Monday, August 8, 2011

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

” வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது
வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறையாது
கள்ளர்க்கோ பயமில்லை
காவலுக்கோ மிக எளிது”

என்பதாக நீளும் அவ்வையின் கல்வி குறித்த பாடல் ஒன்று. நீர் , நெருப்பு, காற்று போன்ற எதனாலும் கல்வியை அழிக்க முடியாது.  இன்னும் சொல்லப் போனால் எதன் உருவத்தையும் மாற்றி, அழித்து, சிதைத்துப் போடும் காலத்தாலும் கல்வியை சேதப் படுத்த முடியாது, என்பதாக கல்வியின் பெருமைகளை அவ்வை பட்டியலிட்டு சென்றிருப்பின் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

 “ காவலுக்கோ மிக எளிது” என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது அவ்வைக்கு?. எனில் கல்வியும் காவலுக்குரிய பொருள்தானா?. காவல் காக்காமல் போனால் கல்வி களவு போய்விடுமா?. கல்வியைத் திருடவும் ஆட்கள் உண்டா?. எனில் தங்கம் போல, மற்ற பொருட்கள் போல கல்வியும் ஒரு பொருள்தானா?. “காவலுக்கோ மிக எளிது” என்கிறாரே, எனில் தங்கத்தைப் போன்று மிகவும் சிரமமெடுத்து காவல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனினும் சன்னமாகவேனும் காவல் தேவைப் படும் பொருளாகத்தான் கல்வி அவ்வை காலத்திலேயே இருந்ததா?. என்றெல்லாம் யோசித்த பொழுதுகள் உண்டு.

இப்போது தெளிவாகப் புரிகிறது.  ஒழுங்காகக் காவலை செய்யத் தவறினோம் என்றால் மேட்டுக் குடியும் கல்வியை சந்தைப் படுத்துவதில் வெற்றி கண்ட கல்வி வணிகர்களும் கல்வியைக் களவாண்டு போய் தங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்துப் பூட்டி விடுவார்கள் என்பது. மட்டுமல்ல , அவ்வை காலத்தில் வேண்டுமானால் காவலுக்கு எளிதான ஒரு பொருளாக இருந்த கல்வி இன்று வெகு சிரத்தை எடுத்து காவல் காக்க வேண்டிய ஒரு பொருளாக மாறிப் போயிருக்கிறது.

”கல்வியை எப்படித் திருட முடியும்?” என்று வசீகரப் புன்னகையோடு சிலர் கேட்கக் கூடும். அவர்களிடம்தான் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள்தான் கல்வித் திருடர்கள்.

சரி, கல்வி களவு போகிறது என்று கத்துகிறார்களே. அதில் நியாயம் உள்ளதா?. உள்ளது எனில் கல்வியை எப்படி களவாட முடியும்?. ”ஒருவனிடம் இருப்பதை அபகரிப்பதுதானே களவு எனப்படும். எனில், ஒருவனிடம் இருக்கும் கல்வியை எப்படி அபகரிக்க முடியும்?” என்றும் சிலர் நக்கலடிக்கக் கூடும்.

அத்தகைய கனவான்களுக்காக சொல்கிறேன், இருப்பதை அபகரிப்பதும் களவுதான். அதே போல ஒருவனுக்கு உரியதை அவனுக்குத் தராமல், அவனது உரிமையை அவன் பெற்று விடாமல்,  இன்னும் சொல்லப் போனால் அது அவனது உரிமை என்பதையே அவன் உணர்ந்து விடாமல், மிகுந்த கவனத்தோடும், அதற்கென்றே சில நடை முறை சித்தாந்தங்களை, தேவைப் படும் பட்சத்தில் சட்டங்களையும் தீட்டி,  இவை எல்லாம் கடந்து யாருக்காவது தனது உரிமை குறித்து உணர்வு வந்து விட்டால் அவனை சித்திரவதை, ஏன் பல சமயங்களில் கொலையே செய்தும் அவனது உரிமையை அவன் பெறாமல் பார்த்துக் கொள்வதற்கும் களவு என்றுதான் பெயர்.

கல்வி விஷயத்தில் இது நடந்ததா?

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் கூட தன் பிள்ளையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியதை குற்றமாய் பாவித்து அந்தப் பெற்றோர்களை மரத்தில் கட்டி வைத்து சாட்டையால், சவுக்கால் அடித்த வரலாறு கீழத் தஞ்சை மாவட்டம் முழுக்க விரவிக் கிடக்கிறது.

இதை கீழத் தஞ்சைப் பகுதியோடு சுருக்கிப் பார்ப்பதே கூட குற்றம்தான்.

