Tuesday, January 24, 2012

செயத்தக்க...

சூரியனே கம்பளி கேட்கும் அளவு பனியும் குளிரும் அமெரிக்காவில், ஆனாலும் சூரியனை விடவும் சூடாய்தான் இருக்கிறது அமெரிக்க தேர்தல் களம்.


“ராணுவம் எவ்வளவு முக்கியமானது? அமெரிக்காவின் அடையாளமும் ஆளுமையுமே ராணுவம்தானே. ராணுவத்திற்கான செலவைக் குறைத்ததன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் மேன்மையைக் குலைத்துப் போட்ட ஒபாமாவுக்கா உங்கள் வாக்கு?” என்று தன்னால் முடிந்த அளவு தேர்தல் களத்தை சூடேற்றி தேர்தலை வசப் படுத்த முயல்கிறது இன்றைய எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி.


குடியரசுக் கட்சியின் இந்த யுக்தி ஜனநாயக் கட்சியை வெகுவாக அசைத்துப் போடவே கட்சி ஒபாமாவைப் பார்க்கிறது.

பதறித்தான் போகிறார் ஒபாமா.

“அய்யோ, அய்யயோ... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்களைப் போலவே நானும் ராணுவத்தை நம்பித் தானே தேர்தலை சந்திக்க வேண்டும். வேறெந்த நல்லதை செய்திருக்கிறேன். சொல்லி வாக்கு கேட்க. இது கூடவா தெரியாது எனக்கு.

முன்பு எப்போதையும் விட  ராணுவத்திற்கு இப்போது அதிகம் நிதி ஒதுக்கப் படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ராணுவத்திற்கு செலவு செய்யும் பத்து நாடுகளின் மொத்த செலவை விடவும் அதிகமாய் செலவு செய்கிறோம்.

எனவே குடியரசுக் கட்சியின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.”

இன்னொரு பக்கம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் ஏறத்தாழ இதே வாரத்தில் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நம் நாட்டில் உள் நாட்டு உற்பத்தியில் 0.9 சதத்திற்கும் குறைவாகவே அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

அவர் செய்யக் கூடாத செலவை பேரதிகம் செய்கிறார். இவரோ செய்ய வேண்டிய செலவைத் தவிர்க்கிறார். இவர்கள் இருவருக்காகவும்தான் வள்ளுவன் இப்படி எழுதினானோ என்னவோ

”செயத்தக்க அல்ல

செயக் கெடும்
செயத்தக்க
செய்யாமையானும் கெடும்”

“செயத்தக்க அல்ல
செயக் கெடும்
செயத் தக்க
செய்யாமையானும் கெடும்”

4 comments:

 1. வ‌ள்ளுவ‌ர் துணைகொண்டு இருவ‌ருக்கும் ஒருசேர‌ குட்டியிருக்கிறீர்க‌ள் தோழ‌ர்!

  ReplyDelete
 2. படித்த முட்டாள் நம்ம பாரத பிரதமர் ஐயா......ஒன்னும் தெரியாத Bush 2வது தடவை ஜெயித்து வந்தார் அப்படி இருக்க ஒபாமா 2வது தடவை கண்டிப்பாக வந்துவிடுவார். ஆனால் தேர்தல் வரும் வரை ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் மாற்றி செய்திகள் இட்டு வியாபாரத்தை பெருக்கி கொள்வது இங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

  ReplyDelete
 3. ஆகா மொத்தாம் எல்லா நாட்டு அரசியல்வியாதிகளும் ஒரே மாதிரிதான்

  ReplyDelete
 4. அன்புள்ள...

  உறரணியின் பணிவான வணக்கங்கள்.

  லீப்ஸ்டர் பிளர்க்

  இது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும். இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே?) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.

  பகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.

  நான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.

  1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.

  2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.

  நன்றிகள்.


  எனக்குப் பிடித்தவை ஏழு.

  1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன
  அப்பா.

  2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.

  3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும
  எப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி
  என் மகன்.

  4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க
  நான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த
  தனிமை
  .
  5. கடவுள் வழிபாடு,

  6.. குழந்தைகள்.

  7. தமிழ்மொழியின் இலக்கியங்கள்.  பகிர்தல் நேரம்


  1, எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்
  இல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்
  என் நண்பன்...உடன்பிறவா சகோதரன்...உணர்வான
  எழுத்துக்களுக்குச் சொந்தக்காரன்....
  நண்பன் மதுமிதா - க்கு..

  2. இடைவிடாமல்...துவண்டுவிடாமல்...அப்படி நாங்கள்
  துவள்கிற தருணங்களில் உரையாடி,,தன்னுடைய
  பன்முகத் திறனால் பளிச்சென்று,,,உறவுகளை
  மேன்மையுறச் செய்யும் படைப்பாளி..
  என் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...

  3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்
  மனதிற்குப் பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை
  களைப் பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்
  அவர்களுக்கு...

  4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்
  தேர்வும்,, மனதிற்கு இதமும்....ஆழமும் என
  இயங்கிக் கொண்டிருக்கும் சைக்கிள் மிருணாவிற்கு...

  5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்
  வகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்
  வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்
  அவர்களுக்கு...


  அனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

  இந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.

  ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...