Friday, June 6, 2025

இது அரசியல் எனில்

 
இது அரசியல் எனில்

இதுதான் நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய அரசியல்

Thursday, June 5, 2025

செத்த சும்மா இருங்க சாமிகளா

 



செத்த சும்மா இருங்க சாமிகளா

ஏற்கனவே சீனாக்காரன் கிலோமீட்டர் கிலோமீட்டரா ஆட்டையப் போட்டுக்கொண்டு இருக்கான்
பொய்யாடா சொல்றன்னு
மைல் மைலா போடப் போறான்

27.05.2025

தனியார் CA நிறுவனங்களிடம் இருந்து

  உள்ளாட்சித் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கு

டெண்டர் கோரி இருக்கிறது ஒன்றிய அரசு
இது ஊழலுக்கான அச்சாரம்
தெருவிறங்கி இதற்கெதிராகத் திரள வேண்டும்

Wednesday, June 4, 2025

யார் மூப்பு என வந்துவிட்டால்

   எப்போதும் சொல்வதுதான்

1992 என்று நினைக்கிறேன்
தமுஎச மாநில மாநாடு
சென்னை கிருஷ்ணகான சபா
வரபேற்குழுத் தலைவர் பாலு மகேந்திரா இப்படியாகத் தொடங்குகிறார்
“All mothers are great. But my mother is the greatest"
இதை இப்படியாகப் பெயர்க்கலாம்,
எல்லாத் தாய்மார்களும் வணக்கத்துக்குரியவர்கள்தான். ஆனால் எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய்
இதை மொழிக்கும் பொருத்திப் பார்க்கலாம்
எல்லாத் தாய்மார்களும் எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதி கொண்டவள் என் தாய் என்று சொல்வதற்கு தமிழனுக்கு உள்ள உரிமை
மலையாளிக்கும் உண்டு கன்னடனுக்கும் உண்டு
இது தகுதி சார்ந்த உணர்வெழுச்சி
யார் மூப்பு என வந்துவிட்டால் கொந்தளிக்கத் தேவை இல்லை
தரவுகள் இருக்கின்றன
உட்கார்ந்து ஆய்ந்து விவாதிப்போம்
அவ்வளவுதான்

Tuesday, June 3, 2025

கவிதை 11/2025

  

வணக்கம்
நான்
கலெக்டர் பேசறேன்.
கர்னலோட அம்மாங்களா?
ஆமாம் சார்

பாகிஸ்தானோடான சண்டையில்
உங்கள் மகளின் பங்கு
அலாதியானது
மகிழ்ச்சிங்க சார்
உங்கள் குடும்பத்திற்கு
மரியாதை செய்ய
ஆசைப்படுகிறார் ஜீ சார்
மகிழ்ச்சிங்க சார்
நீங்க வந்து
ஜீ சாருக்கு பூ தூவி
என்ன சார் சொல்றீங்க?
சாருக்கு
பூத்தூவ
உங்களுக்கு
நாங்கள் தரும் வாய்ப்புதான்
உங்கள் மகளின்
தியாகத்திற்கு
தேசம் தரும் கௌரவம்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
நீங்கள்
சார்
என்ன சொல்றீங்க
வண்டி வரும்
வந்து சேருங்க

Monday, June 2, 2025

பெரியவரும் சின்னவரும் சேந்துடுவாங்க பாரு

   என்னடா பாமக பிரச்சினைய இவ்வளவு சல்லிசா கணிக்கிற

அய்யோ மாப்ள,
இது குடும்பத்துக்குள்ள உள்ள சொத்துத் தகராறு. அவ்வளவுதான்
குடும்ப சொத்துன்னா கட்சியே ஏன் அல்லோலப் படனும்
இல்லாட்டி கட்சிக்காரன் சொத்துக் கணக்குக்கைக் கேட்டுட்டா...
மட்டுமல்ல
பெரியவரும் சின்னவரும் சேந்துடுவாங்க பாரு