 “நான் பூர்வ பௌத்தன்” என்ற டி.தர்மராஜனின் நூலில் காணும் கீழ்காணும் சம்பவம் உண்மையை அப்படியே அம்மணமாகப் புட்டுப் போடுகிறது.வாசிக்க வாசிக்க உண்மை நம்மை கொதிக்கச் செய்கிறது.

1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா மகாலில் “சென்னை மகா சபை கூட்டம்”  நடை பெறுகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பிரதி நிதிகளின் பிரச்சினைகளை கேட்டு விவாதித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை சமர்ப்பிப்பதே அந்தக் கூட்டத்தின் நோக்கம்.

அயோத்தி தாசப் பண்டிதரும் அதில் கலந்து கொள்கிறார். பறையர் குலத்தவரின் பிரதிநிதியாய் தான் தனது குலத்தவரின் குறைகளை பேசுவதற்காக வந்திருப்பதாக சொல்கிறார்.  ஆலயங்களில் வழிபடும் உரிமை,  வெறுமனே தரிசாகக் கிடக்கும் நிலங்களை தனது குலத்தை சார்ந்த கிராம வாசிகளுக்கு பிரித்துக் கொடுக்க அரசுக்கு பரிந்துரைத்தல், தனது இனக் குழந்தைகளுக்கு நான்காவது வரை படிப்பதற்கு இலவச பாடசாலைகள் போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார்.

இந்தக் கட்டுரைக்கு தேவையில்லைதான் என்றாலும் பண்டிதரின் இந்தக் கோரிக்ககளை நிராகரித்துப் பேசிய தஞ்சையை சேர்ந்த சிவராம சாஸ்திரி முதலில் ஆலய நுழைவு உரிமையை நிராகரித்துப் பேசியதையும் சேர்த்தே  பார்ப்பது முற்றிலும் பொருத்தமானதாகும்.

“பறையர் குலத்தின் பிரதி நிதியாய் வந்திருக்கும் அன்பருக்கு நான் பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன். அந்த அன்பர் எங்களை ஏன் சிவன் கோவிலுக்குள்ளும் விஷ்ணுவின் கோவிலுக்குள்ளும் சேர்க்க மறுக்கிறீர்கள் என கேட்கிறார். இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சிவனும் விஷ்ணுவும் என்றைக்குமே அவர்கள் கடவுள்கள் இல்லை. அவர்கள் கும்பிடுவதற்கு என்று மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ண சாமி போன்ற
 சில தெய்வங்களை அவர்களுக்கு நாம் கொடுத்திருக்கிறோம், என்றபோது உங்களுடைய கடவுள்கள் என்றைக்கும் எங்களுக்கு வேண்டாம் என்று கம்பீரமாக தனது கோரிக்கையை தானே தூக்கிக் கிடாசிய பண்டிதர் தன் இனக் குழந்தைகளுக்கு நான்காம் வகுப்புவரைக்குமான இலவசப் பாடசாலைகளை துவக்க இந்த சபை அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும் எனக் கேட்கிறார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்துப் பேசியதும் அதே சிவராம சாஸ்திரிதான்.” கோயிலில் சேர்க்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்ட அன்பர் இப்போது நான் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்...”என்று ஒரு நிபந்தனையோடே பேசத் தொடங்குகிறார். அவர் சொல்வதை இவர் ஏற்க வேண்டுமாம். முதலில் முதல் கோரிக்கை நிராகரிக்கப் பட்டதை பண்டிதர் ஏற்றார் என்பதே ஏற்க இயலாதது. ஏற்பது எனில் ஆமாம் நீங்கள் சொல்வது சரி . அதை நாங்கள் கேட்டிருக்கக் கூடாதுதான், என்றால் ஏற்பது. ஆனால் பண்டிதர் அப்படி செய்ய வில்லை. “ போங்கடா நீங்களும் உங்க சாமிகளும்”  என்பதே அவரது தொனியாக இருந்தது. இதையே ஏற்றதாகப் பதிவதுதான் மேட்டுக் குடியின் சாமர்த்தியம்.

ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொன்னபின் எதற்கு வியாக்கியானம் தேவைப் படுகிறது?. அவர்களது முடிவை ஆரம்பமே சொல்லிவிடுவதால் அதை விட்டு விடலாம்தான். ஆனால் அதற்கு பண்டிதரின் பதில் அவசியம் என்பதால் அதையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.

