Tuesday, December 30, 2025

வங்கத்தில் நமது கவிதை

 




தெரு தாண்டும் வரை
**************************
கைகளில்
சுமக்க
தீர்ப்பளித்தீர்
கோபம் வரும்
எங்களுக்கும்
எங்களுக்கு
கோபம் வரும் வேளை
எம்மெதிரே
நீங்களும் வரலாம்
கழட்ட வேண்டிய
தேவையும் இல்லை
கைகளில்தான்
இருக்குக்கிறது

#வங்கத்தில் தோழர் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி

Monday, December 29, 2025

யார் அந்த மூப்பனார் சார்?

 சகோதரர் அலிம் அல் புகாரி அவர்களின் நக்கீரன் நேர்காணல் பார்த்தபிறகு

காங்கிரஸ் தவெகவை நெருங்குவதும்

அதற்கு உள்ளுக்குள் எதிர்ப்பும் இருப்பதும் புரிகிறது

1996 நினைவுக்கு வருகிறது

தவெக கூட்டணி ஏற்படின்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடையும்

யார் அந்த மூப்பனார் சார்?

பார்ப்போம்

#சாமங்கவிய  1 மணி நிமிடம்
29.12.2025

பாஜகவிற்கும் காங்கிரசிற்குமான மிக முக்கியமான வேறுபாடு இதுதான்


பாஜகவிற்கும் காங்கிரசிற்குமான மிக முக்கியமான வேறுபாடு இதுதான்

பாஜகனா சங்கினு தெரியும்

காங்கிரசில் யார் சங்கினு பளிச்சென்று தெரியாது

Wednesday, December 24, 2025

பேசாம உட்டிருக்கலாம்

 


அட லூசுங்களா
பேசாம உட்டிருக்கலாம்
இப்ப பேசனதுபோல நாலு மடங்கு விளக்கம் தருவோமே

Tuesday, December 23, 2025

இந்திய விழுமியங்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் சங்கிகள்

 

திருப்பரங்குன்றம் பத்தி நாலு அல்லது அஞ்சு வார்த்தைகளில் சொல்லுடா எட்வின்
இந்திய விழுமியங்களோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் சங்கிகள்

எங்களை இப்படியே வாழ விடுங்க சாமிகளா

 


ஒன்றே ஒன்றுதான்

எங்களை இப்படியே வாழ விடுங்க சாமிகளா

22.12.2025

Saturday, December 20, 2025

“நீறு பூக்காத வெண்மணி கங்கு”

 

20.12.2025

இன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரம்பலூர் நகரக்கிளை நிர்வாகிகள் கூட்டம் லட்சுமி மருத்துவ மனையில் கூடியது
நகரக்கிளையின் தலைவர் பேராசிரியர் குமணன் தலைமை தாங்கினார்
தோழர்கள் ராஜசேகர், போஸ்கோ, யேசுதாஸ், பெரியசாமி, ராமு, ப்ரபு, ஆகியோர் கலந்துகொண்டனர்
28.12.2025 அன்று மாலை “நீறு பூக்காத வெண்மணி கங்கு” என்ற பொருளில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது
செல்வகுமார் என்ற ஆசிரியர் அட்டகாசமாக புல்லாங்குழல் வாசிப்பதாகவும் அவரையும் நிகழ்ச்சியில் பயன்படுத்த வேண்டும் என்று நகர கிளை செயலாளர் தோழர் சுரேஷ் கோரினார்
நாளை அவரை சென்று பார்ப்பது என்று முடிவு
சந்திப்போம்

Friday, December 19, 2025

முதலில் இது அரசியலாடா மாப்ள?

 

என் வீட்டில் ஒன்பது ஓட்டுகள் உள்ளன. விஜய்க்கு போடலன்னா விஷத்த வச்சு கொன்னுடுவேங்கறாளே ஒரு குழந்தை. அரசியலில் விஜய் வளர்கிறார்தான எட்வின்?
முதலில் இது அரசியலாடா மாப்ள?

இவ்வளவுதான் செங்கோட்டையன் சார்

 


இவ்வளவுதான் செங்கோட்டையன் சார்
அவருக்கு குனிந்து கும்பிடுவதற்கு ஒரு தலைவன் தேவை
அவ்வளவுதான்

Wednesday, December 17, 2025

தவறுதலா ஓட்டை உங்களுக்குப் போட்டுட்டோம்

 


பெண் என்று நினைத்து ஆண்களுக்கு நீங்கள் தவறுதலாய் அனுப்பிவிட்டதாகவே கொள்வோம்
தவறுதலாக வந்ததை திரும்பத் தருமாறு நீங்கள் கேட்பதும் கூட சரியென்றே கொள்வோம்
பிரச்சினை என்னன்னா
நாங்களும் தேஜஸ்விக்கு போடறதுக்கு பதிலா
தவறுதலா ஓட்டை உங்களுக்குப் போட்டுட்டோம்
நாங்க அதைத் தரோம்
நீங்க இதைத் தருவிங்களா?

57 என்பது 62 ஆக மாறி இருக்கிறது

 

”57 ஆகிறது
இன்னும் ஒருமுறைகூட அருவாள் சுத்தியலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை” என்று நொந்துபோய் 17.12.2020 அன்று எழுதியிருக்கிறாய் எட்வின்

இப்ப எப்படி ஃபீல் பண்ற?

57 என்பது 62 ஆக மாறி இருக்கிறது என்பதைத் தவிர வேறு மாற்றம் இல்ல மாப்ள

Wednesday, December 10, 2025

நான்கு தொகுப்பு

 ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு தொகுப்பு என்பது

போராடிப் போராடி பாட்டாளி வர்க்கம் சேர்த்து வைத்திருக்கும் உரிமைகளை சிதைக்கும்
வர்க்கம் சிதையும்
பாட்டாளி வர்க்கம் சிதையும்போது வர்ணம் சிலிர்த்து எழும்
நான்கு வர்ணத்தை பாதுகாக்கும் நுட்பமான சூதுகளில் ஒன்று நான்கு தொகுப்பு
வர்ணம் ஒழிய வேண்டுமெனில்
பாட்டாளி வர்க்கம் அவசியம்
பாதுகாப்போம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...