரதியின் பாடலை பாடுகிறார். எல்லோரும் ரவி வர்மாவையே பார்க்கிறார்கள். இது இன்னும் ஆச்சரியப் படுத்துகிறது பாரதிதாசனை.

பாடுவது நாம். பாடல் பரதியுடையது. இவர்கள் ஏன் ரவி வர்மாவைத் திரும்பிப் பார்க்கிறார்கள்? குழம்பித்தான் போனார் பாரதிதாசன்.

அவர் இறங்கி வரும் போது அவரை நோக்கி  பாரதியாரை அழைத்து வந்தார் வேணு நாயக்கர்.

முனைவர். ச. சு. இளங்கோ எழுதிய “பாரதிதாசன் பார்வையில் பாரதி” என்ற நூலை வாசிக்கிற வரைக்கும் சிறு பிள்ளை மாதிரி ஒரு ஆசை எனக்கு இருந்தது. பாரதியும் பாரதிதாசனும் சந்தித்துக் கொண்டபோது யார் முதலில் பேசியிருப்பார்கள்? விடை இந்த நூலில்தான் கிடைத்தது.

வேணு நாயக்கர், பாரதி , பாரதிதாசன் மூவரும் அருகருகே நிற்கிறார்கள். வேணு கேட்கிறார்,

“கனகு, இவங்க யாருன்னு தெரியுதா?”

“இல்லையே”

“தமிழ் வாசிச்சிருக்கீங்களா?”

ஆஹா, பாரதிதான் அவனது சிஷ்யனிடம் முதலில் பேசியிருக்கிறான்.

“கொஞ்சம்” பாரதிதாசனிடமிருந்து அடக்கமாக பதில் வருகிறது.

நம்மில் பலர் படித்து முடித்து விட்டு சும்மா இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் போது பாரதிதாசனிடமிருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டிருப்பதாய் வந்த பதிலில் நமக்கு கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

 “ உணர்ந்து பாடுகிறீர்கள்”

பாரதி தாசன் இவர் யார் என்பதான ஒரு பார்வையை வேணு நாயக்கர் மீது வீசுகிறார்.

“இவங்களத் தெரியலையா. இவங்கதான் நீங்க பாடுன பாட்டை எல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதின்னு பேரு.”

அப்படியே உறைந்து போகிறார் பாரதிதாசன்.

“ வேணு இவரை ஏன் இது வரைக்கும் வீட்டுக்கு அழைத்து வரல?”

பாரதிதாசன் சொல்கிறார்,

”அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன், அது என் நினைவில் தங்காது என்னை ஏமாற்றி விடுமோ என்று அதன் முதுகில் ஏறி அமர்ந்து அமிழ்த்திக் கொண்டேன்”



11 comments:

  1. அந்த வார்த்தை என்னவென்று சொல்லக் கூடாததா.?

    ReplyDelete
  2. பாரதிதாசன் பிற்காலத்தில் திராவிடர் இயக்கங்களில் சேர்ந்து கடவுள் மறுப்பு கொள்கை கடைபிடிக்கத் துவங்கினாரா.? எனக்கு தெரியவில்லை. சந்தேகம் தெளிவிக்க முடியுமா.?

    ReplyDelete
  3. எட்வின் அவர்களே! 1978ம் ஆண்டு மதுரையில் த.மு.எ.ச இலக்கிய வகுப்பு நடத்தியது. டாக்டர் இளங்கோ கருத்தரங்கில் பங்கெடுத்துப் பேசினர். "பரதியப் பழிப்பவனை எங்கால் செருப்பால் அடிப்பேன் " என்பாராம் பாரதிதாசன். அவர் தங்கால் செருப்பில் ஆணி அடித்து சரக் சரக் என்று நடப்ப்பாராம். பாரதியின்பாடல்கள் சிலவற்றை தாசன் பாட அவற்றை ஒலிக்கச்செய்ததாகவும் நினவு தட்டுகிறது.இளங்கோ இளங்கோதான்.அன்புடன் ---காஸ்யபன்