சிவராம சாஸ்திரி திமிரோடு தொடர்கிறார், “கல்வி கற்றலும், புத்தி சாதுர்யமும் பயிற்சியாலோ , கட்டாயத்தாலோ, வருவது இல்லை. விவேகமும் புத்தியும் பிராமண விந்திற்கு மட்டுமே சொந்தம் என்பதை அன்பர் உணரவேண்டும். ஆதி என்ற பறையர் குலப் பெண்ணுக்கு பிறந்தவர் என்றாலும் அவருடைய தகப்பனார் பகவான் ஒரு பிராமணர். அதனால்தான் வள்ளுவரால் குறளை எழுத முடிந்தது.

எவ்வளவு திமிர். புத்தியும் கல்வியும் பயிற்சியினால் வருவது இல்லை என்பது எவ்வளவு ஆனவமான, சாதித் திமிரோடு கூடிய எல்லோருக்கும் கல்வி என்ற இன்றைய ஒடுக்கப் பட்ட திரளின், உழைக்கும் பெரு மக்களின் கோரிக்கைக்கு எதிரானது.

”சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்”  என்கிற நம் வீரியம் மிக்க பழ மொழியை நக்கலடிக்கிற பதில் இல்லையா. சரி சிவராம சாஸ்திரிக்கள் அந்தக் காலம் எனலாம்.

இப்போதும் ஒருவர் சிவராம சாஸ்திரியின் குரலாய் மாறிப் போனாரே.  எல்லா மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்றதும் நூலுக்கும் காலனிக்கும் ஒரே பாடத் திட்டமா? அடுக்குமா? அது கட்ட மாட்டு வண்டி இது ராக்கெட் அல்லவா என்பது போல் இல்லாத சிண்டை சினக்க சினக்க ஆட்டும் சோக்கள் சிவராம சாஸ்திரிகளன்றி வேறு என்ன?

மனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அப்போது மனு, அப்புறம் ராஜ கோபாலாச்சாரி, இப்போது சோ.ஆக எல்லாக் காலத்திலும் மனு உண்டு.

இந்தக் கட்டுரைக்கு தேவையே இல்லை எனினும் சிவராமனுக்கு பண்டிதர் கொடுத்த பதில் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நம்மை உற்சாகப் படுத்தி நமது கங்கின் சாம்பல் ஊதக் கூடிய வார்த்தைகள் அவை என்பதால் பதிகிறேன்.

சிவராமனை இடை மறித்து பண்டிதர் கேட்கிறார்,

அய்யா, சிலது கேட்க வேண்டும்

கேளுங்கள்

“கல்வியும் விவேகமும் பிராமண விந்திற்கே தொடர்புடையதென்றால் BA, MA போன்ற பட்டங்களை பெற்றிருக்கக் கூடியபறையர்கள் அனைவரும் யாருடைய விந்திற்குப் பிறந்தவர்கள்? அதே போல் இன்றைய தினம் சிறையில் இருக்கும் பிராமணர்கள் யாருடைய விந்திற்குப் பிறந்தவர்கள்?”

இப்போது வரலாம் பஞ்சாயத்திற்கு. இப்போது என்ன நடந்து விட்டது? இது ஒன்றும் எல்லோரையும் புத்தகம் கைக்கு வந்த நாளே ஒன்று படுத்தி விடக் கூடிய ஒன்றல்ல. புத்தகம் கூட ஒன்றும் அல்ல. பாடத்திட்டம் மட்டுமே ஒன்று. பொதுப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவனின் அறிவியல் பாட[ப் புத்தகத்தில் இரண்டாம் பாடம் ‘தண்ணீர்’  எனில் மெட்ரிக் பையனின் இரண்டாவது பாடமும்  ‘தண்ணீர்’ . அவ்வளவுதான். பொதுப் பாஷை நீசத் தனமானது என்று அவர்கள் கருதினால் அவர்களது தேவ பாஷையிலே ‘ஜலமாய்’ கொட்டலாம்.

இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு. இன்னமும் உன் பிள்ளை ரேமண்ட்ஸில் பள்ளிக்கு வந்தால் என் பிள்ளை கிழிந்த உடையோடுதான் வருகிறான். உன் பிள்ளை பாட்டா போட்டு வந்தால் என் பிள்ளை வெறுங்காலோடுதான் வருகிறான். உன்பிள்ளை ஏ.சி அறையிலெனில் என் பிள்ளை இன்னமும் மரத்தடியில்தான்.

இவ்வளவு வேறு பாடுகள் இருந்த போதும் அவன் குதிக்கிறானே ஏன்?

காரணம் இதுதான். அவன் காலத்தில் ஒன்றும் அவன் குடி முழுகிப் போய்விடாது என்பது அவனுக்கு நன்றாகவேத் தெரியும். இது ஒரு சின்னத் தொடக்கம் என்பதும் அவனுக்குத் தெரியும்.

