Tuesday, March 26, 2024

ஆனால் ஆளுனர் இதை பேசக்கூடாது

 ”பொன்முடியோட வக்கீல் கணக்கா பேசறியே” என்பதுமாதிரி தொடர்ந்து விசாரிக்கப்படுகிறேன்

ஒருபோதும் இல்லை
இது மாநில அரசின் முடிவின் மீதான ஆளுனரின் அடாவடித்தனம் மீதான எனது கோவமும்
அதை மிகச் சரியாக எதிர்கொண்ட முதல்வர்மீதான மகிழ்வும்
ஒன்று சொல்ல வேண்டும்
பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டபோது நான் அதுகுறித்து எதுவுமே அலட்டிக் கொள்ளவில்லை
என்னை விடுங்கள், விழுப்புரம் திமுக தோழர்களே அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை
அவரது தெருவில்கூட கடையடைப்பு இல்லை
ஆ.ராசா கைதானபோது பெரம்பலூர் கொந்தளித்துக் கிடந்தது
இப்போதும் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சம்பாரிக்கவில்லை என்றும் நாம் சொல்லப் போவதும் இல்லை
அதுகுறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு
பேசட்டும்
அதற்கு பதில் சொல்ல வேண்டியது பொன்முடி
ஆனால் ஆளுனர் இதை பேசக்கூடாது
ஒருவேளை உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால்
அவர் உள்ளே போவார், பதவி இழப்பார்
ஆனால் அப்போதும் அதுகுறித்து கருத்து சொல்ல ஆளுனருக்கு உரிமை இல்லை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...