Monday, June 24, 2013

3 . அக்ஷ்ய பாத்ரம்

“ மண்டினி ஞாலத்து
   வாழ்வோர்க்கெல்லாம்
  உண்டி கொடுத்தோர்
  உயிர் கொடுத்தோரே”

வணிகச் சமூகம் கண்ட மிகக் கொடிய வறுமையை, நெருக்கடியை தீர்க்கும் ஒரு கருவியாக மணிமேகலையின் கையில் தஞ்சமடைகிறது அட்சயப் பாத்திரம் .

அட்சயபாத்திரம் கிடைத்ததும் எது அறம் என துறவியைக் கேட்டபோது தான் மேலே குறிப்பிட்ட வரிகளை சொன்னதாகவும், ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியை பெற்ற மணிமேகலை அது கொண்டு பசிப்பிணி தீர்ப்பதே நல்லறம் என்றும் சொன்னதாகவும் அறிகிறோம். 

அந்த மணிமேகலைக்கு அப்படியொரு அட்சயபாத்திரமெனும் அமுத சுரபியெனில் நமது மணிமேகலைக்கு ”அக்ஷ்ய பாத்ரம்” எனும் வலைப் பாத்திரம். ஆனால் இந்த வலைப் பாத்திரம் இவரே செய்தது.

“ இது நான் கையால் அள்ளிய கடல்”  என்று இவர் தனது வலையைப் பற்றிக் கூறுகிறார்.

“ இயற்கையில் திளைத்தல்
கலைகளை ரசித்தல்
காலார நடத்தல்
நிலத்தோடு வாழல்
புத்தக வாசனை
உண்மையைத் தேடல்
மனிதனாய் வாழ்தல்”

என்று மணிமேகலை தன்னைப் பற்றிக் கூறுகிறார். இவை முழுக்க முழுக்க உண்மை என்பதை இவரது வலை நிறுவுகிறது.

 “ புது வருஷமும் பொற்கோயில் அனுபவமும்”  என்ற ஒரு பயணக்கட்டுரை. அப்பப்பா, எனக்குத் தெரிய மணியனுக்குப் பிறகு வாசிப்பதற்கு சிரமம் தராத இப்படி ஒரு இலகுவான பயணக்கட்டுரை இவருக்கு வசப் பட்டிருக்கிறது.

தாய்லாந்தில் உள்ள அந்தப் பொற்கோயில் புத்தர் கோயில் என்பதே ஆச்சரியத்தை அள்ளிக் கொண்டு வந்து நம் முகத்தில் பூசிச் செல்கிறது.

அது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப் பட்ட ஆலயம். அதில் 28.5 மில்லியன் டாலர் செலவில் 5.5 டன் எடையிலான தனித் தங்கத்தாலான 15 அடி 9 அங்குலத்தாலான புத்தர் சிலை இருக்கிறது. இது போன்ற வரலாற்றுத் தகவல்களை இந்த வலை நமக்குத் தருகிறது. படிக்கிறபோது போகிற போக்கில் புத்தர் இப்படி கடவுளாகிப் போனாரே என்கிற ஆதங்கத்தையும் எந்தவித நெருடலோ, மிகையான பிரச்சாரமோ இன்றி வாசகனுக்குத் தருகிற வேலையை மிகச் சரியாக செய்கிறது இந்த வலை.

ஒரு புறம் பிக்குகள் தானம் பெற்று வாழ்வதும் அதே நேரம் முற்றும் துறந்த பிக்குகள் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதும் போகிற போக்கில் கட்டுரை எங்கும் விரவிக் கிடக்கின்றன.

படங்களை விற்கும் ஒரு மனிதன் சக மனிதர்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை சொல்கிறது. வருடப் பிறப்பன்றும் வீட்டில் மனைவி குழந்தைகளோடு இன்பமாய் கழிக்க இயலாமல் இப்படி வெய்யிலில் காய்ந்து படங்களை விற்க வேண்டிய சூழலில் அவர்களது வறுமை இருப்பதை வலியோடு சொல்கிறது.

அழகு, ரசனை,வரலாறு, அதுகுறித்த விமர்சனம், வாழ்க்கை,  உன்னதம் , வலி,
கலாச்சாரம், என்று எது எல்லாம் ஒரு பயணக் கட்டுரையில் இருக்க வேண்டுமோ அது எல்லாம் திகட்டாத சுவைகளோடு இந்த வலையில் கிடைக்கின்றன.

“ ஒரு குவளை ரசனை 1”  என்று ஒரு பதிவு. "ode on a grecian urn"  என்ற கீட்ஸ் 1800 களின் துவக்கத்தில் எழுதிய கவிதையை நினைவூட்டுகின்றன. அந்தக் கவிதையில்தான்
 “Heard melodies are sweet, but those unheard/ Are sweeter " என்ற தனது புகழ்மிக்க வரிகளை அவன் எழுதிப் போவான்.

