Friday, February 17, 2012

தக்காளி என் ஆசான்

அப்போது கீர்த்தனா நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தாள்.

குழந்தைகள் தினத்திற்காக அவர்கள் பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி வைத்திருந்தார்கள். தயாரித்து தரும்படி நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

“அப்பாக்கு வேலை கொஞ்சம் இருக்குடா. அடுத்த முறை எழுதித் தறேனே”

“இப்பவே வேணும்”

 “அப்பா பேப்பர் திருத்தணும்டா”

“ நீ என்ன வேணா திருத்து. ஆனா எழுதிக் கொடுத்துட்டு திருத்து”

“ஏண்டி உங்க மிஸ் கிட்ட கேக்க வேண்டியதுதானே”

“ஏன் எங்க மிஸ்சா பஸ்ஸுக்கு சில்லறை இல்லேன்னு ஏங்கிட்ட நூறு ரூபா கடன் வாங்கினாங்க”

“ சரி இந்தா பிடி உன் நூறு ரூபா,” நீட்டினேன்.

“ எனக்கு இதெல்லாம் வேணாம். உனக்கு தேவைப் பட்டப்ப நான் பணம் கொடுத்தேன்ல. இப்ப எனக்கு பேச்சு வேணும் எழுதிக் குடு”

ஒரு நூறு ரூபாய்க்கே இந்த நெருக்கடி எனில் பாரதப் பிரதமர்கள் உலக வங்கியிடம் ஏன் இப்படி கை கட்டி வாய் மூடுகிறார்கள் என்று புரிகிறது. இனி  கந்துக்காரனிடம் வாங்கினாலும் வாங்கலாம் கடனை இந்த வெள்ளைச்சியிடம் மட்டும் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்தவனாக,

“ சரி எழுத்தித் தரேன். நச்சரிக்காமப் போ”

“அது, ஆமா, அந்த நூறு ரூபாய்க்கு எப்ப கேட்டாலும் பேச்ச எழுத்தி தரணும் “

ஓடி விட்டாள். உலக வங்கிக்கே பிள்ளைகள்தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள் போல.

இரண்டு பக்கங்களுக்கு எழுதி முடித்து தேடிய போது அவள் குளிக்கப் போயிருந்தாள்.

விக்டோரியாவிடம் கொடுத்தேன்.

“ வெள்ளச்சி இம்ஸ தாங்கல பாப்பா. அவகிட்ட கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்” சொல்லி வண்டியை எடுக்க நகர்ந்தேன்.

மாலை வீடு திரும்பும் போது கீர்த்தியும் தக்காளியும் வாசலில் கொட்டப் பட்டுக் கிடந்த மணலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

”ஐ அப்பா”

“பேச்சு நல்லா இருந்துச்சா?”

“ சரியான லூசாப்பா நீ”

விக்டோரியாவும் கிஷோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மணல் இறைந்து வீணாவதில் இருந்த எரிச்சல்கூட விக்டோரியாவிடமிருந்து பறந்து போயிருந்தது.

”ஏண்டி பாப்பா?”

“பின்ன என்னப்பா? அவருக்கு, இவருக்கு, நிக்கறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு, வரவருக்குன்னு ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியேப்பா”

” வேற எப்படி சொல்றது?”

“ எல்லோருக்கும் வணக்கம்னு ஒத்த வரியில சொன்னாப் போதாதா?”

”ஒங்க அப்பா எதுலயுமே வழ வழாதான்”

விக்டோரியா முடிக்கும் முன் உள் புகுந்தான் தக்காளி. நீங்கள் அவனை ஹேமா என்று அவன் பட்டப் பெயரை சொல்லி அழைப்பதில் எனக்கு ஒன்றும் சங்கடம் இல்லை.

அவன் சொன்னான்,

”ஏங்க அக்கா இவ்வளோ நீளமா எல்லோருக்கும் வணக்கம்னு சொல்லிகிட்டு”

“அப்புறம்?”

கேட்டது கீர்த்திதான் என்றாலும் எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்தான்,

“எல்லோரையும் பார்த்து கும்பிட்டாப் போதாதா?”

பொடிசு அன்றையத் தேதியில் யூ.கே.ஜி தான் படித்துக் கொண்டிருந்தான்.

இப்பவும் சொல்கிறேன் கற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளிடம் ஏராளம் இருக்கிறது.

31 comments:

  1. அந்த நூறு ரூபாய்க்கு எப்ப கேட்டாலும் பேச்சு எழுதி தரணும் “
    உலக வங்கிக்கே பிள்ளைகள்தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள் போல... அருமை..