    ReplyDelete
  4. \\\\ kashyapan said...
    எட்வின் அவர்களே! 1978ம் ஆண்டு மதுரையில் த.மு.எ.ச இலக்கிய வகுப்பு நடத்தியது. டாக்டர் இளங்கோ கருத்தரங்கில் பங்கெடுத்துப் பேசினர். "பரதியப் பழிப்பவனை எங்கால் செருப்பால் அடிப்பேன் " என்பாராம் பாரதிதாசன். அவர் தங்கால் செருப்பில் ஆணி அடித்து சரக் சரக் என்று நடப்ப்பாராம். பாரதியின்பாடல்கள் சிலவற்றை தாசன் பாட அவற்றை ஒலிக்கச்செய்ததாகவும் நினவு தட்டுகிறது.இளங்கோ இளங்கோதான்.அன்புடன் ---காஸ்யபன் //// மிக்க நன்றி தோழர். இளங்கோவின் நூல் ஒரு அற்புதம். அதிலிருந்து நிறைய எடுத்துப் போட ஆசை.

    ReplyDelete
  5. @ G.M Balasubramaniam

    மிக்க நன்றிங்க அய்யா. கடைசி பத்தி பாரதிதாசன் சொன்னது. வேணு நாயக்கரைப் பார்த்து “ ஏன் வேணு இவர வீட்டுக்கு கூட்டிட்டு வரல” ர்ன்பதைத்தான் அந்த வார்த்தை என்று பாரதிதாசன் சொல்கிறார்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு . உன்னதமானது உச்சங்களின் சந்திப்பு.

    ReplyDelete
  7. மிக்க நன்றி தோழர் மணிச்சுடர்

    ReplyDelete
  8. “ரவி வர்மா பரமசிவம்”

    உச்சங்களின் சந்திப்பு
    மிச்சமின்றி மனதை நிறைத்தது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. மிக்க நன்றி தோழர் ராஜேஸ்வரி

    ReplyDelete
  10. I [url=http://informationthehealth.net/1991/05/28/hydro-chlorate-and-infants/]hydro chlorate and infants[/url] comrades butt [url=http://informationthehealth.net/1991/07/03/z-7.5-zopiclone-canada/]z 7.5 zopiclone canada[/url] dangers methodically [url=http://informationthehealth.net/1991/07/15/jel-candles/]jel candles[/url] soul uneducated [url=http://informationthehealth.net/1991/08/02/prostate-cancer-flaxseed/]prostate cancer flaxseed[/url] riffraff met [url=http://informationthehealth.net/1991/08/11/pneumococcal-polysaccharide/]pneumococcal polysaccharide[/url] if lawyer [url=http://informationthehealth.net/1991/09/06/tropical-smoothie-coupons/]tropical smoothie coupons[/url] halfway routine [url=http://informationthehealth.net/1991/09/06/thyrolar-no-prescription/]thyrolar no prescription[/url] curses annoyance [url=http://informationthehealth.net/1991/10/06/nutrasweet-kills-ants/]nutrasweet kills ants[/url] ploy despair [url=http://informationthehealth.net/1991/11/09/choline-effect-on-vestibular/]choline effect on vestibular[/url] sturdy banking respect.

    ReplyDelete
  11. But [url=http://informationthehealth.net/1991/05/28/hydro-chlorate-and-infants/]hydro chlorate and infants[/url] comrades butt [url=http://informationthehealth.net/1991/07/03/z-7.5-zopiclone-canada/]z 7.5 zopiclone canada[/url] rebels methodically [url=http://informationthehealth.net/1991/07/15/jel-candles/]jel candles[/url] traitors respectfully [url=http://informationthehealth.net/1991/08/02/prostate-cancer-flaxseed/]prostate cancer flaxseed[/url] riffraff met [url=http://informationthehealth.net/1991/08/11/pneumococcal-polysaccharide/]pneumococcal polysaccharide[/url] mockery quarters [url=http://informationthehealth.net/1991/09/06/tropical-smoothie-coupons/]tropical smoothie coupons[/url] halfway costly [url=http://informationthehealth.net/1991/09/06/thyrolar-no-prescription/]thyrolar no prescription[/url] spun crowbait [url=http://informationthehealth.net/1991/10/06/nutrasweet-kills-ants/]nutrasweet kills ants[/url] thud despair [url=http://informationthehealth.net/1991/11/09/choline-effect-on-vestibular/]choline effect on vestibular[/url] sturdy tugging palm.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...