எப்படி யோசித்தும் என்ன கூட்டம் என்று நினைவில்லை. ஆனால் சென்னை இக்ஷாவில் நடந்தது இது.
கூட்டம் முடித்துவிட்டு வழக்கம் போல அரங்கத்தின் வெளியே அங்கங்கே குவியல் குவியலாய் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
எங்களது விவாதம் ஜெயமோகனைச் சுழன்று சுற்றியது. அவரை எப்படி எப்படியோ விமர்சித்துக் கொண்டிருந்த நாங்கள் அவரது “ காடு” பற்றி பேச ஆரம்பித்தபோது அதன் அழகியல் மற்றும் பிரமாண்டம் குறித்து கொஞ்சம் வியப்போடே நகர்ந்தது எங்களது உரையாடல்.
அப்போது பக்கத்து குவியலில் நின்று பேசிக் கொண்டிருந்த இயக்குனர் மணிவண்ணன் எங்கள் பக்கம் திரும்பி சொன்னார்,
“ ரொம்ப அருமையான நாவல். ரொம்பவே
பிருமாண்டம். என்ன, அந்த நாவல்ல கொஞ்சம் சாரு இருப்பார். போக, கம்யூனிஸ்டுகள
டேமேஜ் பண்றதுதான் அவரோட பர்பஸ். அவரோட விஷ்ணுபுரம் கூட அப்படித்தான்.”
எல்லா இடங்களிலும் இதை அவர்
பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இரண்டு விஷயங்கள் என்னை வியக்கவைத்தன,
1 யாரென்றே தெரியாத நபர்கள் ,
இன்னும் சொல்லப்போனால் முகவரியற்ற யாரோ பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் தனக்கு
சொல்ல ஏதோ இருந்தால் அதில் பங்கேற்கும் அவரது பிரபலம் துறத்தல்.
2 மற்ற சினிமாக்காரர்களைவிட
கொஞ்சம் கூடுதலாக வாசிப்பார் என்று மட்டுமே என் புத்தியில் கிடந்ததை சுத்தமாய்
துடைத்துப் போட்ட அவரது
ஆழமான வாசிப்பு.
கலகக்காரர், நல்ல நகைச்சுவை
நடிகர், அரசியல் பகடியோடு படங்களைத் தருவதில் வல்லவர், எல்லாவிதமான படங்களையும்
இயக்கியவர், போக தமிழ்த் தேசியக் குழுக்கள் எதுவாயினும் அது எவ்வளவு சின்னதாயினும்
அது நடத்தும் கூட்டங்களில்
சிரமம்பாராது பங்கேற்பவர் என்பதுதான் பொதுவாக அவர் குறித்த தமிழ் மண்ணின் பொது
அபிப்பிராயம்.
ஆனால், பெரியாரையும் ,
மார்க்ஸையும் கையில் எடுக்காமல் தமிழ்த் தேசியம் யாருக்கும் சாத்தியப் படாது
என்பதில் அவர் உறுதியாய்த்தான் இருந்திருக்கிறார். ஆரம்பக் காலத்தில் அவர் இரண்டு
பொது உடைமைக் கட்சிகளுக்கும் வேலை பார்த்திருக்கிறார். சுவர் எழுத்து எழுதியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் இரண்டு இடதுசாரிக்
கட்சிகளிடமும் அவர் நம்பிக்கை இழக்கிறார். அவர்கள் மீது ஊழல், ஒழுக்கமின்மை,
அர்ப்பணிப்பின்மை
போன்ற குற்றசாட்டுகள் எதுவும்
இல்லை அவருக்கு. அவர்கள் தொழிற்சங்கங்களைச் சார்ந்துமட்டுமே இயங்குகிறார்கள். ஆகவே
அவர்களால் தொழிற்சாலைகள் அதிகம்
உள்ள இடங்களில் மட்டுமே
செயல்பட முடிகிறது. இது போதாது.
போகவும் தொழிற்சாலைகள் மூடப்படும்போது கட்சி அந்த இடத்தில் இல்லாமல் போகும்
என்பதுதான்
அவரது குற்றச்சாட்டு.
