திரு SV சேகர் ஏதோ உளறிக் கொண்டிருப்பதாக நம்மில் பலர் கருதுகிறோம்
“ஹிந்து மதத்தின் உயரிய பீடமான பிராமணர்களை”
என்று அவர் சொன்னது
மிக மிக கவனமாக அவர்கள் யோசித்து ஆழமான பரிசீலனைக்குப்பின்
அவர்மூலமாக வந்தவை
அது மதநம்பிக்கையுள்ள இந்துக்கள் பரிசீலிக்க வேண்டியது
நான் மதமற்று தெய்வ நம்பிக்கையற்று வாழலாம்
எனது கவர் படம் பாருங்கள்
அது என் அம்மாயி
காளியம்மாள்
எனக்கு இரண்டு அம்மாக்கள்
பெத்தவர் எலிசபெத்
பார்த்ததில்லை அவரை
ரெண்டாவது அம்மா முனியம்மா
எப்பவும் நெற்றியில் நீறு அல்லது பட்டை
தம்பி இந்து பெண்ணை மணந்தான்
இறைநம்பிக்கையில்லாத நானும் கிறித்தவரான விட்டுவும் அப்பா அம்மாவாக அவன் கருதுவதாலும் ஊர் மக்களின் அன்பிற்கும் கட்டுப்பட்டும் அனைத்து சடங்குகளிலும் நின்று நான் விரும்பவே விரும்பாத பாத வணக்கத்தை ஏற்றவன்
தங்கை இந்து குடும்பம்
பழுத்த கிறிஸ்தவரான அப்பா இறந்தபோது
அவர்மீது இருந்த அன்பின் நிமித்தம் தெரு அண்ணன்களும் மாமாக்வளும் சித்தப்பன் பெரியப்பாக்களும் கேட்டதற்கிணங்க இந்துமுறைப்படி இந்துக்களுக்கான இடுகாட்டில் அடக்கம் செய்தோம்
தெருக்கார சொந்தங்கள் குளித்து பட்டைபோட்டு தண்ணீர் சுமந்துவந்தபோது அந்த அன்புகண்டு அழுதவன்
கருமாதியின் போது அப்பாவை மாமா என்று அழைத்த எங்கள் தெரு இந்துக்கள் மாமா மச்சினன் சீர் செய்தனர்
இவர்கள் எல்லோரும் இந்துக்கள்
இவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று திரு சேகர் சொல்கிறார்
இது அவரது சொந்தக் கருத்தென்று யாரும் சொல்லவில்லை
எனவே இது அவர் மூலமாக வெளிவந்த அவர்களது கருத்துதான்
இதை மீண்டும் நிறுவுகிற முயற்சியைத் தொடங்குகிறார்கள்
இந்துக்கள் இதை எதிர்க்க வேண்டும்
அவர்களுக்கு இந்த ஆபத்தைக் கொண்டுபோக வேண்டும்
அதே நேரத்தில் இந்த பார்ப்பன கொக்கரிப்புக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் உள்ளனர்
இதற்கு எதிரான களத்திலும் தீவிரமாக உள்ளனர்
அவர்களை அன்போடும் மரியாதையோடும் அரவணைத்து கரமிணைக்க வேண்டும்
அப்புறம்
ரஜினி நினைத்தால் பத்துநாளில் முதல்வராகலாம் என்பதையும் போகிற போக்கில் கொள்ளக் கூடாது
அது பல்ஸ் பார்ப்பதற்கான ஏற்பாடு
ரஜினியை முதல்வராக்கி தேரதலை எதிரகொள்வது பிஜேபியின் ஹிடன் அஜென்டாவாக இருக்கலாம்
அதற்கு மறுத்தால் 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரலாம்
கவர்னர் ஆட்சியோடு தேர்தலை சந்திக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள்
குருமூர்த்தி சொல்லும் 60 பார்ப்பன எம்எல்ஏக்கள் என்பதும்
திரு முருகன் சொல்லும் 15 பிஜேபி எம்எல்ஏக்கள் என்பதும்
உளறல் அல்ல
அவர்களது இலக்கு
கவனமாகவும் கூர்மையாகவும் செயல்பட வேண்டிய நேரம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்