Wednesday, November 4, 2020

நோட்டிஸ் என்பது ரொம்பக் குறைவானது

ராமேஸ்வரம் கோவில் உள்ள நகைகளின் எடை குறைந்திருப்பதாகவும்

அதை ஒட்டி அங்கு வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் 30 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது

வெளியே வந்துவிட்டதால் கேட்கலாம்,

1) எவ்வளவு குறைகிறது?

2) எவ்வளவு இருந்தது?

3) எப்படிக் குறைகிறது?

மூன்றாவது அய்யத்தை விளக்கினால்தான் புரியும் என்று நினைக்கிறேன்

5000 உருப்படிகள் இருக்கிறது என்று கொள்வோம். அவற்றின் எடை 100 கிலோ என்றும் கொள்வோம்

எடை குறைந்திருக்கிறது என்று மிக நுட்பமாக கூறப்படுகிறது

5000 உருப்படிகளில் 50 உருப்படிகள் குறைந்தாலும் எடை குறையும்

அல்லது உருப்படிகளின் எண்ணிக்கை குறையாமல் எடை மட்டும் குறைகிறதா?

இரண்டாவது காரணம் எனில் தொழிலில் அறிவுடையவர்கள்:தான் இதை செய்ய முடியும்

ஏற்கனவே பழநி முருகனை சுரண்டி கொழுத்தவர்களாயிற்றே

அதுமாதிரி சுரண்டியோ எடை குறைவான உருப்படிகளை வைத்துவிட்டு எடை அதிகமான உருப்படிகளை எடுத்திருக்கிறார்களா?

எனில் அது திருட்டு அல்லவா

ஏன் சம்பத்தப்பட்டவர்களை இன்னமும் கைது செய்யவில்லை ?

ராமேஸ்வரத்தில் தனக்கொரு கோவிலைக் கட்ட சொல்லி இறைவன் மன்னர் சேதுபதியிடம் கனவில் வந்து கட்டளை இட்டதாகவும்

அதற்கு உதவுமாறு மன்னர் இஸ்லாமியரான சீதக்காதியிடம் கேட்டுக் கொண்டதாகவும்

அவரது உதவியுடன் அந்தக் கோவில் எழுந்ததாகவும்

கல், மணல் உட்பட ஏராளமான தளவாட சாமான்கள் மிச்சப் பட்டதாகவும்

இவற்றைக் கொண்டு இன்னொரு கோவிலைக் கட்டிவிடலாமா என்று மன்னரிடம் சீதக்காதி கேட்டபோது

இறைவனின் கட்டளை எதுவென்று பார்க்கலாம் என்று மன்னர் சொன்னதாகவும்

பிறகொருநாள்,

இறைவன் மிச்சமுள்ள தளவாட சாமான்களைக் கொண்டு ஒரு பள்ளிவாசலைக் கட்ட உத்தரவிட்டதாக மன்னர் சீதக்காதியிடம் சொல்ல

அவற்றைக் கொண்டு கீழக்கரை பள்ளிவாசல் கட்டப்பட்டதாகவும்

ஒரு பெருமையும் மதங்களைக் கடந்த மாண்புமிக்க ஆன்மிக அறமும் நெகிழ்ச்சியுமான ஒரு வரலாறு இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்

ஒரு இஸ்லாமியர் இந்து ஆலயத்தை எழுப்பித் தந்திருக்கிறார்

இந்துக் கடவுள் பள்ளிவாசலைக் கட்ட கட்டளை இட்டிருக்கிறார்

புனைவாகக்கூட இருக்கட்டும்

இந்த அறம் கொண்டாடத் தக்கது

இப்படியான ஒரு இடத்தில் இறைவனுக்கு ஊழியம் செய்பவர்களால் இந்தக் காரியம் நடைபெற்றிருப்பது

கவலைக்குரியது

கண்டிக்கத் தக்கது

தண்டிக்கத் தக்கது

நோட்டிஸ் என்பது ரொம்பக் குறைவானது

நியாயம் வேண்டும்

#சாமங்கவிந்து27நிமிடங்கள்

03.11.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...