இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். கிஷோரை கல்லூரி விடுதியில் விட்டு
விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்படியே அயர்ந்து தூங்கி விட்டோம் நானும்
விக்டோரியாவும். அதிகாலை எழுந்து தளவாப் பாளையம் போய் இரவுதான் திரும்பிக்
கொண்டிருந்தோம்.போக நூற்றைம்பது வர நூற்றைம்பது என சற்றேரக் குறைய
முன்னூறு கிலோமீட்டர் பயணம்.
இடையில் கரூரில் இறங்கி அவனுக்குத் தேவையான வாலி, குவளை, கண்ணாடி,
சோப்பு, சீப்பு, தலையணை, போன்ற பொருட்களை வாங்க கடை கடையாய் ஏறி இறங்கி ,
கடுமையான வெய்யிலில் வாங்கியவற்றை தூக்கிக் கொண்டு நடந்து, கல்லூரி
அலுவலகத்திற்கும் விடுதீகுமாய் இரண்டு மூன்று முறை நடந்து, விடுதியில் கால்
வலிக்க நின்று என்று ஏகத்துக்கும் பட்டதில் மிகவும் அசந்து போயிருந்தோம்.
யாரோ என் காலை சுரண்டுவது போன்று தோன்றியது. தூக்கம் தொலைந்த எரிச்சலோடுதான்
விழித்தேன். பார்த்தால் படத்தில் காணும் குழந்தை தன் அப்பாவிடம் இருந்து தாவி என்
காலை தடவிக்கொண்டிருந்தாள். நானும் விக்டோரியாவும் மூன்றுபேர் இருக்கையில்
அமர்ந்திருந்தோம். எங்களுக்கு நேரே இருந்த இருவர் இருக்கையில் ஒரு இளைய தம்பதியர்.
அவர்கள் குழந்தைதான் அவள்.
அது அந்தக் குழந்தையின் ஸ்பரிஷம் என்பது புரிந்த மாத்திரத்தில் தூக்கம் அசதி அலுப்பு
எல்லாம் பறந்து போய் அப்போதுதான் ஜில்லென்ற தண்ணீரில் குளித்து வந்த புத்துணர்ச்சி
உடலெங்கும். மனசோ ரெக்கை இல்லாமலே பறக்க ஆரம்பித்து விட்டது.
இரு கைகளையும் நீட்டி எவ்வளவோ புன்னகைத்தும் வர மறுத்து சிரித்தாள். அந்த தூக்கம்
கசியும் கண்களும் பொக்கைச் சிரிப்பும் அப்படியே கிறங்க அடித்தன.
எவ்வளவோ கெஞ்சியும் வர மறுத்தாள். ஆனால் நாம் அந்தப் பக்கம் திரும்பினால்
சுரண்டினாள். நாம் திரும்பினால் சிரித்தாள். ஆனால் வர மட்டும் மறுத்தாள். ஒரு ஐந்து
நிமிடம் இப்படியான எனக்கும் அவளுக்குமான போட்டியாகவே கழிந்தது. ஒவ்வொரு முறை
அவளிடம் தோற்ற போதும் ஏதோ உலகக் கோபையை வெண்ன்ற பெருமிதம்.
இதற்கிடையில் அவர்கள் அவர்கள் ஊர் வரவே இறங்கப் போனார்கள்.
அவளது தந்தை அவளை தூக்கிக் கொண்டு படிக்கட்டு நோக்கி நடந்தார். குழந்தை பேருந்தில்
இருந்த எல்லோருக்கும் டாடா காட்டினாள். எல்லோருக்கும் கஞ்சத்தனமே இல்லாமல்
காற்றில் முத்தம் கொடுத்தாள். எனக்கும் ஒன்று வந்தது.
எப்படி சொல்வது ? எனது நாற்ப்பத்தியெட்டு வருட வாழ்வில் நான் அதிகம் சந்தோஷப் பட்ட
பத்து தருணங்களுள் அதுவும் ஒன்று.
