ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நபர்கள் மற்றும் இதழ்கள் மற்றும் நிறுவனக்களுக்கு விருதுகளை வழங்குகிறது விஜய் தொலைக் காட்சி.
இந்த ஆண்டிற்கான விருதுகளுக்கான பரிசீலனை இன்று நடந்திருக்கிறது. எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், மற்றும் வாசகர்கள் இந்த பரிசீலனையில் பங்கேற்றிருக்கிறார்கள். அது இன்று ஒளி பரப்பாகியிருக்கிறது.
அதில் இந்த ஆண்டின் சிறந்த சிறு பத்திரிக்கைக்கான பரிசீலனையில் “ காக்கைச் சிறகினிலே” எடுத்துக் கொள்ளப் பட்டது என்ற தகவலை தோழர் ஜெயதேவன் இதழாசிரியர் தோழர் முத்தையாவிற்கு சொல்லியிருக்கிறார். அவர் உடனே தோழர் சந்திரசேகருக்கு தொலை பேச அவர் தொலை பேசியில் என்னை பிடித்தார்.
“ அப்படியா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”
இந்த நேரத்தில் ஓ ஞாநியிடமிருந்து அழைப்பு வந்தது. சந்திர சேகரிடம் சொல்லிவிட்டு ஞாநியின் அழைப்பை ஏற்றேன்.
“ஹலோ எட்வின், விஜய் டீவியில் இந்த ஆண்டின் சிறந்த சிற்றிதழ் விருதிற்கு நான் காக்கையைத்தான் முன் மொழிந்தேன். ஏன் காக்கைக்கு தர வேண்டும் என்பதற்கான என் தரப்பு நியாயங்களை 5 நிமிடம் பேசினேன். ஆனால் என் பரிந்துரையைத் தவிர எல்லாம் எடிட் செய்யப்பட்டு விட்டது” என்றார்
2011 அக்டோபர் முதல் தேதியன்று முதல் இதழை வெளியிட்டோம். இந்த மாத இதழ் 16 வது இதழ். மிகுந்த சிரமத்திற்கு இடையேயும் தோழர் முத்தையாவின் பண இழப்போடும்தான் வருகிறது.
எழுத்தாளர் கி. ராஜ்நாராயணன் அவர்களது இந்த ஆண்டிற்கான சிறந்த சிற்றிதழ் விருதினை “காக்கைச் சிறகினிலே” தீராநதியோடு ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று விஜய் தொலைக் காட்சி விருதிற்காகவும் பரிசீலிக்கப் பட்டிருக்கிறது.
மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் இவை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.கூடவே பொருப்புணர்ச்சி அதிகரித்திருப்பதையும் உணர்கிறோம்.
சிற்றிலக்கியத் தளத்தில் “காக்கைச் சிறகினிலே” யாராலும் தவிர்க்க இயலாத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை உணர்கிறோம்.
படைப்பாளிகள், அறிஞர்கள், வாசகர்கள், அழகியலோடு வடிவமைத்த தம்பி விஜயன், அச்சிட்ட அச்சகத்தின் ஒவ்வொரு ஊழியர், துர்கா பைன்ண்டிங்ஸ் சரவணன், விளம்பரம் தந்தவர்கள், ஏஜெண்டுகள், கடைகளின் உரிமையாளர்கள் அனைவருமே இதற்கு பங்காளிகள் என்பதை உணர்ந்து அவர்களை நோக்கி நன்றியோடு கரம் குவிக்கிறோம்.
தொடர்ந்து நல்ல படைப்புகளுக்காக கை ஏந்துகிறோம்.
ஒடுக்கப் பட்ட மக்களின் குரலை உரத்து ஒலிக்க உதவுங்கள்.
வருட சந்தா 225 ரூபாய்
தொடர்புக்கு
காக்கை
288,டாக்டர் நடேசன் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை 600005
அலைபேச 9841457503
உங்க கருத்தை என் பக்கம் பார்த்துதான் இங்க வந்தேன். எனக்கு விஜய் டி.வி வருவதில்லை. பல நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது. உங்க பகிர்வின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றிங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteமகிழ்வான அதே நேரம் பெருமிதமான செய்தி .. உரிய அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைப்பது அரிதான இன்றைய தமிழ் சூழலில் காக்கை அதனை பெற்றிருப்பது சாதாரண விஷயமில்லை .. வாழ்த்துகள் உங்கள் உழைப்பும் , காக்கையி ன் இன்ன பிற பொறுப்பாளர்கள் ( முத்தையா , சந்திர சேகர் ) இன்னும் .. இன்னும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி தோழர்.
Deleteஇதில் உங்களது உழைப்பும் இருக்கு தோழர்.
மிக்க நன்றி
ஆயுள் சந்தா போன்ற எதுவும் இல்லையா தோழர்.
ReplyDeleteமிக்க நன்றி அலாய்
Delete1100 ரூபாய் ஐந்தாண்டுகளுக்கு. அனுப்பி வை .மகிழ்வேன்.
Kindly send me the office and address to be sent the subscription i will take care of it.
ReplyDeleteபதிவின் இறுதியில் முகவரி இருக்கு அலாய்
Deleteவாழ்த்துக்கள் எட்வின்!
ReplyDeleteமிக்க நன்றி உமா
Deleteமிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் தோழர்.
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete