Saturday, July 23, 2011

அந்நியம்







தேர்வென்றும்
நோயென்றும்
நீ சொன்ன ஏதேதோ காரணங்களால்
பேரன்களை மருமகளை 
நீ அழைத்து வராமைக்கு சமாதானப் பட்ட
இந்தப் பாழும் கிழவிக்கு 
பத்து நாள் பிடித்தது 
உன்னையே நீ அழைத்து வரவில்லை என்ற 
உண்மை பிடிபட


99 comments:

  1. உண்மை பாசம் இந்த கலியுலகில் பிடிபடாதுங்க... கவிதை அற்புதம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒன்பது வரிகளில் ஒரு வாழ்க்கை முறையைப் பதியவும் , விமர்சிக்கவும் செய்யும் இந்த கவிதைக்கு கூர்முனை.

    ReplyDelete
  3. உண்மை பிடிபடாமல் இருக்க செய்யும் ப்ரியத்தனங்களும் ஆழ்த்தும் குற்றவுணர்வில் . நாமும் பாவப்பட்ட ஜென்மங்கள் தான்.

    ReplyDelete
  4. am ur 100th follower sir...really too nice:)

    ReplyDelete
  5. யதார்த்தம்... நெஞ்சை சுடும் உண்மை...

    ReplyDelete
  6. /// குடந்தை அன்புமணி said...
    யதார்த்தம்... நெஞ்சை சுடும் உண்மை...///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  7. குழந்தையில் அனாதையாக்கப்பட்டவர்களின் வலியைவிட‌
    வாழ்ந்து முடிக்கின்ற தறுவாயில் அனாதையாக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் வேதனையானது, அதனை சில வரிகளில் கொண்டு வந்துவிட்டீர்கள் ...

    ReplyDelete
  8. ///நட்புடன் ஜமால் said...
    குழந்தையில் அனாதையாக்கப்பட்டவர்களின் வலியைவிட‌
    வாழ்ந்து முடிக்கின்ற தறுவாயில் அனாதையாக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் வேதனையானது, அதனை சில வரிகளில் கொண்டு வந்துவிட்டீர்கள் ...///

    அந்த வலி மிகக் கொடுமையானது தோழர்

    ReplyDelete
  9. உண்மைதான் ....சிலவற்றை நம்புவதற்கு
    சிரமமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
  10. /// prabhakaran said...
    உண்மைதான் ....சிலவற்றை நம்புவதற்கு
    சிரமமாகத்தான் இருக்கிறது...
    May 22, 2012 5:23 PM ///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  11. நாளையை... நான் நினைத்துப் பார்த்தேன்... அருமையான கவிதை தம்பி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ///புன்னியாமீன்... said...
    நாளையை... நான் நினைத்துப் பார்த்தேன்... அருமையான கவிதை தம்பி, வாழ்த்துக்கள் ///

    உண்மைதான் தோழர்.

    ReplyDelete
  13. ஜானகிராமன் ஹரிஹரன்May 22, 2012 at 11:09 PM

    அந்த வெண்தலை அழகிக்கு தெரியாததல்ல நமது பொய்கள். குழந்தையிலிருந்தே நம்மை மன்னித்தபடியே இருக்கிறாள் அவள். இருந்தும் இத்தனை பொய்களைத் தாண்டியும் தன் பேரக் குழந்தைகளைப் பார்ப்போமென்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாள் அவள். அம்மா என்பது பெயர்ச் சொல்லல்ல - உயிர்ச் சொல்..

    ReplyDelete
  14. ///ஜானகிராமன் ஹரிஹரன் said...
    அந்த வெண்தலை அழகிக்கு தெரியாததல்ல நமது பொய்கள். குழந்தையிலிருந்தே நம்மை மன்னித்தபடியே இருக்கிறாள் அவள். இருந்தும் இத்தனை பொய்களைத் தாண்டியும் தன் பேரக் குழந்தைகளைப் பார்ப்போமென்ற நம்பிக்கையில்தான் இருக்கிறாள் அவள். அம்மா என்பது பெயர்ச் சொல்லல்ல - உயிர்ச் சொல்.. ///

    அம்மா என்பது எதுவுமே ஆகாதே
    அம்மான்னா அம்மாதான் ஜானகி

    ReplyDelete
  15. வலித்துவிட்டது.. அவரது ஏக்கம், தலையில் வைத்த குட்டில்..!!!

