Tuesday, August 14, 2012

நான்கு கவிதைகள்

1

தேடல் நல்லது
தேடலாம்

தேட
எதையேனும்
தொலைக்கலாம்

முதலில்
தொலைக்க எதையேனும்
தேடலாம்

2

மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி
மணமூட்டுகிறாய் எனக்கு தினமும்

புரட்டும் குடலை
அவன்
புகையிலை நாத்தம்

போவேன் அவனுள்தான்
மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்

உழிபட்ட காயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர் தந்தவன்

மட்டுமல்ல
உழைத்து உண்பவன்

மட்டுமல்ல
நல்லவன் என்பதாலும்

“பகவானே!
அப்ப நான்?”

“ நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய”

3

கேட்டிருக்கும்
இடங்களிலிருந்து
ஏதேனும் கிடைக்கும்வரை
எப்படியேனும்
தாக்குப் பிடித்துவிடு தாயே
சாகாமல்

4

புரிந்தது
எழுத்து
போலி மருத்துவர்

32 comments:

  1. MY PRESCRIPTION WRITING WILL BE VERY GOOD.I AM NOT QUAKE.

    ReplyDelete
  2. when i click to type in tamil,this page disappears.so i am unable.

    ReplyDelete
    Replies
    1. விவரம் தெரிந்த நண்பர்களிடம் கேட்கிறேன் தோழர். மிக்க நன்றி

      Delete
    2. வணக்க்ம் எட்வின். நீங்க விபரம் தெரியாதவரா?..மோகனா, பழநி.

      Delete
    3. ஒன்றும் தெரியாது தோழர்

      Delete
  3. நான்கின் குறும்பு.

    ReplyDelete
  4. 3 செமையான கவிதை!

    மற்றபடி அனைத்தும் அருமையாவையே!

    ReplyDelete
  5. முதலாவது மனதில் படிகிறது.தேடுவோம் !

    ReplyDelete
  6. nantru!

    ayya!

    en valaithalam varumaaru anpudan azhaikkiren!

    seeni-kavithaigal.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் சீனி

      Delete
  7. ம்ம்ம்............ம் (:
    நான்கும் அருமை சார்

    ReplyDelete
  8. வணக்கம் எட்வின் தோழர்.சுதந்திரம் பெற்ற காலையின் இனிய வணக்கம். எபோதோஎழுதியதை எங்கேயே இருந்ததைப் பிடித்துபோட்டு.. கலக்குறீங்க தலைவா, ஆனால் கவிதை ஆழ்ந்த உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது.வாழ்த்துகள்.
    //தேட
    எதையேனும்
    தொலைக்கலாம்// இதில் துவங்கலாம். மோகனா.பழநி

    ReplyDelete
  9. 1. கலக்கல்...
    2. செம...
    3. அருமை...
    4. உண்மை...

    நன்றி சார்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. தேடுதல் எப்போதும் சுவையே....தேடுவதற்காகவாவது தொலைக்கலாம் தோழமையே..... நான் நிறைய தொலைத்துவிட்டேன்.......:-( தேடுதல் நின்றபாடில்லை. ஆயினும் ரசிக்கின்றேன்....:-)

    ReplyDelete
    Replies
    1. ரசனையும் தேடலும்தான் உயிர்ப்பின் சாரம். அதை ஏன் நாம் கைவிட வேண்டும் . மிக்க நன்றி பிரேமலதா

      Delete
  11. தேடுதல் எப்போதும் சுவையானதே.. தேடுவதற்காகவாவது தொலைக்கலாம். நான் நிறைய தொலைத்துவிட்டேன் தோழமையே..:-( ஆயினும் தேடுதல் நின்றபாடில்லை. தேடிக்கொண்டேயிருக்கின்றேன் ரசித்தபடி.....:-)

    ReplyDelete
  12. தேடுதலுக்காக தொலைத்தலா? அல்லது தொலைத்தலுக்காக தேடுதலா. நல்ல கவிதைகள்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குழப்பம்தானே ஜோதி வாழ்க்கையே.மிக்க நன்றி

      Delete
  13. தேடினேன்
    வந்தது
    கிடைத்தது
    உன்மை.

    ReplyDelete
  14. உங்கள் கவிதைகளை நன்று என்று சொல்லப் போவதில்லை

    நன்றில்லை என்றால் சொல்கிறேன்

    சொல்ல விடுவீர்களா ?

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்கள். மிக்க நன்றி செல்வகுமார்

      Delete
  15. தேடுகிறேன்,அருமை.

    ReplyDelete
    Replies
    1. தேடினால் கண்டடைவோம் கீதா. மிக்க நன்றி

      Delete
  16. தொலைக்க எதையாவது தேடுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தேடக் கண்டடைவோம் தோழர். மிக்க நன்றி

      Delete
  17. ஆகா
    உங்க வாய இன்னும் புடுங்கனும்... (பேனாவை?)
    கலக்ஸ்..

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...