சமச்சீர் திட்டத்தில் குறை என்பது கூட சரி செய்யக் கூடியதே என்பதும் அவனுக்குத் தெரியும் .மட்டுமல்ல சமச்சீர் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதோ சரி செய்து நல்ல பொதுவான ஒரு பாடத்திட்டம் நோக்கி நகர்வதோ அல்ல அவனது எதிர்ப்பின் நோக்கம்.

அவனுக்குத் தெரியும் இந்தத் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டு பையப் பைய அதன் குறைகள் சரி செய்யப் படுமானால் அதன் விளைவு அவனது பேரனுக்குப் பேரன் நம்முடைய பேரனுக்குப் பேரனோடு ஒன்றாக எல்லா நிலைகளிலும் சமதையாக அமர வேண்டி வரும் என்று அவனுக்குத் தெரியும் .  அதுதான் கொதிக்கிறான்.

நேற்றைய ஜூனியர் விகடனில் கழுகாரிடம் “புதிதாக உதயம் ஆகியுள்ளதெற்கு சூடானுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?” என்று ஒரு கேள்வி

கழுகார் சொல்கிறார்,

“ மொத்தமே பதினைந்து சதவிகிதம் பேர்தானங்கு கல்வி அறிவு உடையவர்கள். கல்வியில் பின் தங்கியுள்ள தெற்கு சூடான் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் உங்களுக்கு தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் கல்விதான் அதை தக்க வைக்கப் பயன்படும்.”

மண்ணை தக்க வைக்க வேண்டுமெனில் கல்வி அவசியம். கல்வி பெறாத சமூகம் தனது மண் மீது தனக்குள்ள உரிமையை இழந்து அடுத்தவன் ஆதிக்கத்தின் கீழ் போகும்.

கல்வி சமப்பட்டால் சகலமும் சமப்படும். அல்லது கல்வி மட்டும் சமப்பட்டு விட்டால் அச்சமூகம் அனைத்திலும் சமத்துவம் கேட்கும். அதற்காய்ப் போராடும்.

ஆக கல்வியில் சமத்துவத்தை இன்று விட்டுக் கொடுத்தால் நாளை சகலமும் சமப்படும். அப்படி சமப் பட்டால் தனது ஆதிக்கம் பறி போகும். இன்னும் பச்சையாக சொல்வதெனில் அப்புறம் தனது சந்ததி உழைக்க வேண்டி வரும் போன்ற உண்மைகளே சமச் சீருக்கு எதிராய் அவனை கிளப்புகிறது.

ஆக சமச்சீரின் பலம் நம் எதிரிக்குப் புரிகிறது. நமக்கெப்போது புரியப் போகிறது?





39 comments:

  1. மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய நண்பர் திரு.எட்வின் அவர்களுக்கு,
    வணக்கம்.
    இந்த அரசின் சமச் சீர் கல்விக் கொள்கை குறித்தான உங்கள் சிந்தனையோட்டத்தைப் படித்தேன். மிகத் தெளிவாகவும் வாதத்துக்குரியதாகவும் உள்ளது.
    உங்கள் மனம்,கொள்கைககளை இந்தக் கட்டுரை எனக்கு 60 சதம் படம் காட்டியிருக்கிறது.
    உங்கள் உணர்வுகளில் 80 சதம் பங்கு கொள்கிறேன்.
    எனினும் மதம்,இனம்,அரசியல் முதலான கொள்கைகளில்,குறிப்பாக இந்தியத் தத்துவங்களின் மெய்ஞ்ஞான ஊற்றாகிய வேதம் வகுத்த நெறிகளில் இருந்தும்,அவை காட்டிய வழிகளில் இருந்தும் இந்த இந்திய சமூகத்தை உணர்கின்ற நிலைப்பாடுகளில் உங்களிடமிருந்து மாறுபட்டுப் பேச வேண்டியவனாக இருக்கின்றேன்.
    நான் அந்தணனோ,ஆரிய வருடியோ அல்லன்;ஆயினும் திராவிட மாயை, நம் தமிழனை மிகவும் கீழ்ப் பட்டவனாக்கி விட்டதென்பதை காலச் சக்கரத்தின் சுழற்சியிலிருந்தே பல்வேறு உதாரணம் மற்றும் உண்மைகளின் மூலம் பேச விரும்புகின்றவன் நான்.
    இதை வெளிப்படுத்துகின்ற,திராவிட மாயைக்கெதிரான எனது இரண்டு கட்டுரைகளை என்னுடைய ‘உலகத் தமிழர் மையம்’ வலைத்தளத்தில் படித்து விட்டுத் தாங்கள் என்னுடன் பேச வருவதை வரவேற்கின்றேன்.ஆனால், இது கட்டாயமும் அல்ல; நிபந்தனையும் அல்ல.
    ஆயினும்,தாங்கள் இந்த தமிழ் சமூகத்தின் மீதும் அதன் அறிவார்ந்த வளர்ச்சியின் மீதும் காட்டுகின்ற அக்கறையை நான் பாராட்டாது விடுவேனாகில் அது ஒரு மானுடக் குற்றம் ஆகி விடும் என்பதை உணர்கிறேன்.
    எனவே, உளமார்ந்த அன்பின் வெளிப்பாட்டில் உங்கள் கட்டுரையை,அதன் நோக்கத்தை மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

