கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கரு வண்டு
.
"எப்பப்பா போகும்
இது
அவுங்க வீட்டுக்கு?"
.
எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்
.
"எழுந்ததும் போகும்"
சமாளிப்பேன்
இப்படித்தான்
.
விடவில்லை
.
"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"
.
"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா
.
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேனாலும் போகலாம்
வீட்டுக்கு"
.
நன்றி : "இளைஞர் முழக்கம்" & "யுகமாயினி"
வருக எட்வின்.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் எதிர்ப்பார்கிறேன்
தோழமையுடன்
எஸ்.ஜி.ரமேஷ்ப்பாபு
///அப்பா வண்டுன்னா சரி
ReplyDeleteஎப்ப வேனாலும் போகலாம்
வீட்டுக்கு///
சின்ன மகள் ரொம்ம்ம்ம்ம்பவே புத்திசாலி போல:)
வலையுலகுக்கு நல்வரவு எட்வின்
அந்தக் கடைசி வரிகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கான அடக்குமுறையின் தாக்கம் தெரிகிறது,.. அருமை சார் :)
ReplyDeleteஆண்களுக்கு சிரிப்பு வரும் இதை படிக்கும்போது. ஆனால் வர வேண்டியது குற்ற உணர்ச்சி .. அருமையான கவிதை.
ReplyDeleteஅருமை தோழர். அழகான கவிதை.
ReplyDeleteநீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு கவிதையின் கடைசி வரிகளே சாட்சி.
ReplyDeleteஅன்புடன்
நாகூர் ரூமி
அப்பாவிடம் ஒரு பெண் எப்படி தன் எதிர்ப்பையும் சலிப்பையும் காண்பிக்க முடியும்.. அது மனைவிகளுக்கே உரித்தானது..:)
ReplyDeleteஅப்பாவை பெருமைப்படுத்தும் விதமாகவும்.. ஆதரிக்கும் விதமாகவும்தான் பேச வரும். அது அந்தக் கவிதையில் எதார்த்தமா வந்திருக்கு..:) வாழ்த்துக்கள்..:)
துளி அது தேன் துளி.... ஒரு குட்டு...மிக எளிமையான சாடல் .. வாழ்த்துக்கள்
ReplyDeleteகுழந்தையின் வஞ்சமில்லாத மனசு...எவ்வளவு அழ்காக சொல்கிறது பாருங்கள்..//யதார்த்தம்.//
ReplyDeleteபாராட்ட மட்டுமில்லாமல், யோசிக்கவும் வைத்தது...!
ReplyDelete/// கமல்ராஜ் ருவியே said...
ReplyDeleteதுளி அது தேன் துளி.... ஒரு குட்டு...மிக எளிமையான சாடல் .. வாழ்த்துக்கள்///
மிக்க நன்றி தோழர்
/// S.M.KAVIN said...
ReplyDeleteகுழந்தையின் வஞ்சமில்லாத மனசு...எவ்வளவு அழ்காக சொல்கிறது பாருங்கள்..//யதார்த்தம்./////
மிக்க நன்றி தோழர்
///S.M.KAVIN said...
ReplyDeleteகுழந்தையின் வஞ்சமில்லாத மனசு...எவ்வளவு அழ்காக சொல்கிறது பாருங்கள்..//யதார்த்தம்.////./
மிக்க நன்றி தோழர்
பிஞ்சு நெஞ்சிலே நாம் ஆணாதிக்க நஞ்சினை விதைதுள்ளோம்....
ReplyDelete///gypsy68 said...
ReplyDeleteபிஞ்சு நெஞ்சிலே நாம் ஆணாதிக்க நஞ்சினை விதைதுள்ளோம்....///
குழந்தை பார்ப்பதை சொல்கிறாள் அவ்வளாவுதான்
குழந்தைகளின் பார்வை யதார்த்தமானது
ReplyDeleteஆணாதிக்கமும் இல்லை பெண்ணியமும் இல்லை..அதில்
/// prabhakaran said...
ReplyDeleteகுழந்தைகளின் பார்வை யதார்த்தமானது
ஆணாதிக்கமும் இல்லை பெண்ணியமும் இல்லை..அத
எதார்த்தம்தான் தோழர்
அருமை...அருமை....
ReplyDeleteஎன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தக்கவிதையை பகிர்ந்து கொள்கிறேன் தோழர்....
அருமையான், எழிமையான கவிதை நன்பரே.எனது இளமைகாலத்தில் அந்த வண்டுகளே என்னை வளர்த்தவை.
ReplyDelete///எஸ்.ராஜாபாபு said...
ReplyDeleteஅருமையான், எழிமையான கவிதை நன்பரே.எனது இளமைகாலத்தில் அந்த வண்டுகளே என்னை வளர்த்தவை.///
என்னையும் கூடத்தான் தோழர்
நல்ல கவிதை. பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே முடியாது
ReplyDelete/// நா சாத்தப்பன் said...
ReplyDeleteநல்ல கவிதை. பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவே முடியாது///
மிக்க நன்றி தோழர்
மிக எதார்த்தமாய்
ReplyDeleteஎன் மகள் என்னோடு உரையாடியதாக நினைத்து கொண்டேன்
அருமை .. அருமை
ReplyDelete/// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமிக எதார்த்தமாய்
என் மகள் என்னோடு உரையாடியதாக நினைத்து கொண்டேன் ////
மிக்க நன்றி ஜமால்
///Srinivasan said...
ReplyDeleteஅருமை .. அருமை '''
மிக்க நன்றி தோழர்
ஒரு வாண்டு, வண்டின் மூலம் வண்ணம் பூசியிருக்கிறது, யதார்த்தத்திற்கு..! :)
ReplyDelete