    ReplyDelete
  16. ////திவ்யா @ தேன்மொழி said...
    வலித்துவிட்டது.. அவரது ஏக்கம், தலையில் வைத்த குட்டில்..!!!///

    மிக்க நன்றி திவ்யா

    ReplyDelete
  17. அந்நிய வரிகளைப் படித்து முடிக்கவும் கண்ணீரே வந்து விட்டது . வார்த்தையில் தெரிந்த வலி .

    ReplyDelete
  18. /// Sasi Kala said...
    அந்நிய வரிகளைப் படித்து முடிக்கவும் கண்ணீரே வந்து விட்டது . வார்த்தையில் தெரிந்த வலி . ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. வணக்கம் தோழர். தன் அன்னையைக் கொன்று அவளின் தலையைக் கொண்டு செல்லும் மகனின் கால் படியில் த்டுக்கியபோது, அந்த தலை சொல்லியதாம். பார்த்து மகனே என்று. அதுதான் தோழர் தாயமையின் இயல்பு. தான் என்னதான் மகனால் அவமானப் படுத்தப் பட்டாலும், மகனை விட்டுக்கொடுக்காத இதயம் அது. வலி இருந்தாலும் வெளியில் காட்டாத அன்பு நெஞ்சம் அது. வாழ்த்த்கள் தோழர், அன்னையின் வலியை, அந்நியத்தை நெஞ்சம் கனக்கும்படி பதிவு செய்தமைக்கு. இன்றும் உண்டு இதில் ஏராளமாய்.

    ReplyDelete
  20. அருமையான கவிதை :)

    ReplyDelete
  21. அருமையான கவிதை :)

    ReplyDelete
  22. வலி நிறைந்த வரிகள்

    ReplyDelete
  23. வலி நிறைந்த வரிகள்

    ReplyDelete
  24. வலி நிறைந்த வரிகள்

    ReplyDelete
  25. arumai kavithai vaazththukkal...amuthuvijayan.

    ReplyDelete
  26. நல்ல நறுக்கான கவிதை

    ReplyDelete
  27. அறுமையான வாரிகள்

    ReplyDelete
  28. Replies
    1. மிக்க நன்றின் தோழர்

      Delete
  29. முதுமையின் வெள்ளந்தி மனமும், அதனுள் மறைந்திருக்கும் சோகமும் புதுக்கவிதையாய்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிலவரசு. தொடர்ந்து வலைப் பக்கம் வந்து போக அழைக்கிறேன்

      Delete
  30. இது கவிதையல்ல.... யதார்த்தத்தின் வெளிப்பாடு.... தாய்மையின் மகத்துவம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்புமணி.தொடர்ந்து வலைக்கு அழைக்கிறேன்

      Delete
  31. நெகிழ்ந்திடச் செய்த
    அரிய கவிதை

    பாராட்டுக்கள் தோழரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவிநவன்.தொடர்ந்து வலப் பக்கம் அழைக்கிறேன்

      Delete
  32. நல்ல நிதர்சனமான கவிதை. இது சொல்லும் கதைகள் பல.வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் சுரேஷ். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  33. அருமை… தாய் கிழவியின் ஏக்கத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி….

    ReplyDelete
  34. கலியுக அத்தியாத்தில் இதுவும் ஒன்று.....
    கவிதைக்கு பொருத்தமான படம் காணும் போது மனம் அதிகமாக வலிக்கிறது..