    இவண்-
    நட்புள்ள,
    கிருஷ்ணன் பாலா
    8.8.2011/22:50 Hrs
    http:http://ulagathamizharmaiyam.blogspot.com

    ReplyDelete
  3. அன்பின் தோழருக்கு வணக்கம். தாங்கள் 20 சதம் முரண்படுவதை மிகுந்த மரியாதையோடு அணுகுகிறேன். நான் திராவிடவாதியோ அல்லது வெற்று கோஷங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டவனோ அல்ல. தாய் மொழியில் பிள்ளைகள் படிப்பது சரி சொல்பவன்.என் குழந்தைகள் இரண்டும் தமிழ் வழிக் கல்விதான். அதற்க்காக ஆங்கிலம் வேண்டாமென்று சொல்பவனில்லை. இன்னும் சொல்லப் போனால் எதுனை மொழிகளை கற்க இயலுமோ அத்துனையையும் கற்க வேண்டுமென்பதில் அக்கறை உள்ளவன். எது திராவிடம் எது ஆரியம் என்பதிலுமே பலருக்கு தெளிவில்லை என்பதை உணர்ந்தே இருப்பவன்.

    அவசியம் உங்கள் வலையை வாசிப்பேன்.

    ஆனால் நீங்கள் உடன்படாது போயினும் சிவராம ச்சஸ்த்திரி போன்றவர்களை, சோ போன்றவர்களின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்துவதை எனது கடமையாக உணர்பவன்.

    உங்கள் நட்பை மிகுந்த கண்னியத்தோடு நீங்கள் வைத்துள்ள கருத்தை ஏற்க இயலாது போயினும் தங்கள் பால் உள்ள மரியாதையை இது கூட்டவே செய்தது.
    தொடர்ந்து பேசுவோம்.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  4. @உலகத் தமிழர் மையம்
    உங்கள் நட்பை ஏற்கும் அதே வேளையில்...என்று இருந்திருக்க வேண்டும் தோழர் அப்படியே நீங்கள் கொள்ள வேண்டுமாய் வேண்டுகிறேன்

    ReplyDelete
  5. "மனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அப்போது மனு, அப்புறம் ராஜ கோபாலாச்சாரி, இப்போது சோ.ஆக எல்லாக் காலத்திலும் மனு உண்டு"

    அருமையான வரிகள்.. எளிமையாக எழுதி உள்ளீர்கள். கல்வி என்பது சமூக அதிகாரத்தின் நுண்வடிவம். அது சமத்துவத்தால் அதிகாரத்தை ஒன்றுமில்லாமல் எதிர்காலத்தில் ஆக்கிவிடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உண்மையில் ஒரு அரசதிகாரம் உருவாக்கப்டும் புள்ளியே கல்விதான். அதனால் இத்தனை கொதித்து போகிறார்கள். இன்னும் விரிவாக இதன் கோட்பாட்டு அரசியல் பின்புலங்கள் ஆராயப்படவேண்டும். நேரமின்மையால் எழுத இலவில்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பார்ப்னியம் என்பது சமத்துவமின்மைதான் என்கிற அம்பேத்கர் கருத்து தீர்க்கதரிசனமானது.

    நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துகள். மிக நல்ல கருத்துகள்..

    இன்றும் மாறாமல் இருந்துகொண்டிருப்பது அருவருப்பை தருகின்றது. இன்று அவர்கள் ஒதுக்கிய எல்லா சாதியினரும் தம் கல்வியால் முன்னேறி பல நாடுகளில் வேலை செய்து முன்னேறிக்காட்டியுள்ளனர்.. அவர்களோடு ஒன்றாக இந்த ஆதிக்க சாதியினருமே வேலை செய்கின்றனர்.. நீங்கள் சொல்வது போல " சோ " போன்ற சிலரின் சலசலப்பு இவை..

