Thursday, June 9, 2022

இடை இசைக்கு நாகேஷ் ஆடியிருப்பார் பாருங்கள்

 “பத்துப் பதினாறு முத்தம் முத்தம்”

என்ற படலை ஒவ்வொரு நாளும் நான்கைந்துமுறையேனும் கேட்பவன் நான்
அவ்வப்போது அந்தப் பாடலைக் கேட்பதில் இருந்து கடந்து போய்விடுதும் உண்டு
பிறகு எப்போதாவது அந்தப் பாடலைக் கேட்கிற வாய்ப்பு கிட்டினால் மீண்டும் பைத்தியம்போல் தினமும் தினமும் பலமுறை கேட்க ஆரம்பித்துவிடுவேன்
அப்படித்தான் இப்போதும் அந்தப் பாடலுக்குள் விழுந்து கிடக்கிறேன்
இந்தப் பாடலில் சொல்வதற்கு குறிப்பாக இருவர் உண்டு
இந்தப் பாடலைப் பாடியவர்கள் TMS, மற்றும் L.R. ஈஸ்வரி
இதற்கு நடித்தவர்கள் சிவாஜி மற்றொருவர் சரோஜா தேவி
நான் குறிப்பிட்ட இருவர் L.R.ஈஸ்வரி மற்றும் நாகேஷ்
“மழைத் தாரகை
குளிர் ஓடையில்
விழும்போதிலே
ஒரு இன்பம்”
என்ற பகுதியை ஈஸ்வரி அம்மா அப்படிப் பாடி இருப்பார்கள்
மழைத் தரகை எனும்போது விரிந்து கிடக்கும் உள்ளங்கை அளவு சன்னச் சன்ன கீறல்களோடு சவ்வு மாதிரி விரியும் அந்தக் குரல்
குளிர் ஓடையில் எனுபோது சன்ன சன்ன பிசிறுகளோடு கூடிய நூலாக மாறும்
அய்யோ சாமி,
நான் போகும் வரைக்குமாச்சும் நீங்க இருக்கனும் ஈஸ்வரித் தாயே
சரணங்களுக்கிடையாலான இடை இசைக்கு நாகேஷ் ஆடியிருப்பார் பாருங்கள்
முகத்தில் சிறு கீறல் அளவுக்கேனும் உணர்ச்சி இல்லாது இருக்காது
I MISS YOU NAKESH SIR

முகநூல்
03.06.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...