இந்த வகையில் ஒரு தீவிரவாத
இடதுசாரிக் குழுவில் இணைகிறார். இவரோடு இயங்கிய இரண்டு தோழர்கள் இல்லாமல் போகவே
ஒரு இடதுசாரியாய் இயங்க இயலாமையால் மட்டுமே அவர் சென்னைக்கு வருகிறார்.
மட்டுமல்ல, எந்த இடத்திலும் மற்ற
தமிழ்த் தேசியத் தோழர்கள் முன் வைப்பது போன்ற கடுமையான விமர்சனங்களை இவர் இடதுசாரிக்
கட்சிகள் மேல் வைத்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் இணக்கமாகவே இருந்திருக்கிறார்.
காளிமுத்து என்கிற இவரது
ஆசிரியர்தான் இவரது ஆளுமைக்கெல்லாம் காரணம் என்கிறார். தமிழ்வாணனை மட்டுமே
வாசித்துக் கொண்டிருந்தவரை
அவர்தான் “ தாய்” நாவலைத் தந்து மடை மாற்றம் செய்திருக்கிறார்.
சிலந்தியும் ஈயும்கூட அவர்தான் தந்திருக்கிறார். நாமும்தான் 25 ஆண்டுகளாக ஆசிரியராக
இருக்கிறோம். இப்படி எதுவும் செய்யவில்லையே என்ற கோவம் நம் மீது இயல்பாகவே
வருகிறது.
கணக்கற்ற முறை இவர் “ கம்யூனிஸ்ட்
அறிக்கை” யை வாசித்திருக்கிறார். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் புதிது புதிதாய்
கற்றுக் கொள்வதற்கு அதில் இருந்ததாய்
சொல்லியிருக்கிறார். இடது சாரித் தலைவர்கள் தங்களது இளைஞர்களை இதை
வாசிக்கச் செய்வதில் இன்னும் கொஞசம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது கொஞ்சம்
குறைந்து இருப்பதாகப் படுகிறது.
ஏறத்தாழ 40000 நூல்கள் அவரது
வீட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இயக்குனர்கள் சங்கத்தில் ஒரு நூலகம் அமைத்து
அவற்றை அங்கு வைக்கவேண்டும் என்று நந்தன் ஸ்ரீதரன் உள்ளிட்ட திறைத் துறையினர்
ஆசைப் படுவதில் அர்த்தம் இருக்கிறது.
துணை இயக்குனர்கள் நிறைய
வாசித்தால்தான் தமிழ்த் திரையுலகம் வளப்படும் என்று மனதார நம்பியவர் மணிவண்ணன்.
வாசிக்க நல்ல நூல்களைக் கொடுத்து வாசிக்கத் தூண்டியவர்.
எனவே அவரது குடும்பத்தினர் இதைக்
கொஞ்சம் கருணையோடு அணுக வேண்டும்.
கொஞ்சம் பழசாய்த்தான் தோன்றும்
ஆனாலும் அதுதான் சரியெனப் படுகிறது,
“ வாசிப்பதை நிறுத்திக் கொண்ட
தேர்ந்த வாசகனுக்கு எங்கள் அன்பும் வணக்கமும்.
நன்றி : “ புதிய தரிசனம்”
nalla irankal.,I also once spoke with him in a public meeting at rjpm,beforw MP election.,we had LTTE banner with MAAREERAR.PRABAKARAN BATCH.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteதிரு மணிவண்ணன் அவர்களின் வாசிப்பு பற்றிய அற்புதமான பதிவு.
ReplyDeleteநன்றி & வாழ்த்துகள் திரு இரா எட்வின்.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
மிக்க நன்றிங்க அய்யா
Deleteநல்ல ஒரு பக்குவமான பதிவு!
ReplyDeleteஎந்த சமரசமும் இல்லாமல் தங்களுக்குரிய எழுத்துக் கையாடல் மிகச் சிறப்பு!
மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்
Deleteமணிவண்ணனின் புதிய பக்கத்தை தெரியப்படுத்தியமைக்கு நன்றி.........
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteதோழர் மணிவண்ணன் அவர்கள், " வாழ்ந்து இருந்தார் என்பதை விட வாசித்து இருந்தார்" என்பது உங்களின் கட்டுரையின் முலம் புரிகிறது. தொடரட்டும் உங்கள் சமுக பணி...