    ReplyDelete
  7. ஸ்டாலின் மகள் பள்ளியும் வசதியானவருக்கானதுதான்.. எங்கே போச்சு இவர்கள் திராவிடம் , சமம் எல்லாம்..?..

    அரசு பள்ளியை மேம்படுத்த நாம் மக்கள் எல்லோரும் ஒன்று சேரணும்.. அங்கே புரட்டியை கொண்டு வரணும்..

    ReplyDelete
  8. என்னால் தீவிரமாகவோ கனத்தோ சிந்திக்க இயலாது.

    ReplyDelete
  9. @எண்ணங்கள் 13189034291840215795

    மிக்க நன்றி தோழர்.
    இதை அரு




    ல் கூர்ந்து சின்ன சலசலப்பு என்று ஒதுக்கிவிடக் கூடாது. இந்த இரண்டு மூன்று நபர்களினால் இரண்டரை மாதங்களாக பள்ளிகளில் புத்தகம் இல்லாத நிலையை உருவாக்க முடிகிறது என்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமாக்கு இதில் ஸ்டாலின், அவர் இவர் எல்லாம் கிடையாது.

    ReplyDelete
  10. @எண்ணங்கள் 13189034291840215795

    மிக்க நன்றி தோழர்.
    இதை அரு




    ல் கூர்ந்து சின்ன சலசலப்பு என்று ஒதுக்கிவிடக் கூடாது. இந்த இரண்டு மூன்று நபர்களினால் இரண்டரை மாதங்களாக பள்ளிகளில் புத்தகம் இல்லாத நிலையை உருவாக்க முடிகிறது என்பதை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமாக்கு இதில் ஸ்டாலின், அவர் இவர் எல்லாம் கிடையாது.

    ReplyDelete
  11. @ ஜமாலன்

    வணக்கம் ஜமாலன். மிக்க நன்றி. இந்த அளவுக்கு மட்டுமே என்னால் முடிந்தது. தோழர்கள் இன்னும் நிறைய இன்னும் வலுவாய் இன்னும் சக்த்தியாய் தருவார்கள்.

    ஆனாலும் என்னால் முடிந்ததை செய்துளேன் என்ற திருப்தி உள்ளது.

    கொஞ்சம் கொளுத்திப் போடுவோமே.

    மிக்க நன்றி ஜமாலன்

    ReplyDelete
  12. "கல்வி சமப்பட்டால் சகலமும் சமப்படும். அல்லது கல்வி மட்டும் சமப்பட்டு விட்டால் அச்சமூகம் அனைத்திலும் சமத்துவம் கேட்கும். அதற்காய்ப் போராடும்"
    உண்மை- இதை மறைக்கத்தான் அரசு இவ்வளவு போராடுகிறது. இதை டைப் செய்யும் போது உச்ச நீதிமன்றம் அரசுக்கு எதிராக சமசீர் கல்வியில் தீர்ப்பு வழங்கயுள்ளது. வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. //ஒருவனுக்கு உரியதை அவனுக்குத் தராமல், அவனது உரிமையை அவன் பெற்று விடாமல், இன்னும் சொல்லப் போனால் அது அவனது உரிமை என்பதையே அவன் உணர்ந்து விடாமல்...// Mukkiyamaanadhoar padhivu!

    ReplyDelete
  14. உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்து சில நிமிடங்களில் உங்கள் கட்டுரையைப் பார்க்க முடிந்தது.

    நல்ல கட்டுரைக்கு நன்றி.
    கிடைத்த தீர்ப்புக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. கல்வி மீது மெய்யான அக்கறை கொண்ட கல்வியாளரின் பதிவாக இதைப் பார்க்கிறேன்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா ! என்னுடைய தாழ்மையான கருத்தினை தங்களோடு பகிர விரும்புகிறேன் ,"ஆக சமச்சீரின் பலம் நம் எதிரிக்குப் புரிகிறது ,நமகெப்போது புரியப் போகிறது?"என்ற கேள்வியோடு அழமான எளிமையான விளக்க உரையை தந்திருகிரிர்கள் , தங்களுடைய வெளிப்பாட்டை தங்கள் வலைத்தளத்தில் மட்டும் தான் வெளிபடுதியிருகிரிர்களா? இணையதள வசதி இல்லாதவர்களுக்கும் அடைய வழி செய்தல் தங்களின் எதிபார்ப்பு முழு பயன் அடையும் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  17. சமச்சீர் கல்வியின் ஒரு அம்சம் மட்டும்தான் பொதுப்பாடத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
    அதற்கே இவ்வளவு போராட்டம்.
    "சமம்" "பொது" போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே ஹிட்லர் போலக் கொதித்தெழும் மனு மற்றும் பேரன்களுக்கு இப்பதிவு ஒரு செருப்படி.

