10.12.2019
ஹிதேஷ் ஷர்மாவின் வீட்டிற்கு சென்ற அந்த தலித் பெண் அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை தருமாறு கேட்கிறார்
அவரை வீட்டிற்குள் அடைத்து சாதியின் பெயரால் ஹிதேஷ் ஷர்மாவின் குடும்பம் அந்தப் பெண்ணை அவமானப் படுத்துகிறது
11.12.2019 அன்று அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கிறார்
எஸ் சி , எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது
அதை எதிர்த்து ஹதிஷ் ஷர்மா உச்சநீதிமன்றம் போகிறார்
வெளியாட்கள் பார்க்க தலித்தை அவமானப் படுத்தினால்தான் எஸ்.சி, எஸ்.டி வழக்கு போட முடியும்
இந்த வழக்கைப் பொறுத்தவரை
அந்தப் பெண் வீட்டுக்குள் வைத்து அவமானப் படுத்தப் பட்டதாக சொல்லப்படுவதாலும்
அப்போது யாரும் இருந்து பார்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்படாததாலும்
இந்த அவமானம் பொது இடத்தில் நடக்கவில்லை என்று உறுதியாவதால்
இந்ந வழக்கை எஸ் சி, எஸ்டி பிரிவில் தொடுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது
என்கிற தகவலை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது
இவ்வளவு சட்டங்கள் இருந்தே
பீத்தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தார்கள்
மூத்திரத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்
நிர்வாணப்படுத்தி அவமானப் படுத்தினார்கள்
இந்தத் தீர்ப்பு இவர்களை உற்சாகப்படுத்திவிடக் கூடும்
வலிக்கிறது
#சாமங்கவிந்து 29நிமிடங்கள்
07.11.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்