Sunday, July 19, 2020

கவிதை 003

இருட்டும் இருட்டும்
இருட்டில் கலந்து
இருட்டில் பிறந்த
இருட்டு நான்
இருட்டைத் தின்று
இருட்டைக் குடித்து
இருட்டைக் கக்கி
இருட்டைப் பேள
இருட்டால் துடைத்து
இருட்டால் எடுத்து
இருட்டில் எறிவாள்
என் தாய் இருட்டு
இருட்டை உடுத்தி
இருட்டை சுமந்து
இருட்டை மிதித்து
இருட்டை இழுத்து
இருட்டைப் பிடித்தபடி
இருட்டைக் கடக்க முயலும்
இருட்டு நான்
இருட்டில்
இருட்டோடு நாங்கள்
நடந்துகொண்டே இருப்பது
எங்கள் பேரப்பிள்ளைகளுக்கான
வெளிச்சத்திற்காக
சன்ன வெளிச்சத்திற்கே
கண்கள் கூசும் எங்களைக்
கிண்டல் செய்யாதீர்
தலைமுறை தலைமுறையாய்
எங்களுக்கான வெளிச்சத்தையும் சேர்த்தே
தின்று வளர்ந்தவர்கள் நீங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...