”ராட்சசி” திரைப்படம் குறித்து அப்படியும் இப்படியுமாக எழுத நிறைய இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி என்னை வெகுவாக ஈர்த்தது.
இந்த வாரத்தில்
என்னை மிகவும் உலுக்கிப் போட்ட மூன்று செய்திகளோடு அந்தக் காட்சியை தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அந்தக் காட்சி நம்மை வெகுவாக நெகிழச் செய்கிறது.
முதலில்
அந்தக் காட்சியைப் பார்க்கலாம்
அந்த
ஊரின் அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக ஜோதிகா வருகிறார்.
அவரது
தலைமை ஆசிரியர் நியமனமே புனைவுத்தன்மை உடையது. ராணுவத்தில் கமாண்டராக, ஏன் முப்படைத் தளபதியாக இருந்தவர் எனினும் அரசுப் பள்ளியில் நேரிடையாக தலைமை ஆசிரியராக பணியேற்க இயலாது. ஆனால் அதுபற்றியெல்லாம் பிரிதொரு சமயம் பேசலாம்
அவர்
குப்பை மேடாகக் கிடந்த (சகல விதத்திலும்) அந்தப் பள்ளியை மேம்படுத்துகிறார். அது அந்த ஊரில் உள்ள மிகப் பெரிய மெட்ரிக் பள்ளியின் தாளாளருக்கு குடைச்சலைத் தருகிறது.
ஜோதிகாவைப்
பலிவாங்க என்ன என்னமோ செய்கிறார். அவருக்கு அரசுப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரும் உடந்தையாக இருக்கிறார்.
அந்தத்
தாளாளர் அரசுப் பள்ளியின் ஆண்டுவிழா அன்று ஒரு பூங்கொத்தை அனுப்பி வைக்கிறார். அத்தோடு ஐந்து லட்ச ரூபாய் பணத்தையும் அனுப்பி வைக்கிறார்.
பணம்
திரும்புகிறது.
அப்போது
அந்த உதவித் தலைமை ஆசிரியர் கேட்கிறார்,
“அப்ப பூங்கொத்துல குண்டு வைக்கலையா?”
உடனே
ஜோதிகாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அந்தத் தாளாளர் கிட்டத்தட்ட கெட்ட வார்த்தைகளாளேயே அவரைத் திட்டுவார்.
“”ஏண்டா, குழந்தைகளையா கொல்லச் சொல்கிறாய், நாசமாப் போறவனே. அவள நான் ஜெயிக்கனும். அதுக்காக குழந்தைகளைக் கொல்வதா. என் மூஞ்சியிலேயே முழிக்காதா, ஓடிப்போயிடு” என்பார்
அத்தோடு
அங்கிருப்பவர்களிடம், அவன் இருந்த இட்த்த பினாயில் ஊத்தி கழுவுங்க என்பார்
இப்போது கடந்த வாரத்து மூன்று விஷயங்களைப் பார்க்கலாம்
ஒன்று,
இந்தியாவை காக்க வேண்டுமானால் இந்து ஆண்கள் இஸ்லாமியப் பெண்களை கும்பலாக வல்லுறவு
செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மளிர் அணித் தலைவர்களுள் ஒருவரான சுனிதா
சிங் கவுர் சொன்னதாக வெளி வரும் தகவல்
இதை இல்லை என்று இன்னும் யாரும் மறுக்கவில்லை. மறுத்தால், அது உண்மையாக இருக்கும்
பட்சத்தில் மகிழ்ந்து இந்தப் பகுதியை பதிவில் இருந்து எடுத்துவிடலாம்
இரண்டு,
தேவதாசி முறையை சீர்குலைத்த பெரியாரை தம்மால் மன்னிக்கவே இயலாது என்ற திருமதி சின்மயி
அவர்களின் தாயாருடைய நேர்காணல்
யார் இவரிடம் பெரியாரை மன்னிக்க வேண்டி விண்ணப்பம் வைத்தது என்பதை அம்மையார் சொல்லவில்லை
என்பது வேறு
மூன்று,
கோலம் என்பதை தேர்தலுக்கான பிரச்சார யுக்தியாக முதன் முதலில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம்தான் பயன்படுத்தியது
“வாசலிலே ரெட்டை இலை கோலம் இடுங்கள்”
என்ற பாடல் ஒரு காலத்தில் பிரபலம்
இப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான வினையாற்றல் வடிவங்களில் கோலமும்
இடம் பிடித்திருக்கிறது
தமிழக வாசல்களில் “NO TO CAA”, “NO TO NRC” என்ற முழக்கங்கள் இடம் பெருகின்றன.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழக அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்கள்
“கோலம் போடும் பெண்களைப் பார்த்தால் குடும்பத் தலைவிகளைப் போலவே தெரியவில்லை”
என்று கூறியிருப்பதாக செய்திகள் வருகின்றன
இந்த மூன்றும் பெண்களை ஒரே நேர்கோட்டில் இழிவு செய்கின்றன.
என்ன தவறு செய்தேனும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை வெற்றிகொள்ள வேண்டும் என்று
காய்களை நகர்த்திய ராட்ச்சி பட்த்தின் மெட்ரிக் பள்ளி தாளாளர் அறத்தில் இவர்களைவிடவும்
பெரிய ஆளாக தெரிகிறார்
மேற்சொன்ன மூவரிடமும் கேட்க ஒன்று இருக்கிறது,
ஒருபோதும் பெண்களை சக மனுஷியாகவே பார்க்கமாட்டீர்களா?
01.01.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்