ReplyDeleteவாசித்து இறந்த மாமனிதநன்தான்
Deleteதோழர் மணிவண்ணன் அவர்கள், " வாழ்ந்து இருந்தார் என்பதை விட வாசித்து இருந்தார்" என்பது உங்களின் கட்டுரையின் முலம் புரிகிறது. தொடரட்டும் உங்கள் சமுக பணி...
ReplyDeleteதோழர் மணிவண்ணன் அவர்கள், " வாழ்ந்து இருந்தார் என்பதை விட வாசித்து இருந்தார்" என்பது உங்களின் கட்டுரையின் முலம் புரிகிறது. தொடரட்டும் உங்கள் சமுக பணி...
ReplyDeleteதோழர் மணிவண்ணன் அவர்கள், " வாழ்ந்து இருந்தார் என்பதை விட வாசித்து இருந்தார்" என்பது உங்களின் கட்டுரையின் முலம் புரிகிறது. தொடரட்டும் உங்கள் சமுக பணி...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமுகவரியற்ற யாரோ பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் தனக்கு சொல்ல ஏதோ இருந்தால் அதில் பங்கேற்கும் அவரது பிரபலம் துறத்தல்.// எனக்கும் இயக்குனர் மணிவணன் அவர்களுடன் என் சொந்த ஊரிலேயே இப்படியான அனுபவம் வாய்த்தது. திரை துறையில் அவர் உச்சத்தில் இருந்த காலமது.வேடிக்கை பார்க்க சென்ற என்னிடம் 10 அல்லது 15 நிமிடங்கள் பிரபலத்தை துறந்து பேசிய தருணம்....இன்றும் பசுமையாக இருக்கிறது. துள்ளியமாக கணிக்கிறீர்கள் மனிதர்களை.மீண்டும் என்னை அந்த நினைவுக்குள் இட்டு சென்ற கட்டுரை.அருமையான பதிவு...திரை துறையில் இருந்தாலும் அதன் வெளிச்சம் படாத மனிதராக மணிவணன் அவர்களின் இன்னெரு பரிமாணத்தை காட்டியுள்ளீர்கள்....வாழ்த்துகள் தோழர்
ReplyDeleteமிக்க நன்றி யூசுஃப்
Deleteஇப்படி எதுவும் செய்யவில்லையே என்ற கோவம் நம் மீது இயல்பாகவே வருகிறது...!
ReplyDeleteஅது இயல்பானது தோழர். மிக்க நன்றி
Deleteதோழர் மணிவண்ணன் ஒரு சிறந்த சமுக போராளி என்பதை அறிய உதவிய பதிவு .
ReplyDeleteநன்றி அய்யா .
மிக்க நன்றிங்க அய்யா
Deleteஇதைப் படித்ததன்மூலம் மணிவண்ணனின் மேல் என்மனதில் இருந்த மதிப்பு மேலும் கூடியிருக்கிறது!
ReplyDeleteஅதற்குக் காரணம் இந்தச் செய்தியில் அவரைப்பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் சரியாகவே சொல்லப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால் அவரைப் பற்றிய சரியான அறிமுகம் கிடைத்ததாக நினைக்கிறேன்.
அவர் எந்தச் சூழலிலும் தன்னை இழக்காமல் வாழ்ந்திருப்பதாகவும் தெரிகிறது!
செய்திக்குப் பாராட்டுக்களும் நன்றியும்!
மிக்க நன்றி தோழர்
Deletenadikar manivannanai samooga vingyaanigalin nanban manivannan enbathai engaluku unarthiyullirgal. sirappu. mikka nandri...
ReplyDeletenadikar manivannanai samooga vingyaanigalin nanban manivannan enbathai engaluku unarthiyullirgal. sirappu. mikka nandri...
ReplyDeleteஆமாம் தோழர். சரியாய் பயன்படுத்திக் கொள்ளப் படாத மனிதன்.
ReplyDeleteநன்றி அய்யா...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
DeleteNalla visayathai mugavum nayambada koori irukkireerhal. Vaalthukkal tholare.