    ReplyDelete
  2. குழந்தைகள் நமக்குப் பாடம் கற்றுத் தரும் அளவுக்கு தேறிவிட்டார்கள். எல்லாவற்றிலும் வேகம்தான். நின்று நிதானமாய்ப் பேச நேரமே இருப்பதில்லை அவர்களுக்கு. சுவையான நிகழ்வு.

    ReplyDelete
  3. அப்போது என்றால் இப்போது எப்போது.? குழந்தைகளிடம் நூறு ரூபாயெல்லாம் கிடைக்குமா. ?கொடுத்து வைப்பீர்களா.? ஒரு முறை தொலைக்காட்சி பார்க்கும்போது யார் இந்த அழகி என்று கேட்டு விட்டேன். உடனே என் ஆறு வயது பேரன் என்னிடம் நீ அவளை லவ் செய்கிறாயா என்று கேட்டான். குழந்தைகள் லேசுப் பட்டவர்கள் அல்ல.

    ReplyDelete
  4. அவருக்கு, இவருக்கு, நிக்கறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு, வரவருக்குன்னு ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியேப்பா//

    :-)

    ReplyDelete
  5. \\\ Uma said...
    அந்த நூறு ரூபாய்க்கு எப்ப கேட்டாலும் பேச்சு எழுதி தரணும் “
    உலக வங்கிக்கே பிள்ளைகள்தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள் போல... அருமை..///

    மிக்க நன்றி உமா

    ReplyDelete
  6. \\\ கீதமஞ்சரி said...
    குழந்தைகள் நமக்குப் பாடம் கற்றுத் தரும் அளவுக்கு தேறிவிட்டார்கள். எல்லாவற்றிலும் வேகம்தான். நின்று நிதானமாய்ப் பேச நேரமே இருப்பதில்லை அவர்களுக்கு. சுவையான நிகழ்வு. ///

    மிக்க மகிழ்ச்சி தோழர். உங்களது தொடரின் வாசகன் நான்

    ReplyDelete
  7. \\\ G.M Balasubramaniam said...
    அப்போது என்றால் இப்போது எப்போது.? குழந்தைகளிடம் நூறு ரூபாயெல்லாம் கிடைக்குமா. ?கொடுத்து வைப்பீர்களா.? ஒரு முறை தொலைக்காட்சி பார்க்கும்போது யார் இந்த அழகி என்று கேட்டு விட்டேன். உடனே என் ஆறு வயது பேரன் என்னிடம் நீ அவளை லவ் செய்கிறாயா என்று கேட்டான். குழந்தைகள் லேசுப் பட்டவர்கள் அல்ல.\\\

    ஆமாம் அய்யா குழந்தைகள் லேசுப் பட்டவர்கள் அல்லதான்.

    ReplyDelete
  8. \\\ நிலாமகள் said...
    அவருக்கு, இவருக்கு, நிக்கறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு, வரவருக்குன்னு ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியேப்பா//

    :-)///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  9. எல்லோருக்கும் வணக்கம்னு ஒத்த வரியில சொன்னாப் போதாதா?”

    நிஜ்ம் தான். நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தனக்குனு தனியா வணக்கம் சொன்னா மார்க் போடறவங்களும் இருக்காங்க. ஆனா குழந்தைங்க அத எதிர்பார்ப்பதில்லை. படிப்பதற்கு சுகமாயிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  11. கமல்ராஜ் ருவியேJuly 26, 2012 at 10:56 PM

    சிறிதேயாயினும்... எளிதாய் விளங்காத ஒரு வாழ் நெறியை ஒரு நிகழ்வாகத் தந்ததாய் நான் உணர்கிறேன்...

    வெள்ளச்சி என்று செல்ல, அழகுக் குழந்தையை தந்தை குறிப்பிட்ட விதம் ...அக்குழந்தையை வர்ணிக்க வேறு சொற்றோடர்கள் தேவையற்றதாய் ஆனது... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. குழந்தைகள்னா சும்மாவ்வா!!! :)))

    ReplyDelete
  13. அய்யன்பேட்டை தனசேகரன்July 26, 2012 at 11:02 PM

    பூக்கும் நேர மகரந்த நறுமணம்...! மலரும் மழலையின் சந்தேக தருணம்...!!

