Wednesday, August 16, 2023

மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,

 

சாதி மாறுவதை அங்கீகரித்து சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார் கவிஞர் வைரமுத்து

தூங்குகிற ஸ்டாலின் சாரை அலைபேசியில் அழைத்து உரையாடக் கூடிய உரிமை உள்ளவர் கவிஞர் என்பது உலகறிந்த உண்மை
அப்படி இருக்கும் போது இவ்வளவு சென்சிட்டிவான ஒரு விசயத்தை நாங்குநேரி சம்பவம் மாதிரி ஒன்று நிகழ்ந்தேறியுள்ள நேரத்தில் சமூக வலைதளத்தில் பதிய வேண்டிய அவசியம் என்ன?
இதுவும் ஒரு வகை அரசியல்
அப்படி ஒரு சட்டம் வருவதாகவே கொள்வோம்
ஒரு பட்டியல் இனத்தவர் அய்யராக மாற விரும்புகிறார்
அவரை அய்யர் என்று யார் அங்கீகரிப்பது
ஒரு இந்து கிறிஸ்தவராக மாறுவது என்றால் அவர் ஏதோ ஒரு தேவாலயத்திற்கு செல்ல வேண்டும்
அங்கு அந்த தேவாலயத்தின் தலைவர்
அதாவது அந்தத் திருச்சபையின் குருமார் அவரை கிறிஸ்தவராக ஏற்பார்
ஒரு கிறிஸ்தவர் இந்துவாக மாறுவது என்றால் அவர் ஒரு ஏதேனும் ஒரு திருமடத்திற்கு சென்று அந்த மடத்தின் அதிபதியை அல்லது குருமகா சன்னிதானத்தை சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினால்
முறைப்படி அந்த குரு இவரை இந்துவாக அங்கீகரிப்பார்
இஸ்லாத்திற்கும் இதே வழிமுறைதான்
இப்படி மதம் மாறியவர்கள் அதற்கான சான்றுகளோடு அரசு இதழிலில் அதை வெளியிட்டு தங்களது மதமாற்றத்தை உறுதி செய்ய வேண்டும்
இப்போது சாதிக்கு வருவோம்
சாதி மாற விரும்பிய ஒரு பட்டியை இனத்தவரை யார் அய்யராக ஏற்பது?
மதம் மாறுவதைப் போலவே இதையும் கொள்வதெனில் ,
கவிஞர் அப்படித்தான் சொல்கிறார்
அய்யர் பட்டியல் இனத்தவரை அய்யர் ஒருவர் அய்யர் என அங்கீகரிக்க வேண்டும்
அல்லது
ஒரு செட்டியார் பிள்ளையாக மாறுவதெனில் எந்தப் பிள்ளையேனும் ஏற்பாரா
இல்லை இவை எல்லாம் வைரமுத்துவிற்குத் தெரியாதா?
தெரியும் என்பதுதான் அரசியல்
கொதிநிலை உச்சத்தில் சாதியே இல்லை என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்
சாதியற்ற சுடுகாடு என்று சட்டம் இயற்றுங்கள் என்றும்
கொதிநிலை வரும்
வரும் என்பது கவிஞருக்கும் தெரியும்
அதுதான்,
சன்னமாக மடைமாற்றுகிற காரியம் இது
அவர் சொல்ல வருவதும்
நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் இதுதான்
சாதி இருக்கட்டும் என்கிறார்

2 comments:

  1. சாதியை ஒழிப்பதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியும் இன்னும் சாதியை விட்டு விலகவே இல்லை......

    ReplyDelete
    Replies
    1. பெரிய சிக்கலே இதுதான் தோழர். ஆனால் எல்லோரும் அப்படி என்று பொத்தாம் பொதுவாக எடுத்துக் கொள்வதும், அச்சப்படுவதும் தேவை இல்லை என்றே படுகிறது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...