    ReplyDelete
  18. சமச்சீர் கல்வியின் ஒரு அம்சம் மட்டும்தான் பொதுப்பாடத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
    அதற்கே இவ்வளவு போராட்டம்.
    "சமம்" "பொது" போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே ஹிட்லர் போலக் கொதித்தெழும் மனு மற்றும் பேரன்களுக்கு இப்பதிவு ஒரு செருப்படி.

    ReplyDelete
  19. வணக்கம் தோழரே!

    சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் யார் என்பதை வரலாற்று பூர்வமாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். மனு நம்மிடத்தே வாழ்ந்து வருகிறான், மனுவிற்கு காலம் என்றொரு அர்த்தமும் உண்டு. இப்போது சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் பழமைவாதிகள், சமூக அசமத்துவம் நீடிக்கவேண்டுமென்று விரும்புவர்கள் மதவாதிகள் குறிப்பாக பார்ப்பனீய சிந்தனையுள்ளவர்கள் (பார்ப்பனர்கள் அல்ல, இந்த சிந்தனை பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இருக்கிறது). சமச்சீர் கல்வியை கொண்டுவந்ததாக மார்தட்டும் திமுக விற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது ஆனால் இடதுசாரிகளுக்கு எதிர்ப்பவர்கள் யார் என்பதன் காரணம் சித்தாந்தரீதியாளது என்பது தெரிகிறது.சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    நான் சில தினங்களுக்கு முன்புதான் கத்தார் வந்து சேர்ந்தேன், வலைப்பக்கம் செல்ல நேரம் கிட்டவில்லை. உங்கள் தகவல் மூலமே சிறப்பான கட்டுரையை வாசிக்க முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  20. மனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அப்போது மனு, அப்புறம் ராஜ கோபாலாச்சாரி, இப்போது சோ.ஆக எல்லாக் காலத்திலும் மனு உண்டு"

    உண்மையான வரிகள்

    ReplyDelete
  21. எட்வின் அவர்களே! இன்னும் கூட கொபமக எழுதியிருக்கலாம். ஓண்ணரை அணா "சொவோ "மற்றவர்களோதடுத்து நீறுத்தமுடியாது.அவர்களுக்குள்ளேயே அவர்கள் சிறுபான்மயினர். கீழத்தஞ்சையில் சவுக்கடியையும் சாணிபாலையும் எதிர்த்த சீனிவாசராவ் நம்மோடு.சோவும் ராஜாஜியும் தத்துவரீதியாகவே எதிர்ப்பவர்கள். தீண்டாமையை எதிர்த்த காந்தியடிகள் சாதியை வர்ணாஸ்ரமத்தை எதிர்க்கவில்லை. மிக அதிகமான மக்களின் நலன்.மிக அதிகமான மக்களின் கூட்டுச்செயல்பாடு மிக அதிகமான மக்களின் ஆதரவு இவை வெற்றியை கொடுக்கும். இது ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் தான் நடக்கும்.நாம் நம்அறிவால்,மனத்தால், சொல்லால் செயலால்,உடலால் செயல்படும் அத்துணையும் அதனை நோக்கி மட்டுமே இருக்கட்டும்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

    ReplyDelete
  22. எட்கர் சாலமோன்August 23, 2011 at 1:02 AM

    சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் அதே வேளையில் வேறும் பொதுவான பாடத்திட்டத்தால் மட்டும் நிலைமை சீராகிவிடாது மேலும் கல்வி அளிப்பிலும், தரத்திலும் சமச்சீர் வேண்டும். அதற்க்கு முன் சில கல்வி வியாபாரிகளிடமும், பார்ப்பானிடமும் இருந்து இந்த கல்வியை மீட்டேடுக்க வேண்டும்.

    ReplyDelete
  23. Christopher said..மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  24. @Velmurugan Renganathan
    மிக்க நன்றி வேல் முருகன்

    ReplyDelete
  25. "அவர்களுக்குள்ளேயே அவர்கள் சிறுபான்மயினர்"...திரு காஷ்யபனின் வரிகள் உண்மைதான்...

    சிறுபான்மையினர் எதிலும் எங்கும் எப்போதும் இல்லா நிலை வர வேண்டும்...
    தோழர் எட்வின் கட்டுரைக்கான கருத்து தனியே பிறிதொரு வேளையில் ...

    அன்புடன் பொன்னிவளவன்...