    ReplyDelete
  14. கமல்ராஜ் ருவியேJuly 26, 2012 at 11:02 PM

    சிறியதாயினும்... எளிதாய் விவரிக்க முடியாத சித்தாந்தத்தை .. எளிமையாய் சிறு நிகழ்வாய் விளக்கிய விதம் அருமை...
    நல்ல ஆசிரியன்... தன் மாணவனிடம் கற்கிறான்
    தகப்பன் பிள்ளையிடமிருந்து கற்கிறான்

    அந்த பிள்ளையின் குண நலன்களை வெள்ளச்சி என்ற சிறு வார்தையில் முடித்த விதம் ... உங்கள் எழுத்தின் அழகு.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. There is no doubt >.now a days youngsters are very intelligent s.we must encourage them with confidence..
    vimalavidya@gmail.com

    ReplyDelete
  16. சிறிதாய்... எளிமையாய் விவரிக்க முடியாத சித்தாந்ததை சிறு நிகழ்வுடன் அமைத்த விதம் அருமை... நல்ல ஆசிரியன் .. தன் மாணவனிடம் கற்கிறான்... தந்தை தன் பிள்ளையிடம் கற்கிறான்.............. வெள்ளச்சி என்ற ஒற்றை வார்த்தையில் அந்த குழந்தையின் அழகு சுட்டித்தனம் குணாதிசயம் விளக்கிய விதம் உங்கள் எழுத்தின் சிறப்பு வாழ்த்துக்கள்...

    Kamalraj Rouvier

    ReplyDelete
  17. //// Rathnavel Natarajan said...
    எல்லோருக்கும் வணக்கம்னு ஒத்த வரியில சொன்னாப் போதாதா?”

    நிஜ்ம் தான். நன்றி. வாழ்த்துகள். ///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  18. /// நபூ.சௌந்தர் said...
    தனக்குனு தனியா வணக்கம் சொன்னா மார்க் போடறவங்களும் இருக்காங்க. ஆனா குழந்தைங்க அத எதிர்பார்ப்பதில்லை. படிப்பதற்கு சுகமாயிருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி... ///

    குழந்தைகள்னா சும்மாவா?

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. /// கமல்ராஜ் ருவியே said...
    சிறிதேயாயினும்... எளிதாய் விளங்காத ஒரு வாழ் நெறியை ஒரு நிகழ்வாகத் தந்ததாய் நான் உணர்கிறேன்...

    வெள்ளச்சி என்று செல்ல, அழகுக் குழந்தையை தந்தை குறிப்பிட்ட விதம் ...அக்குழந்தையை வர்ணிக்க வேறு சொற்றோடர்கள் தேவையற்றதாய் ஆனது... வாழ்த்துக்கள் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  20. /// வில்லனின் விநோதங்கள் said...
    குழந்தைகள்னா சும்மாவ்வா!!! :))) ///

    அதானே குழந்தைகள்னா சும்மாவா தோழர்?

    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. குழந்தைகள் மனம் வெள்ளை என்பது எத்துனை உண்மையானது?

    எல்லாரும் சமம், ஒரு கும்பிடு போதுமே!
    என அவர்களின் சிந்தனை எவ்வளவு ஆழமானது.

    நான் பெரியவன் நீ பெரியவன் என பெரியவர்கள் நினைப்பதால்தான்,
    இவரை முதலில் வரவேற்க்க வேண்டும் அதற்க்கடுத்து இவர்,
    அதற்க்கடுத்து இவர்... இல்லை இல்லை, இவர் தான் இரண்டாவது என நாம் விவாதிப்பது எத்துனை அற்ப்பமானது?

    கவிஞரின் இந்த வரிதான் என் நினைவில் உதித்தது!
    எத்தனை பெரிய மனிதருக்கு எத்துனை சிறிய மனம் இருக்கு,
    எத்துனை சிறிய பறவைக்கு எத்துனை பெரிய மனம் இருக்கு.

    குழந்தகளின் மனம் சிறிய பறவைப் போன்றது தான்.

    ReplyDelete
  22. ///// அய்யன்பேட்டை தனசேகரன் said...
    பூக்கும் நேர மகரந்த நறுமணம்...! மலரும் மழலையின் சந்தேக தருணம்...!! ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  23. //// Kaarti Keyan R said...
    குழந்தைகள் மனம் வெள்ளை என்பது எத்துனை உண்மையானது?

    எல்லாரும் சமம், ஒரு கும்பிடு போதுமே!
    என அவர்களின் சிந்தனை எவ்வளவு ஆழமானது.