    ReplyDelete
  35. க‌விதைய‌ல்ல‌, ஒரு சாட்டை.
    க‌லிகால‌ ஓட்ட‌த்தில் தாயை ம‌ற‌ந்த‌
    போலி வாழ்வின் விகார‌ம் காட்டும் ஆடி
    காட்டும் ந‌ம் வ‌ன்ம‌ முக‌ம்
    ந‌ம்மை த‌லை க‌விழ‌ வைக்கிற‌து.
    அக்கினிக் குஞ்சாய் எழுத்துக்கள்.
    அன்னைக்கு தெரிந்தாலும்
    'அவ‌ன் பாவம் போகட்டும்'
    என்றே வேண்டும் அவ‌ள் ஆசி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து வலைக்கு அழைக்கிறேன்

      Delete
  36. அற்புதமாக இருக்கிறது கவிதை.

    ReplyDelete
  37. அருமையான கவிதை பாழும் கிழவிக்கு பத்து நாள் பிடித்தது உன்னையே நீ அழைத்துவரவில்லை என அறிய! வலிமிகுந்த வரிகள் நடைமுறை யதார்த்தம் என்று சொல்லி இதை புறக்கணிக்க முடியாது. உறவுகளை தொலைத்து கடைசியில் நிற்கதியில் நிற்கப்போகிறோம் என்பதை பூடகமாக சொல்கிறது இந்தகவிதை.வாழ்த்துகள் சொல்லமுடியவில்லை இந்த கவிதை ஏற்படுத்திய வலியில்.

    ReplyDelete
  38. குறளைவிட கொஞ்சமே அதிகமான வரிகள். குற்றவுணர்வு உள்ளோரின் குரல்வளையை நெரிக்கிறது. என் குரல்வளையும் நெரிபடுகிறது. வளமான, கனமான வார்த்தைகளுக்கு வாழ்த்துகள்!

    - நெல்லைபாரதி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  39. ஆஹா.....அருமையான கவிதை! என் வயதுக்கு இன்னும் நன்றாகப்புரிகிறது!
    ஐயா! நான் பதின்ம வயதில் காதல் வயப்பட்டபோதும் கூட ஒரு கவிதை எழுதியதில்லை. காரணம் அது எனக்கு வராது....It's not my Cup of Tea.....என்பது தான்!

    ஆனால் நல்ல கவிதை எழுதுபவர்களைப்பார்த்து பொறாமை வரும்!

    எனக்குப்பொறாமை வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. உங்களது பெருந்தன்மையைப் பார்த்து எனக்குப் பொறாமையாய் இருக்கிறது தோழர். மிக்க நன்றி தொடர்ந்து சந்திப்போம் தோழர்

      Delete
  40. ஆஹா.....அருமையான கவிதை! என் வயதுக்கு இன்னும் நன்றாகப்புரிகிறது!

    ஐயா! நான் பதின்ம வயதில் காதல் வயப்பட்டபோதும் கூட ஒரு கவிதை எழுதியதில்லை. காரணம் அது எனக்கு வராது....It's not my Cup of Tea.....என்பது தான்!

    ஆனால் நல்ல கவிதை எழுதுபவர்களைப்பார்த்து பொறாமை வரும்!

    எனக்கு இப்போது பொறாமை வருகிறது!

    ReplyDelete
  41. மறுக்கவே முடியாது...
    மனம் குறுகுறுக்கிறது....
    அருமையான வெளிப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அருள்கூர்ந்து முகம் காட்டுங்கள்

      Delete
  42. உன்னையே நீ அழைத்து வரவில்லை - அருமை

    ReplyDelete
  43. அன்னியப்பட்டுபோன அன்னையின் புரிதல் கவிதையில்...

    வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாப்பு. தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  44. வணக்கம் தோழர்.
    //இந்தப் பாழும் கிழவிக்கு
    பத்து நாள் பிடித்தது
    உன்னையே நீ அழைத்து வரவில்லை என்ற
    உண்மை பிடிபட//
    இந்த வரிகள்,தாயாய் இருந்து படிப்பவர்களுக்கு, வலியை உணரும் தாய்க்கு நெசமாலுமே,நெஞ்சம் வெந்து போகும்.வாழ்த்துக்கள் தாயின் வலியை உணர்ந்து பிரசவித்த வரிகளுக்கும், அதனைச் சுமந்து எங்களை உணர்ந்து உறைய வித்த எட்வின் தோழருக்கும்..

