அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் இன்று மெல்ல மெல்ல வரத் தொடங்கி இருக்கின்றன
ஒரு நாட்டில் தேர்தல் நடப்பதும் அதை ஒட்டி தேர்தல் முடிவுகள் வருவதும் வழக்கம்தான்
எந்த ஒரு நாட்டின் தேர்தல் முடிவும் ஏதோ ஒரு வகையில் சர்வதேச நாடுகளை பாதிக்கும் என்ற வகையில்
எந்தக் கட்சி வெற்றி பெற்றால் தேவலாம் என்று மற்ற நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருப்பதும் வாடிக்கைதான்
அந்த வகையில் அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ எல்லா நாடுகளையுமே நிச்சயம் பாதிக்கும் என்பதால்
அதுகுறித்த ஆவல் பேரதிகமாய் இருக்கும் என்பதிலும் அய்யம் இல்லை
அதுவும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும் இந்நாள் அதிபருமான திரு ட்ரம்ப் தோற்க வேண்டும் என்பதே பலரது ஆசையுமாக இருக்கிறது
ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வந்தால் மட்டும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அப்படி ஒன்றும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை
ஜோ பைடன் முன்னனியில் இருப்பதாகத் தெரிகிறது
மாறலாம் என்கிறார்கள்
எல்லாம் இருக்கட்டும்
ஆனால் இந்த தேர்தல்மீது காட்டப்படும் ஆர்வமும் வெளிச்சமும் 18.10.2020 அன்று தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் நடைபெற்ற தேர்தல் குறித்து ஏன் காட்டப்பட வில்லை
மூன்றிற்கு இரண்டு என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போயினும்
சோசலிசத்திற்கான இயக்கம் ஏறத்தாழ 55 விழுக்காடுகளுக்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளோடு இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கிறது
ஈவோ அதிபராக இருந்த முந்தைய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தவரும் இடதுசாரியுமான லூயி ஆர்க் இப்போது அதிபராகிறார்
சென்ற ஆட்சியில் வறுமையை குறிப்பிட்டு சொல்லுமளவு ஒழித்துக் காட்டினார்கள்
பள்ளிகள் மருத்துவமனைகள் சாலைகள் போடப்பட்டன
வளங்களை தேசியமாக்கியதன் விளைவு அது
இவ்வளவையும் சாதித்த ஈவோ அடுத்த நாட்டில் தஞ்சம் புகவேண்டிய தேவை வந்தது
முதலாளித்தவமும் அமெரிக்காவும் மட்டுமல்ல ஈவோவும் அதற்கு காரணம் என்பதை ஆர்க் உணார்ந்தே இருக்கிறார்
அதனால்தான் ஈவோவின் சாதனைகளில் இருந்து எடுக்கவேண்டியதை எடுப்போம் தள்ளவேண்டியதை தள்ளுவோம் என்கிறார்
லித்தியம் வளமானது
பொலிவியாவில் அது ஏராளம் இருக்கிறது
இந்த வளம் அந்த நாட்டின் வளார்ச்சியை இன்னும் இன்னுமாய் நகர்த்த உதவும்
ஆனால் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை
சவால் நிறைந்ததாகவே இருக்கும்பொலிவியத் தேர்தல் 2020
சாதிக்கட்டும் ஆர்க்
#சாமங்கவிந்து10நிமிடங்கள்
04.11.2020
அதனால்தான் ஈவோவின் சாதனைகளில் இருந்து எடுக்கவேண்டியதை எடுப்போம் தள்ளவேண்டியதை தள்ளுவோம் என்கிறார்...முற்றிலும் ஏற்கப்படவேண்டிய கருத்து.
ReplyDeleteமிக்க ந்ன்றிங்க அய்யா
Delete