“ரபேல் கொள்முதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று ஆவணாங்களின் அடிப்படையில் ஆய்வுசெய்து தீர்ப்பளிக்க வேண்டியதும் இதுகுறித்து அரசாங்கத்தின் தரப்பில் எழுப்பப்படும் ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்யவேண்டியதும் முறையென்று கருதுகிறோம்”
இப்படி சொல்லி இருப்பது எதிர்கட்சிகளை சேர்ந்த யாரோ ஒரு தலைவரல்ல,
ஏதோ ஒரு எதிர்க்கட்சியின் தலைவர் இப்படிக் கூரியிருந்தாலும் அதுகுறித்து கவனம் குவிக்க வேண்டும்தான். ஆனாலும் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம் என்று நகர்ந்து விடலாம்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு ரஞ்சன் கோகாய் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார் என்ற செய்தியை 11.04.2019 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது
இதே உச்ச நீதிமன்றம் இதே வழக்கில் ரபேல் ஊழல் வழக்கில் “ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று 14.12.2018 அன்று தீர்ப்பளித்திருந்தது.
அந்த வழக்கின்போது ரபேல் கொள்முதல் குறித்த அனைத்து விவர அறிக்கையை மத்திய தணிக்கை குழுவிடமும், பொதுக்கணக்குக் குழுவிடமும் பகிர்ந்து விவாதித்திருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் கூறியது. இதை நம்பி ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14 ஆம்தேதி ரபேல் கொள்முதலில் முறைகேடு நடக்கவில்லை என்று தீர்ப்பளித்தது.
பாஜக வானத்திற்கும் பூமிக்குமாக குதித்தது. ராகுல் பொய் சொல்லிவிட்டார். எனவே அவர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் சொன்னது. லோ சுகர் இருப்பவரும் ஒரே நாளில் சர்க்கரை நோய்க்கு இரையாகும் அளவு இனிப்புகளை உண்டார்கள்
அடுத்தநாளே பொதுக்கணக்குக் குழுவின் தலைவரான திரு மல்லிகார்ஜுனே பொதுக்கணக்குக் குழுவிற்கு அப்படி எந்த ஒரு அறிக்கையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார்.
சிக்கலில் சிக்கிக்கொண்ட மத்திய அரசு, ”மத்தியத்தணிக்கை குழுவிற்கும், பொதுக்கணக்குக் குழுவிற்கும் ரபேல் கொள்முதல் குறித்த விவர அறிக்கையைத் தர இருக்கிறோம் என்றுதான் சொன்னோம். தந்துவிட்டோம் என்று நாங்கள் சொன்னதாக உச்சநீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டது” என்று சொன்னது.
இந்த சூழலில் இந்து பத்திரிக்கை ரபேல் விவகாரத்தில் அரசு ரிலையன்சுக்கு ஆதாரவாக எடுத்துள்ள முறைகேடான செயல்பாடுகள் குறித்த அரசு ஆவணாங்களை வெளியிட்டது.
ஆவணங்களைத் திருடிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியது அரசு.
இதைக்கூட பாதுகாக்க முடியவில்லையா? என்று கேட்டது உச்சநீதிமன்றம்.
நகலெடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று ஜகா வாங்கியது அரசு.
இதுகுறித்து திரு பிரஷாந்த்பூஷன், யஷ்வந்த் ஷின்ஹா, M.L.ஷர்மா ஆகியோர் சீராய்வு மனு கொடுத்திருக்கிறார்கள்.
நீதியரசர்கள் திரு ரஞ்சன் கோகாய், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் அந்த வழக்கு வருகிறது. அதனை விசாரனைக்கு ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு வாதாடி இருக்கிறது. அதை நிராகரித்துதான் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்கள் நீதியரசர்கள்
வழக்கறிஞர் அருண்ஷோரி அவர்கள் ரபேல் முறைகேடுகள்ளை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்கிறார்
நீங்கள் விசாரிக்கவே கூடாது என்கிறீர்கள்.
ஒரு மிகப்பெரிய முறைகேடு குறித்த விசாரனையை எதிர்கொள்ள பயந்து விசாரிக்கவே கூடாது என்ற உங்களது பதட்டம் கலந்த கோரிக்கையே உங்கள்மீதான சந்தேகத்தை வலுவாக்குகிறது.
இதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி
பின்குறிப்பு: திரு மோடி அவர்களுக்கு எதிரான வாக்கை என்ன செய்வாய் என்று கேட்டால் இடதுசாரிகள் இணைந்திருக்கும் திமுக கூட்டணிக்களிப்பேன் என்பேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்