    நான் பெரியவன் நீ பெரியவன் என பெரியவர்கள் நினைப்பதால்தான்,
    இவரை முதலில் வரவேற்க்க வேண்டும் அதற்க்கடுத்து இவர்,
    அதற்க்கடுத்து இவர்... இல்லை இல்லை, இவர் தான் இரண்டாவது என நாம் விவாதிப்பது எத்துனை அற்ப்பமானது?

    கவிஞரின் இந்த வரிதான் என் நினைவில் உதித்தது!
    எத்தனை பெரிய மனிதருக்கு எத்துனை சிறிய மனம் இருக்கு,
    எத்துனை சிறிய பறவைக்கு எத்துனை பெரிய மனம் இருக்கு.

    குழந்தகளின் மனம் சிறிய பறவைப் போன்றது தான் ////

    ஆமாம் ஆமாம் ஆமாம் தோழர்

    ReplyDelete
  24. /// கமல்ராஜ் ருவியே said...
    சிறியதாயினும்... எளிதாய் விவரிக்க முடியாத சித்தாந்தத்தை .. எளிமையாய் சிறு நிகழ்வாய் விளக்கிய விதம் அருமை...
    நல்ல ஆசிரியன்... தன் மாணவனிடம் கற்கிறான்
    தகப்பன் பிள்ளையிடமிருந்து கற்கிறான்

    அந்த பிள்ளையின் குண நலன்களை வெள்ளச்சி என்ற சிறு வார்தையில் முடித்த விதம் ... உங்கள் எழுத்தின் அழகு.... வாழ்த்துக்கள் ///

    மிக சரியாய் சொன்னீர்கள் தோழர். நான் தொடர்ந்து கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  25. /// vimalavidya said...
    There is no doubt >.now a days youngsters are very intelligent s.we must encourage them with confidence..
    vimalavidya@gmail.com ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  26. சற்குரு ஜகி வாசுதேவ் ஒருமுறை எழுதியது" குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முயற்சிப்பதை விட அவர்களிடம் கற்றுக்கொள்ள முயற்சிப்பதே மேல்" நாம் நமது மகிழ்வுக்கு சூழ்லையை சார்ந்து நிற்கின்றோம் அவர்கள் சூழலை தங்களுக்கனதாக்கி விடுகின்றனர். தங்கள் உற்சாகத்தை மகிழ்வை கொண்டாட்டத்தை சூழல் கையில் ஒப்படைப்பதில்லை வளர்ந்து விட்டதாக நம்பும் நம்மை போல......

    ReplyDelete
  27. //// omagan said...
    சற்குரு ஜகி வாசுதேவ் ஒருமுறை எழுதியது" குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க முயற்சிப்பதை விட அவர்களிடம் கற்றுக்கொள்ள முயற்சிப்பதே மேல்" நாம் நமது மகிழ்வுக்கு சூழ்லையை சார்ந்து நிற்கின்றோம் அவர்கள் சூழலை தங்களுக்கனதாக்கி விடுகின்றனர். தங்கள் உற்சாகத்தை மகிழ்வை கொண்டாட்டத்தை சூழல் கையில் ஒப்படைப்பதில்லை வளர்ந்து விட்டதாக நம்பும் நம்மை போல......////

    மிக்க நன்றி கோமகன்.

    அதுதான் உண்மை.

    ReplyDelete
  28. அருமை . குழந்தைகள் தான் நம்மை அவ்வப்போது பெற்றோர் ஆக்குவது.. அவர்கள் வளர கூடவே நாமும்..

    ReplyDelete
  29. /// எண்ணங்கள் 13189034291840215795 said...
    அருமை . குழந்தைகள் தான் நம்மை அவ்வப்போது பெற்றோர் ஆக்குவது.. அவர்கள் வளர கூடவே நாமும்..///

    ஆமாம் ஆமாம் ஆமாம் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  30. “ சரியான லூசாப்பா நீ”
    குழந்தைகள் நம்மை இப்படிச் சொல்லும்போது நம் மனசுக்குள் ஒரு சந்தோசம் வருகிறது. அனுபவத்திருக்கிறீர்களா..

    ReplyDelete
  31. /// Radha Krishnan said...
    “ சரியான லூசாப்பா நீ”
    குழந்தைகள் நம்மை இப்படிச் சொல்லும்போது நம் மனசுக்குள் ஒரு சந்தோசம் வருகிறது. அனுபவத்திருக்கிறீர்களா..///

    மிக்க நன்றி தோழர்.

    பறந்திருக்கிறேன் தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...