
சங்கடப் படுத்தும்
பரிவான பார்வைகள்
.
திண்ணைக்கு வந்துவிட்ட
என் கட்டில்
.
புரிகிறது
செத்துக் கொண்டிருக்கிறேன்
.
அநேகமாக
நாளை
.
தப்பினால்
நாளை மறு நாள்
.
தொடங்கி விட்டது
பிரிவினை கூட
.
நல்லததுதான்
இருக்கும்போதே
பிரித்துக் கொள்வதும்
.
பார்த்து
பார்த்து
சேர்த்தது
.
அடித்துக் கொள்ளாமல்
.
அவனவன் விரும்பியதை
அவனவன் எடுக்க
.
சீந்துவாரற்று
அநாதையாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
என் புத்தகங்கள்
.
நன்றி : "இளைஞர் முழக்கம்"
அண்ணன்..
ReplyDeleteநேர்த்தியாக வந்திருக்கிறது.
தலைப்பையும் சேர்த்து பதிவிடுங்கள்..
நன்றி சரவணன்
ReplyDeleteஅருமை..எட்வின் ஐயா.....
ReplyDelete/// மிக்க நன்றி தோழர்
ReplyDelete