Tuesday, June 21, 2011

இதுதான்...

”எதை எடுத்துப் போகலாம்
வராத கடனுக்கு”
தேடும்
ஈட்டிக் காரனிடம்
பொக்கை வாய்ச் சிரிப்போடு
இரண்டு கைகளையும்
நீட்டித் தாவும்
என் குழந்தை


59 comments:

  1. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நச் ! என்று அருமையான ஒரு கவிதை.. நன்று நன்று


    **************************

    ஒரு டாலர் திருடினால் தப்பா ?

    ReplyDelete
  3. Rathnavel said...
    அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.
    June 22, 2011 6:05 AM

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  4. மிருணா said...
    மிக அருமை.
    June 22, 2011 8:55 AM

    நன்றி மிருணா.

    ReplyDelete
  5. இக்பால் செல்வன் said...
    நச் ! என்று அருமையான ஒரு கவிதை.. நன்று நன்று


    **************************

    ஒரு டாலர் திருடினால் தப்பா ?
    June 23, 2011 12:39 AM

    மிக்க நன்றி இக்பால். உங்களது தொடர்ந்த வருகை என்னை மகிழ்ச்சிப் படுத்தும்

    ReplyDelete
  6. அனைவரையும் அரவணைக்கும் தெய்வமும் குழந்தையும் ஒன்றல்லவா?

    ReplyDelete
  7. தோழர்கள் கௌரிப்ரியா மற்றும் உமாவிற்கு நன்றிகள்

    ReplyDelete
  8. மிக அருமை எதார்த்தமான உண்மை

    ReplyDelete
  9. கமல்ராஜ் ருவியேMay 27, 2012 at 4:46 PM

    தேனோடு கொஞ்சம் மருந்து தருகிறீகள் நீங்கள்.... மிக அருமை..... உங்கள் வார்த்தைகள் தேன் ... குழைந்திருக்கும் கருத்து மருந்து...

    ReplyDelete
  10. அன்பு எட்வின்,
    இது நான் பல முறை படித்து ரசித்தது.

    ReplyDelete
  11. உறவும் பகையும்
    குழந்தைக்கு இல்லை

    ReplyDelete
  12. காசு தான் முக்கியம்....யார் சிரிச்சா யார் அழுதா நமக்கென்ன

    ReplyDelete
  13. போலி கெளரவங்களுக்கு பலியாகி, தேவைக்கதிகமான ஆசைகளை வளர்த்து கொண்டு ஈட்டிகாரர்களிடம் சிக்கி தவிக்கிறோம் ...

    குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஆவலை தூண்டும் வரிகள்

    ReplyDelete
  14. முத்து பாலகன்May 27, 2012 at 8:40 PM

    அருமை...அருமை...

    ReplyDelete
  15. அழகு.

    எப்படி கோபபடுவான் கொடுத்தவன்?

    இந்த எஞ்சலின் சிரிப்பிலேயே வந்த வேலையை மறப்பானாயின் அவனே மனிதன்.

    ReplyDelete
  16. சூரியதாஸ்May 27, 2012 at 11:44 PM

    என்ன சொல்ல... அழுது கொண்டே சிரிக்கிறது ஜென் கவிதை போல்

    ReplyDelete
  17. ///Muralikrishnan Chinnadurai said...
    மிக அருமை எதார்த்தமான உண்மை///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  18. ///கமல்ராஜ் ருவியே said...
    தேனோடு கொஞ்சம் மருந்து தருகிறீகள் நீங்கள்.... மிக அருமை..... உங்கள் வார்த்தைகள் தேன் ... குழைந்திருக்கும் கருத்து மருந்து... ///
    மிக்க நன்றி தோழர் கமல்ராஜ்

    ReplyDelete
  19. ///ஆதிரா said...
    அன்பு எட்வின்,
    இது நான் பல முறை படித்து ரசித்தது.///
    மீண்டுமொரு முறை நன்றி ஆதிரா

    ReplyDelete
  20. /// அரிஅரவேலன் said...
    உறவும் பகையும்
    குழந்தைக்கு இல்லை///

    பத்து கிலோ கவிதை

    ReplyDelete
  21. ///karthik balajee said...
    காசு தான் முக்கியம்....யார் சிரிச்சா யார் அழுதா நமக்கென்ன///
    அப்படி போய்விட முடியாமத்தானே இப்படி பின்னிரவுகளில் சிரமப் படுகிறோம் தோழர்

    ReplyDelete
  22. ///நட்புடன் ஜமால் said...
    போலி கெளரவங்களுக்கு பலியாகி, தேவைக்கதிகமான ஆசைகளை வளர்த்து கொண்டு ஈட்டிகாரர்களிடம் சிக்கி தவிக்கிறோம் ...

    குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற ஆவலை தூண்டும் வரிகள்////

    மிக்க நன்றி ஜமால். ஒருக்கால் மீண்டும் குழந்தையாகும் வழி தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள் தோழர்

    ReplyDelete
  23. ///முத்து பாலகன் said...
    அருமை...அருமை...///
    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  24. ///mannai muthukumar said...
    அழகு.

    எப்படி கோபபடுவான் கொடுத்தவன்?