புன்னகைத்தபடி நுழைந்து புன்னகைத்தபடி திரும்பும்

  கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கின்றன

பள்ளிக்கல்வியில் நிறைய செய்துவரும் அமைச்சர் அழகுச் சகோதரர் மகேஷ் அவர்களிடம் வேண்டிக்கொள்வதற்கு ஒன்று உண்டு
ஆசிரியர்களும் குழந்தைகளும் வகுப்பிற்குள் சூழல் இயல்பாக வேண்டும்
இயல்பாக்குங்கள்
உங்களால் முடியும்

Sunday, June 1, 2025

கட்சிக்காரன் சொத்துக் கணக்குக்கைக் கேட்டுட்டா

  என்னடா பாமக பிரச்சினைய இவ்வளவு சல்லிசா கணிக்கிற

அய்யோ மாப்ள,
இது குடும்பத்துக்குள்ள உள்ள சொத்துத் தகராறு. அவ்வளவுதான்
குடும்ப சொத்துன்னா கட்சியே ஏன் அல்லோலப் படனும்
இல்லாட்டி கட்சிக்காரன் சொத்துக் கணக்குக்கைக் கேட்டுட்டா...
மட்டுமல்ல
பெரியவரும் சின்னவரும் சேந்துடுவாங்க பாரு

இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சினை

  பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சினையை தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பிரச்சினையாக நான் புரிந்துகொள்ளவில்லை

இது
எப்படியோ சேர்த்துவிட்ட சொத்து தன் பிள்ளைகள் அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்று பெரியவரும்
தன் பிள்ளைகளுக்கு மட்டுமே அவை சேர வேண்டும் என்று சின்னவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
அவ்வளவுதான்

01.06.2025

கவனிக்கப்படும் காக்கை

 மே மற்றும் ஜூன் 2025 ”காக்கைச் சிறகினிலே” இதழ்கள் குறித்து இருவரது பதிவுகள் என்னை மிகுதியாக உற்சாகம் கொள்ள வைத்துள்ளன

தோழர் சுகு எப்படி இப்படி வாசிக்கிறார் என்று தொடர்ந்து வியந்தபடியே இருக்கிறேன். 19.05.2025 முதல் 25.05.2025 முடியவான ஏழு நாட்களில் அவர் வாசித்தவற்றை பட்டியலிட்டு இருக்கிறார்
ஏழு நாட்களில் இவ்வளவு வாசித்துவிட முடியுமா?
வாசிக்கிறார்
அவர் வாசிப்பவற்றுள் “காக்கை”யும் உண்டென்பதே எனக்கு பெருமிதமான விஷயம்





காக்கையின் அனைத்து கட்டுரைகளும் காத்திரமாக உள்ளதாக சொல்கிறார்
சுகுவிற்கு சொல்வதற்கு ஒன்று இருக்கிறது
அத்தனை காத்திரத்தையும் எனது சுமாரான 65/66 சமன் செய்துவிடும்
பிறகு
தோழர் அப்பண்ணசாமி,
ஜூன் இதழில் வரும் தனது கட்டுரை குறித்து தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்ததும் என்னை திமிர்கொள்ள வைத்தது
இருவருக்கும் என் அன்பு

சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு

 தூங்குவதற்கு முன்பாக சொல்வதற்கு இரண்டு


மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோட் ஷோ நிகழும் இடங்களில் பந்தல் குடியும் உண்டு

அந்தப் பகுதியில் உள்ள தூர் வாரப்படாத சாக்கடை இருக்கிறது

இந்தப் பகுதி அவரது கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக துணி கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது

இது திராவிட மாடலுக்கு எதிரானது என்பது ஒன்று

பாமகவில் நடந்துகொண்டிருப்பது அரசியல் மோதல் அல்ல

அது சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு குறித்த தெறிப்பு என்பது இரண்டு

#சாமங்கவிந்து ஒரு மணி எட்டு நிமிடங்கள்
01.06.2025

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...