Showing posts with label தமிழ் பக்தி மரபு. Show all posts
Showing posts with label தமிழ் பக்தி மரபு. Show all posts

Wednesday, June 11, 2025

முருகன் எங்கள் பிள்ளை

  மரியாதைக்குரிய அமித்ஷா,

வணக்கம்
தேர்தலைத் தவிர வேறு எதுகுறித்தும் கலைப்படவே மாட்டீர்களா நீங்கள்?
வெள்ளம் வந்து மக்கள் தத்தளித்தபோது வந்துபார்க்காத நீங்கள்
தேவையான உதவிகளை செய்யாத நீங்கள்
எங்கள் மக்களுக்குரிய பணத்தை தர மறுக்கிற நீங்கள்
பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவியை ஏதோ தமிழ்பூமி களவாண்டுகொண்டு வந்ததுவிட்டது என்று
தமிழ் மண்ணை இழிவுபடுத்திய நீங்கள்
தேர்தலுக்காக முருகனைத் தூக்கிக்கொண்டு எம் மண்ணை எதிர்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்
முருகன் எங்கள் பிள்ளை
முருகன் எங்கள் தகப்பன்
முருகன் எங்கள் தோழன்
நீங்கள் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் அதே மதுரையில்தான்
கணவன் இறந்ததும் அழுது சிவந்த விழிகளோடு அரண்மனை வாசலுக்கு வந்த கண்ணகி அங்கிருந்த வாயிற்காவலினிடம்
”வாயிலோயே
வாயிலோயே
அறிவு அறை போகிய
பொறி அற நெஞ்சத்து
இறை முறை பிழைத்தோன்
வாயிலோயே”
என்பாள்
அறிவு முற்றிலும் கீழற்றுப்போய் அற நினைவு சிறிதும் இல்லாத அரசநீதி தவறிய பாண்டியனின் காவலனே
உங்களது அறிவாற்றல் எனக்குத் தெரியும். உறுப்பினர்களே இல்லாத மாநிலங்களிலும் ஆட்சியை அமைத்த எதிமறை அறிவின் உச்சம் நீங்கள்
ஆகவே முதல் பகுதியை எடுத்து விடுகிறேன்
”அற நினைவு சிறிதும் இல்லாத அரசநீதி தவறிய மன்னனின் காவலனே” என்று கண்ணகி உங்கள் மாளிகை வாசல் காவலர்களிடம் பேசுவது போலவே உள்ளது

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...