    இந்த எஞ்சலின் சிரிப்பிலேயே வந்த வேலையை மறப்பானாயின் அவனே மனிதன்.///
    அதுதானே, எப்படி முடியும் தோழர்

    ReplyDelete
  25. ///சூரியதாஸ் said...
    என்ன சொல்ல... அழுது கொண்டே சிரிக்கிறது ஜென் கவிதை போல்///
    மிக்க நன்றி தோழர்.
    ஜென் இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது தோழர்

    ReplyDelete
  26. எட்வின் அவர்களே! கவிதையப் படித்ததும் இதயத்திற்குள் விரலைவிட்டு சுரண்டிய வலி! வலி நின்றதும் யதார்த்தம் பயமுறுத்தியது.கை நீட்டிய குழந்தையை எடுத்துச்சென்றால் ...இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை ஐயா!---காஸ்யபன்.

    ReplyDelete
  27. @kashyapan

    மிக்க நன்றிங்க தோழர்.

    நீங்க இப்படி சொன்னதை நெசத்துக்கும் ஒரு பெரிய விருதுக்கு ஒப்பானதாய் நான் கருதுகிரேன்.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  28. நான் ஊசி குத்த செல்லும் போது, பொக்கை வாய் காண்பித்து கலங்கச் செய்யும் பிஞ்சுசிரிப்பினை நினைவூட்டிய வரிகள்..!!! அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகள் உண்டல்லவா..!! யாரை நொந்துக்கொள்வது.. விதியைத் தவிர..!

    ReplyDelete
  29. /// திவ்யா @ தேன்மொழி said...
    நான் ஊசி குத்த செல்லும் போது, பொக்கை வாய் காண்பித்து கலங்கச் செய்யும் பிஞ்சுசிரிப்பினை நினைவூட்டிய வரிகள்..!!! அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகள் உண்டல்லவா..!! யாரை நொந்துக்கொள்வது.. விதியைத் தவிர..! ///

    மிக்க நன்றி திவ்யா.

    குழந்தைகளுக்கு வலிக்காமல் ஊசி போடுடா

    ReplyDelete
  30. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையைக் கொடுக்கும்படியாக வடித்திருக்கிறீர்கள்....

    நாமும் குழந்தைகள்தான் பெரும்பாலும், ஈபவனுக்கும் ஈட்டிக்காரனுக்கும் வேறுபாடு அறியாமல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். எப்படி இருக்கீங்க. நாளை பேசுகிறேன்

      Delete
  31. வணக்கம் தோழர். வாழ்த்துக்கள். மனதை வலி நெருடுகிறது..//ஈட்டிக் காரனிடம்
    பொக்கை வாய்ச் சிரிப்போடு..தாவும் குழந்தை.//இதுதான் குழந்தை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர் மோகனா

      Delete
  32. குழந்தையின் அழகும் அது சொன்ன விடயமும் அழகு , ஈட்டிக்காரனிடம் சிக்குண்டு சீரளியும் தன்மையினை அழகாக எடுத்துக்காட்டிய விதம் பாராட்டத்தக்கது ஐயா ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  33. அழகு ஐயா வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  34. ஈட்டிக் காரனின் மனத்தில் இடம்பிடித்த இந்தக் குழந்தையை நினைக்கும்போது இறைவன் இங்கே தான் இருக்கிறான்! அவனே தடுத்து நிறுத்துகிறான் ஈட்டிக்காரனின் பேராசையை! என்னே! வியப்பு?

    ReplyDelete
  35. குழந்தையின் பொக்கை வாய்! புளங்காகிதம் தெரிகிறது!! ஈட்டிக்காரனின் மடமையை எண்ணிச் சிரிக்கும் சிரிப்பின் வழியே! ஆசை சரி! பேராசை.............? தேவையா? கிடைப்பது எது ஆனாலும் எடுப்பதா? குளித்து முடித்தவுடன் மணலில் எத்தனை முறை புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்! அதைப் போல் தானே கிடைப்பது தானே கிடைக்கும்! ஈட்டிக்காரா? நீ புதைக்கப்படும்போது அல்லது எரிக்கப்படும்போது உன் ஈட்டி கூட உனக்கு உதவாது அல்லவா! விடு உன் பேராசையை! உதவு முடிந்தவரை மட்டுமே! அதுவே உன்னதமானது!

    ReplyDelete
  36. எதார்த்தம்!

    ReplyDelete
  37. எதார்த்தம்!

    ReplyDelete
  38. அதுதான் குழந்தை

    ReplyDelete
  39. மனதை கொள்ளைகொள்ளும் எட்டுவரிகளில் உள்ள அருமையான கவிதை , அழகு சார்.

    ReplyDelete
  40. நல்லதொரு பதிவு
    நாலு வரியில்...
    யதார்த்தத்தை இதமாக
    பதிவிட்ட வரிகள்...

    ReplyDelete
  41. குழந்தை தன்னை ஈடாகக் கொடுக்கிறதா..
    இல்லை,
    இறைஞ்சுகிறதா....
    என்ன கொடுமை.

    ReplyDelete
  42. need more like this. simply supper 17 words give the 10,000 words story. thanks for given

    ReplyDelete
  43. புரட்டி போடுகிறது வரிகள் ...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...