    ReplyDelete
  26. தீ பரவத்தொடங்கி வெகு நேரம் ஆஹி விட்டது நண்பரே இனி தூக்கம் நன்றாய் வரும் பொழுது நன்றாய் விடியும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. @Christopher
    மிக்க நன்றி தோழர்.
    உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக அருமையான நேரத்தில் வந்துள்ளது. ஆனாலும் நம்மைப் பார்த்துதான் கிழவி” ஓய்ந்திருக்கலாகாது” என்று சொல்லி செறிருக்கிறாள்

    ReplyDelete
  28. @ Velmurugan Renganathan

    @ தருமி

    @ santaravi

    @ ஹரிஹரன்

    @ புகழன்

    மிக்க நன்றி தோழர்களே

    ReplyDelete
  29. @ Vibin

    \\"சமம்" "பொது" போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே ஹிட்லர் போலக் கொதித்தெழும் மனு மற்றும் பேரன்களுக்கு//
    ஆமாம் விபின்

    ReplyDelete
  30. \\எம்.ஏ.சுசீலா said...
    கல்வி மீது மெய்யான அக்கறை கொண்ட கல்வியாளரின் பதிவாக இதைப் பார்க்கிறேன்.பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றிங்க அம்மா

    ReplyDelete
  31. \\ kashyapan said...
    எட்வின் அவர்களே! இன்னும் கூட கொபமக எழுதியிருக்கலாம். ஓண்ணரை அணா "சொவோ "மற்றவர்களோதடுத்து நீறுத்தமுடியாது.அவர்களுக்குள்ளேயே அவர்கள் சிறுபான்மயினர். கீழத்தஞ்சையில் சவுக்கடியையும் சாணிபாலையும் எதிர்த்த சீனிவாசராவ் நம்மோடு.சோவும் ராஜாஜியும் தத்துவரீதியாகவே எதிர்ப்பவர்கள். தீண்டாமையை எதிர்த்த காந்தியடிகள் சாதியை வர்ணாஸ்ரமத்தை எதிர்க்கவில்லை. மிக அதிகமான மக்களின் நலன்.மிக அதிகமான மக்களின் கூட்டுச்செயல்பாடு மிக அதிகமான மக்களின் ஆதரவு இவை வெற்றியை கொடுக்கும். இது ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் தான் நடக்கும்.நாம் நம்அறிவால்,மனத்தால், சொல்லால் செயலால்,உடலால் செயல்படும் அத்துணையும் அதனை நோக்கி மட்டுமே இருக்கட்டும்.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்//

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  32. \\ எட்கர் சாலமோன் said...
    சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் அதே வேளையில் வேறும் பொதுவான பாடத்திட்டத்தால் மட்டும் நிலைமை சீராகிவிடாது மேலும் கல்வி அளிப்பிலும், தரத்திலும் சமச்சீர் வேண்டும். அதற்க்கு முன் சில கல்வி வியாபாரிகளிடமும், பார்ப்பானிடமும் இருந்து இந்த கல்வியை மீட்டேடுக்க வேண்டும்.

    August 23, 2011 1:02 AM//

    அது ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்

    ReplyDelete
  33. \\anbudan PONNIvalavan said...
    "அவர்களுக்குள்ளேயே அவர்கள் சிறுபான்மயினர்"...திரு காஷ்யபனின் வரிகள் உண்மைதான்...

    சிறுபான்மையினர் எதிலும் எங்கும் எப்போதும் இல்லா நிலை வர வேண்டும்...
    தோழர் எட்வின் கட்டுரைக்கான கருத்து தனியே பிறிதொரு வேளையில் ...

    அன்புடன் பொன்னிவளவன்...//

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  34. \\ எட்கர் சாலமோன் said...
    சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் அதே வேளையில் வேறும் பொதுவான பாடத்திட்டத்தால் மட்டும் நிலைமை சீராகிவிடாது மேலும் கல்வி அளிப்பிலும், தரத்திலும் சமச்சீர் வேண்டும். அதற்க்கு முன் சில கல்வி வியாபாரிகளிடமும், பார்ப்பானிடமும் இருந்து இந்த கல்வியை மீட்டேடுக்க வேண்டும்.

    August 23, 2011 1:02 AM//

    அதற்க்கான போராட்டம் மிகக் கடுமையானதாய் இருக்கும் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  35. மிக காட்டமான பதிவு!தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
  36. மிக காட்டமான பதிவு!தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
  37. All the people were divided in to three classes (1. Teaching, 2. State Duty or defence 3. Agriculture & Commerce).
    Every person was free to select the job, which he wanted to do and also was free to change it whenever it did not suit him. For this he had to obtain expertise in that field so that he could do the job well. Later on the Brahmins made the caste system rigid by birth although that was not the plan of Vaivaswata Manu. (page 96 of History of ancient India, volume 1)

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...