இறங்கி பேருந்தைக் கடந்து போகும் வரைக்கும் விக்டோரியா அவளையே வைத்தக் கண்
வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
”ஏங்க வெளியே இருந்து இப்ப ஒரு முத்தம் கொடுக்கறாங்க” என்று சொன்ன விக்டோரியாவின்
குரலில்தான் எத்தனை உற்சாகம். எத்தனை குதூகலம். நானும்தான் அவளைப் பார்த்தேன்.
நான் பார்க்காத நேரம் பார்த்து விக்டோரியாவிற்கு கொடுத்திருக்கிறாள். ம்.. எதற்கும் ஒரு
கொடுப்பினை வேண்டும்
“ குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று ஏதோ கிறுக்கன் பாதி மப்பில் உளறி இருக்கிறான்.
குழந்தை எதையும் விடவும் உசத்தியானது.
அவள் காற்றிலே முத்தங்களை கொடுத்தபோது விழித்திருந்து பெற்றுக் கொண்டவர்கள்
பாக்கியவான்கள். அப்போது தூங்கிக் கொண்டிருந்த ஏனையோர் சத்தியமாய்
சபிக்கப் பட்டவர்கள்.
நெகிழ்வான நேரங்களை மறக்க இயலாது சார்,..
ReplyDeleteஉங்களுக்கு அந்த கொடுப்பினை கிடைத்திருக்கு ... வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா, எப்படி இருக்கிறீங்க?
ReplyDeleteநீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீங்க. நலம் தானே.
மழலையின் செயல்களில் லயித்திருந்த மனதின் உணர்வுகளை இங்கே பகிர்ந்திருந்திருக்கிறீங்க. நானும் உங்கள் பதிவினூடாக ஒன்றித்துப் போய் விட்டேன்.
This comment has been removed by the author.
ReplyDelete“ குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்று ஏதோ கிறுக்கன் பாதி மப்பில் உளறி இருக்கிறான்
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். ஆனால் குழந்தை தெய்வத்தைவிட சிறந்ததல்ல
@Islamiya Paarvai
ReplyDeleteவணக்கம் தோழர். அது உங்கள் கருத்து. அதை சொல்ல உங்களுக்கிருக்கிற உரிமையை நான் ஏற்கிறேன். அதே போன்றுதான் கடவுளே இல்லை என்ற என் நிலையினை சொல்லவும் எனக்கு உரிமை உண்டு.
தொடர்ந்து சந்திப்போம்
மிக்க நன்றி தோழர்
@வித்யாஷங்கர்
ReplyDeleteவணக்கம் தோழர் வித்யா சங்கர். என்ன எழுதினீர்கள்? ஏன் எடுத்தீர்கள்?
குழந்தைகளை வியந்தே நரைத்துப் போன குழந்தை இரா.எட்வினுக்கு இரண்டு பறக்கும் சாக்லேட்....ஆமாம் முத்தத்தின் திண்பண்ட வடிவம்.
ReplyDeleteமிக்க நன்றி செல்வகுமார்
Deleteஅருமை.... குழந்தைகள் போற்றுதலுக்குரியவர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர் சரவணன்
Delete
ReplyDeleteஒவ்வொன்றையும் கொண்டாட வேண்டும் என சொல்வார்கள்....காத்திருந்து பெற்றுக்கொண்டவர்கள் பாக்கியவான்களே என உண்ரவைத்தது அந்த மழலையின் கொண்டாட்டத்தை இன்னொறு முன்னாள் மழலையின் கொண்டாட்டமும் குதுகுலமும் தான்..........பாதி மப்பில் உளறினாலும்...தூக்க மயக்கம் நீங்கி பாக்கியவான் ஆனாலும் கொண்டாட்டம் தான் நம்மை அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்த்துகிறது..........
அது என்னமோ சரிதான் தோழர் கிறிஸ்டோபர்
Deleteகுழந்தை முத்தம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவை.
ReplyDeleteகுழந்தையின் முத்தம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவை
ReplyDelete