    ReplyDelete
  45. கூர்மையான வரிகள்....வாழ்த்துக்கள்...தொடரவும்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் சிங்காரம். நானும்ம் தொடர்ந்து எழுத முயல்கிறேன். நீங்களும் தொடர்ந்து வரவும்

      Delete
  46. உள்ளத்தை உலுக்கும் வரிகள். நாம் தாண்டும் தாண்டி வந்த வழித்தடங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தக் குறுங்கவிதை. வாழ்த்துக்கள் எட்வின்.

    ReplyDelete
  47. மிக அருமை. வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். நலமா? தங்களின் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி தோழர்

      Delete
  48. மிக அருமை. வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete
  49. உறவுப்போலி
    ஊசியாய்க் குத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். நலமா?

      Delete
  50. உண்மை நிலையை உரைத்த விதம் அருமை.உண்மை உறைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். உங்களது தொடர்ந்த கவனிப்பு என்னை மகிழச் செய்கிறது.

      Delete
  51. உண்மை நிலையை உரைத்த விதம் அருமை.உண்மை உறைக்கிறது.

    ReplyDelete
  52. அருமையான கவிவரிகள்... வாழ்த்துக்கள்! - கலைமகன்

    ReplyDelete
  53. Such words/lines leave a lot of painful impact on me......but this is a factful reality these days, isn't it? Simple yet far reaching words/poem! Well done!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  54. Simple words; far reaching depth; Lovely ....keep it up! Best Wishes!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமர குரு தோழர்

      Delete
  55. வரிகளில் பொதிந்த தாய்மையின் துடிப்பு நம்மை அதிரச் செய்கிறது.
    எப்பவோ நான் எழுதிய வரிகள்..'தாய்க்கு வயதானாலும், தாய்மைக்கு வயதேது'
    புரிகிறதா..? பணம் ஈனும் காமதேனுவாய் வலம்வரும் பிள்ளைகளுக்கு..

    ReplyDelete
    Replies
    1. வதிலை வருவதும் விமர்சிப்பதும்...
      நெகிழ்ந்து நன்றி சொல்கிறேன் தோழர்

      Delete
  56. வரிகளில் பொதிந்த தாய்மையின் துடிப்பு நம்மை அதிரச் செய்கிறது.
    எப்பவோ நான் எழுதிய வரிகள்..'தாய்க்கு வயதானாலும், தாய்மைக்கு வயதேது'
    புரிகிறதா..? பணம் ஈனும் காமதேனுவாய் வலம்வரும் பிள்ளைகளுக்கு..

    ReplyDelete
  57. வரிகளில் பொதிந்த தாய்மையின் துடிப்பு நம்மை அதிரச் செய்கிறது.
    எப்பவோ நான் எழுதிய வரிகள்..'தாய்க்கு வயதானாலும், தாய்மைக்கு வயதேது'
    புரிகிறதா..? பணம் ஈனும் காமதேனுவாய் வலம்வரும் பிள்ளைகளுக்கு..

    ReplyDelete
  58. கவிதையும் பாட்டியும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் விநாயகம்

      Delete
  59. கவிதையும் பாட்டியும் அருமை.

    ReplyDelete
  60. அருமை தோழர்...
    தாயாய் இருந்து பார்க்கையில்
    எத்தனை வலி மிகுந்தது
    இந்த வாழ்வு..
    எந்தச் சுமையை அவள் சுமை என்றே கருதாமல்
    சுமந்தாளோ,பின்னாளில் அது புறக்கணிக்கிற சுமைதான் பெரியது அவள் வாழ்வில்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அருள்கூர்ந்து முகம் காட்டுங்கள்

      Delete
  61. மிக்க நன்றி தோழர். உங்களது தொடர்ந்த கவனிப்பு என்னை மகிழச் செய்கிறது.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...