Monday, September 2, 2024

நடைமுறையில் பொய் கவிதை 102

 



நான் 
செத்துப்போன செய்தி
குறுஞ்செய்தியில் 
வருவதற்கும்

அண்ணே டீ என்று
கலியன் சொல்வதற்கும்
சரியாக இருந்தது

கல்லுமாதிரி
நிற்கும் நான்

கலியன் கடையில்
ஒரு கிளாஸ் தேநீர் பருகியபடி
ஒன்றரை பேரல்
அரசியல் பேசும் நான்

செத்ததாக 
நம்பமுடியவில்லைதானே

ஆனால்,

அனிதா
செத்துப்போனதாகவும்

மருத்துவம் இல்லைனா
படிக்க ஏதும் இல்லையா என்ன என்று
பிள்ளையின் மரணத்தை
ஏளனித்தவர்கள்

காரில் போவதாகவும்
சாமி போவதாகவும்
நம்பமுடியவில்லைதானே

செத்தவர்களைத்தான்
புதைப்போம் என்பதும்

செத்தவர்களால்
காரில் போகவோ
கறி வாங்கப் போகவோ
முடியாது என்பதெல்லாம்

நடைமுறையில் பொய்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...