மட்டுமல்ல கீட்ஸ் ஒரு கிரேக்க கோப்பையைப் பார்க்கிறான். அதன் பழமையும் அதில் உள்ள படங்களும் அவனை ஈர்க்கின்றன. அதில் ஒரு காட்சி. ஒரு இளைஞன் ஒரு யுவதியை முத்தமிட எத்தனிப்பான். அவள் தப்பித்து ஓட முயல்வாள். கீட்ஸ் சொல்வான்,

Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal – yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!

அய்யோ, அய்யோ எத்தனை அழகு. இதற்கு நிகராக என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அதை மணிமேகலையும் விரும்ப மாட்டார். ஆனால், தான் புதிதாய் வாங்கிய ஒரு குவளையில் வரையப்பட்டுள்ள அழகிய மயில் குறித்து இவர் எழுதும் போது நமக்கு நம்மை அறியாமலேயே கீட்ஸ் வந்து விடுகிறார். ஆக இந்த வலை கீட்ஸை நோக்கி நம்மை அநிச்சையாக உந்தித் தள்ளவே செய்யும்.

புலம் பெயர்ந்த வாழ்வின் வலியை, நெருக்கடியை, தாகத்தை , எது தாண்டியும் உயிர்க்கும் ரசனையை என்று எதையும் பார்க்க முடிகிறது இவரது வலையில். ஆனால் கொஞ்சமும் வறட்டுத்தனம் என்பதே இல்லை.

புலம் பெயர்ந்த நாட்டின் தேசிய அரசியல் ஜனநாயகத்தோடு இளைஞர்கள் கறைந்து போவதையும், போன தலைமுறைபட்டுப் புழு மனோபாவத்தோடு சுருங்கிப் போனதையும் வேதனையோடு பதியும் இவர், ”வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களையும் சிறகடிப்பில் தெரியும் வசந்தங்களையும் புலத்துத்தமிழ் எப்போது கொண்டுவரப்போகிறது?” என்று கேட்கும் போது புலம் பெயர்ந்த வாழ்க்கையின் படைப்பிலக்கியங்கள் குறித்த நமது ஏக்கம் நம்பிக்கை கொள்கிறது.


“ஒரு புத்தகம் படிக்கும் அனுபவம் என்பது தேநீர் குடிக்கும் அந்த ரசனை அனுபவத்திற்கு சற்றேனும் குறைந்ததல்ல” என்று இந்த வலையின் ஓரிடத்தில் காணக் கிடைக்கிறது.

வலையின் உள்ளே பயணித்துப் பாருங்கள்,

தேநீர்ப் பருகிக் கொண்டே ஒரு நல்லப் புத்தகத்தைப் படிக்கும் அனுபவம் கிடைக்கும்.

வலை முகவரி
http://akshayapaathram.blogspot.in/

26 comments:

  1. நல்ல அறிமுகம். தொடர்கிறோம் தொடர்ந்து.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  3. தொடர்கிறோம் தொடர்ந்து,மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  4. Arimugame oru puthaga review aagi elloraiyum paarka thoondugirathu.

    ReplyDelete
  5. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  6. நன்றி தோழர், அறிமுகம் அருமை.. மேலும் இது போன்றதொரு வலைப்பூவை காணச் செய்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  7. நன்றி தோழர், அறிமுகம் அருமை.. மேலும் இது போன்றதொரு வலைப்பூவை காணச் செய்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  8. அற்புதங்கள் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை நல்லதோர் அருமையான அறிமுகத்திற்கு நன்றி தோழர். பிள்ளையை தந்தை கைபிடித்து அழைத்துச் செல்லும் லாவகமான உங்கள் எழுத்துக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் முத்துக்குமார்

      Delete
  9. பிள்ளையின் கைபிடித்துச் செல்லும் தந்தையின் இலாவகத்தோடு எங்களுக்கு ஓர் அறிமுகம் தந்தமைக்கு நன்றி தோழர்

    ReplyDelete
  10. ஒரு வலைப்பூவின் வாசத்தையும், அதன் உள்ளிருக்கும் தேனையும் மிக அற்புதமாக வெளிக்கொணர்ந்த ஞான வண்டு எனது தோழர் எட்வின் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம் சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செய்தாலி

      Delete
  12. சூரியதாஸ்July 28, 2013 at 4:21 PM

    நயம்பட ஒரு புதிய வலைப் பக்கத்தை அறிமுகம் செய்துள்ளீர்கள் வாசிக்கத் தூண்டும் படி..அருமை தோழர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சூரியடாஸ். நல்ல வலை . வாசியுங்கள்.

      Delete
  13. சிறப்பான அறிமுகம்... பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  14. அறிமுகம் புதுமை..அவரிடம் (எட்வினிடம்) கண்டேன்...
    “........“ மண்டினி ஞாலத்து
    வாழ்வோர்க்கெல்லாம்
    (வலைப் பூ மூலம்)
    தகவல் கொடுப்போர்
    உயிர் கொடுத்தோரே”
    என்று இந்த மணிமேகலையைப் பற்றி எண்ணத் தூண்டுகிறது எட்வினின் அறிமுகம்..அவரின் வலைப் பூவைப் படித்துப் பார்க்கும் ஆவலில்....
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  15. அல்லவை தேய அறம் பெருகும்
    நல்லவை நாடி இனிய சொலின்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீரசா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...