Saturday, March 9, 2013

சேலம் மகளிர் தின விழா






கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கமும் சேலம் அரசு மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி வந்தேன்.

தோழர் மோகனா மூலம் வந்த வாய்ப்பு.

“ அப்பா மோகனா ஆண்ட்டி”

வெள்ளச்சி நீட்டிய அலைபேசியை வாங்கினேன்.

“ சொல்லுங்க தோழர்”

“ கோவை மண்டல பொது இன்சூரஸ் ஊழியர் சங்கமும் சேலம் அரசு மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில் பேச இயலுமா?”

“ பேசலாம்”

” சரி, இன்னும் கொஞ்சம் நேரத்துல ஷோபனா பேசுவாங்க இது பத்தி”

“சரி”




மேலே உள்ள தோழர் ஷோபனா அலைபேசினார்கள்.

அருமையான ஏற்பாடு. ஏறத்தாழ அறுநூறுக்கும் அதிகமான குழந்தைகள். இடம் இல்லாமல் தரையிலும் அமர்ந்து கேட்டார்கள். 11.53 ற்கு ஆரம்பித்து 01.08 கு முடித்தேன்.





எத்தனை உற்சாகம், எத்தனை ஆர்வம். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் பற்றி பேசியபோது ஒன்றிரண்டு குழந்தைகள் அழுவதைப் பார்த்தேன். இந்தக் குழந்தைகளோடு பேச ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தோழர் மோகனாவிற்கு மனதார நன்றியை சொல்லிக் கொண்டேன்.




தோழர்கள் குரு, கருப்பையா, சோபனா ஆகியோருக்கும் இந்த வாய்ப்பிற்காக நன்றி சொல்ல வேண்டும் . அப்படி ஒரு குழந்தைகளின் திரள்.

பொதுவாகவே கல்லூரி குழந்தைகள் கேட்க மாட்டார்கள், பொறுப்பற்றவர்கள் என்பதை நிராகரிக்கிறேன்.

எதைப் பேச வேண்டுமோ அதை, கேட்கிற மாதிரி பேசினால் கேட்கவே செய்வார்கள்.



7 comments:

  1. வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  3. நல்ல பணி தொடரட்டும்.. வாழ்த்துகள் நண்பரே! இந்த இளந்தளிர்கள் ஜாதியம் என்ற தீமையிலிருந்து விடுபட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜோஷி. தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  4. நல்லது. நண்பரே தங்கள் நற்பணி தொடரட்டும். இந்த இளந்தளிர்கள் ஜாதியம் என்ற தீமையில் இருந்து விடுபட முடிந்தால் நம் சூழலுக்கு அது போல் நல்லது ஏதுமில்லை.

    ReplyDelete
  5. பேராசிரியர்களின் கற்பித்தலை மட்டுமே கேட்டுப்பழகிய மாணவ செவிகளுக்கு தங்களின் உரையாடல் சிறகை விரித்திருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அது எப்படிய்ஓ தெரியவில்லை மது. ஆனால் குழந்தைகளைப் பார்த்ததில் எனக்கு சிறகுகள் முளைத்தது

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...