ReplyDeleteமணிக்கு மரியாதை பாராட்டுக்கள் தொடருங்கள்
ReplyDeleteசெய்திக்குப் பாராட்டுக்களும் நன்றி கலந்த வணக்கங்களும்.......!
ReplyDeleteசெய்திக்குப் பாராட்டுக்களும் நன்றி கலந்த வணக்கங்களும்...!
ReplyDeleteஇயக்குனர் மணிவண்ணன் குறித்து அறியாத அரிய தகவலை அறிந்துக் கொள்ள வைத்த கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்.. அந்த புத்தக வாசிப்பாளரின் பெயரில் நூலகம் அமைத்து அந்த நேசிப்பாளரை பெருமைப் படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல்.. மறுமுறை கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆச்சர்யப்படும்படியாக, அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கிறார்.கோவை நண்பர்கள் ஒவ்வொருவரும் எழுதும் அவரைப் பற்றிய பதிவுகள் அவரை நாமும் "தோழர்" என்றே அழைக்கத் தூண்டுகிறது. தமிழ்த் திரையுலகில் எப்படித்தான் மூச்சுப் பிடித்து இருந்தாரோ. எழுபதுகளில் சென்னையில் என்னால் ஒரு ஆறுமாதம் திரையுலக நண்பர்களின் அறையில் தங்கக் கூட முடியாத, தாங்க முடியாத உலகம் தமிழ்த் திரையுலகம்.
ReplyDeleteதோழரேதான் தோழர்
Deleteதன் வீட்டில் 40000 நூல்கள் வைத்திருந்தார் என்பது ஆச்சர்யமான செய்தி. ஒரு சமயம் 4000 என்பது தவறுதலாக 40000 என்று வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் இவ்வளவு வெறித்தனமாக புத்தகங்களை நேசித்து வாசித்து இருகிறார் என்பது வியப்பிற்குறிய செய்தி.தகவல்களுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteமிக்க நன்றி தோழர். யாருக்கும் வியப்பைத் தரும் விஷயமே இது
Deleteஇவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் புத்தகங்களை இவ்வளவு வெறித்தனமாக நேசித்து வாசித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான தகவல். தகவலுக்கு நன்றி நண்பரே>
ReplyDeleteதன் வீட்டில் 40000 நூல்கள் வைத்திருந்தார் என்பது ஆச்சர்யமான செய்தி. ஒரு சமயம் 4000 என்பது தவறுதலாக 40000 என்று வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் இவ்வளவு வெறித்தனமாக புத்தகங்களை நேசித்து வாசித்து இருகிறார் என்பது வியப்பிற்குறிய செய்தி.தகவல்களுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteவாசிப்பை நேசித்தவராயும், உயர்வு தாழ்வு பாராமல் மனித மனங்களை நேசித்தவராயும் மணிவண்ணன் அவர்களின் பலருக்கு தெரியாத வாழ்க்கை பக்கத்தை அறியப்படுத்தி உள்ளீர்கள். நடிப்பில் நல்ல முத்திரை பதித்தவராயும், திரைப்படம் எடுப்பதில் தனிநிகர் நபராயும், தமிழின உணர்வில் தன்னிகரில்லா தோழராகவும் வலம் வந்த மணிவண்ணனின் இழப்பு ஈடு செய்ய இயலாது... அவரது நினைவை போற்றும் வகையில் நூலகம் அமைப்பதே ஏற்ற செயல்..
ReplyDeleteஉங்களின் எழுத்து வரிகள் அருமையாக உள்ளது தோழரே
ReplyDeleteதோழர் மணிவண்ணன் அவர்கள் படிப்பாளியாக இருந்ததால் தான் நல்ல படைப்பாளியாக இருந்துள்ளார்
ஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்
Deleteஒருதர் தன வீட்டில் 40000 நூல்கள் வைத்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.அவ்ளோ அரவம் உள்ள ஒருத்தர் நடிப்பிலும்,நகைசுவைகளிலும் சிறந்து விளங்கியவர்களில் மணிவண்ணன் ஒரு பெரிய வாழ்கையை வாழ்ந்திருக்கிறார்.அவரை பற்றி செய்தியை வெளிபெற செய்ததற்கு நன்றி ஐயா.
ReplyDeleteஆமாம் தோழர். மிக்க நன்றி
Delete