Saturday, December 31, 2011

2012


நேற்றுதான் ஒரு ”ஐ பேட்” வாங்கினேன். கடைக் காரப் பிள்ளையிடம் சொல்லி பழையப் பாடல்களாகப் பதிவு செய்து கொண்டேன். 

”எத்தனைப் பாட்டு தேறும்?” 

” 360 இருக்குங்க அப்பா. மிச்சம் இருக்கும் இடத்துல அடுத்த வாரம் ரெகார்ட் செய்து தரேங்கப்பா”

“இதுவே போதுண்டா சாமி. இதக் கேட்டு முடிக்கிறதுக்கு ஆயுசு இருக்குமோ என்னமோ?” சிரித்துக் கொண்டே வந்துவிட்டேன்.

ஒரு வழியாய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் அதை இயக்கக் கற்றுக் கொண்டு இயக்கினேன்.

“உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் கலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ?”

என்ற ”படகோட்டி” படப் பாடல்தான் முதல் பாடல். திரும்பத் திரும்ப பத்துப் பதினைந்துமுறை பைத்தியக் காரனைப் போல் அதையே கேட்டேன். 2011 இல் நான் கேட்ட கடைசிப் பாடல் அதுதான்.

பிசைந்து எடுத்துவிட்டது. வாலியா, டி.எம். எஸ் ஆ யாரைச் சொல்வது. போட்டிப் போட்டுக் கொண்டு மீனவர் துயரத்தை பிழிந்து தந்திருக்கிறார்கள்.

“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு”

என்ற இடத்தில் டி.எம்.எஸ் அழ வைத்துவிட்டார். நிலா விளக்கை நம்பியே பெரும்பகுதி இரவுகளை நகர்த்தும் தெற்குப் பகுதி மீனவனின் வாழ்வழித்து மின்விளக்கு எரிய வேண்டுமா?

“தனியாய் வந்தோர்
துணிவைத் தவிர
துணையாய் வருவோர் யாரோ?”

என்ற பகுதியும் அழவைக்கும். கூடங்குளம் அணு உலை எதிர்த்து துணிவோடுதான். போராடுகிறான்.

அவன் தனி ஆள் இல்லை என்பதை நிறுவ வேண்டாமா?

அணுவே இல்லாத பூமி நமது இலக்காகட்டும்.

இந்த ஆண்டில் நமது செயல் திட்டத்தில் இதுவே பிரதானமாகட்டும்.

எழுத முடிந்தோர் எழுதுவோம். பேச முடிந்தோர் பேசுவோம். வசப்படும் எல்லா வடிவக் கலைகளிலும் அணுவை எதிர்ப்போம், இந்த ஆண்டின் அசிங்கங்களில் ஒன்றான பரமக்குடி துப்பாக்கிச்சூட்டோடு நிறுத்து, இனியொரு முறை சேரியின் திசை நோக்கி துப்பாக்கியை நீட்டுபவன் எவனாயினும் சும்மா விடமாட்டோம் என்று சூழுரைப்போம்.

வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.

உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.

வாழ்த்துக்கள்.

18 comments:

  1. இனிய காலை வணக்கம் நண்பா,

    அருமையான பதிவு, பாடல்களினூடே எம் சமூகப் பிரச்சினை பற்றிய பிரக்ஞையினைச் சொல்லும் பதிவு,

    புலரும் இப் புதிய ஆண்டிலாவது எம் பிரச்சினைகள் தீரும் எனும் நம்பிக்கையோடிருப்போம்.

    ReplyDelete
  2. மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.

    ReplyDelete
  3. உங்களை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  4. ஏற்ற தாழ்வு இல்லாத ஒரு சமுக அமைப்புக்குக் குரல் கொடுப்போம்.ஆதிக்கம் எங்கிருக்கிறது என்பதை முதலில் கண்டு கொள்வோம்.உலகமே தூங்குகிறது நாம் மட்டும்தான் விழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது சரியான நிலைப் பாடா.?ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்வோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அந்த பாடலின் வீரியம் இப்போதுதான் புரிந்தது ஐயா...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. ஐயா..தங்களின் "கூடங்குள கரண்டு ஃபேக்டரி" இடுகையை என்னுடைய மயில் அகவும் நேரம்.. 04 :௦௦.. இல் பகிர்ந்துள்ளேன்..இதுவரை நான்கு அகவல்களில் இரண்டாம் முறையாய் உங்களின் பதிவு..நிறைய இரசிக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  7. //வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.

    உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.//

    விடியல் வரும் என்று காத்திராமல்
    விடியலை கொண்டு வருவோம்..

    இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  8. வாழ்த்துகள்

    கனவு மெய்ப்பட வேண்டும்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள்.
    உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.

    ReplyDelete
  10. எல்லோரும் வாழ்கின்றோம். நன்றாகவும் வாழ்கின்றோம். ஒன்றாக வாழ்கின்றோமோ? கரலாஞ்சி மராட்டியத்தில்தான் இருக்கின்றது. ஆதிக்கச் சாதியினரின் பழி வாங்குதலுக்கு ஆறு பேர் பலி வாங்கப்பட்டனர். நீதிபதியே கண்ணீர் வடித்திருக்கின்றார். காலம் என்று மாறுமோ?

    ReplyDelete
  11. \\\ நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் நண்பா,

    அருமையான பதிவு, பாடல்களினூடே எம் சமூகப் பிரச்சினை பற்றிய பிரக்ஞையினைச் சொல்லும் பதிவு,

    புலரும் இப் புதிய ஆண்டிலாவது எம் பிரச்சினைகள் தீரும் எனும் நம்பிக்கையோடிருப்போம். ///

    மிக்க நன்றி நிரூபன். நம்பிக்கையோடே இருப்போம். நிச்சயம் விடியும்.

    ReplyDelete
  12. \\\ஹ ர ணி said...
    மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன். ///

    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஹரணி

    ReplyDelete
  13. \\\ G.M Balasubramaniam said...
    ஏற்ற தாழ்வு இல்லாத ஒரு சமுக அமைப்புக்குக் குரல் கொடுப்போம்.ஆதிக்கம் எங்கிருக்கிறது என்பதை முதலில் கண்டு கொள்வோம்.உலகமே தூங்குகிறது நாம் மட்டும்தான் விழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது சரியான நிலைப் பாடா.?ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்வோம். புத்தாண்டு வாழ்த்துக்கள். ///

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  14. \\\ மயிலன் said...
    ஐயா..தங்களின் "கூடங்குள கரண்டு ஃபேக்டரி" இடுகையை என்னுடைய மயில் அகவும் நேரம்.. 04 :௦௦.. இல் பகிர்ந்துள்ளேன்..இதுவரை நான்கு அகவல்களில் இரண்டாம் முறையாய் உங்களின் பதிவு..நிறைய இரசிக்கிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  15. \\\ suryajeeva said...
    //வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆதிக்கத்திற்கெதிரான உழைக்கும் மக்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் எதிர்ப் பியக்கங்களில் பங்கேற்போம்.

    உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம்.//

    விடியல் வரும் என்று காத்திராமல்
    விடியலை கொண்டு வருவோம்..

    இன்குலாப் ஜிந்தாபாத் ///

    நிச்சயம் தோழர்

    ReplyDelete
  16. \\\ அப்பு said...
    வாழ்த்துகள்

    கனவு மெய்ப்பட வேண்டும். ///

    மிக்க நன்றி தோழர்.
    நிச்சயம் மெய்ப்படும்

    ReplyDelete
  17. \\\ Uma said...
    வாழ்த்துகள்.
    உலகத்தின் தூக்கத்தை உசுப்பிக் கலைப்போம். ///

    மிக்க நன்றி உமா.

    ReplyDelete
  18. \\\ சீராசை சேதுபாலா said...
    எல்லோரும் வாழ்கின்றோம். நன்றாகவும் வாழ்கின்றோம். ஒன்றாக வாழ்கின்றோமோ? கரலாஞ்சி மராட்டியத்தில்தான் இருக்கின்றது. ஆதிக்கச் சாதியினரின் பழி வாங்குதலுக்கு ஆறு பேர் பலி வாங்கப்பட்டனர். நீதிபதியே கண்ணீர் வடித்திருக்கின்றார். காலம் என்று மாறுமோ? ///

    மிக்க நன்றி தோழர்.
    கயர்லாஞ்சி குறித்துக் கூட நாம் பேசுவதை நிறுத்திவிட்டோம். கயர்லாஞ்சி திண்ணியம் பொன்றவற்றை நாம் தொடர்ந்து பேச வேண்டும் என்றே படுகிறது

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...